தமிழ் (Tamil)

பனிப் பிரதேசம் – Part 8

" நீங்கள் உடனடியாக டெல்லி வரமுடியுமா?" முகேஷ், ஆங்கிலத்தை ஹிந்தியில் ஜாடையில் பேசினார். நான் " ஹ்ம்ம்.. வருகிறேன். எதற்காக?" என்று தமிழ் வாடையில் ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டேன். ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கவேண்டும். நீங்கள் பேசிய ஒரு ஒலிப்பதிவை கேட்டோம். எங்களுக்கு உங்கள் குரல் பிடித்து உள்ளது. ஒரு நாளில் வேலையை முடித்துவிடலாம். நீங்கள் சரி என்றால், எங்கள் அலுவகத்தில் இருந்து டிக்கெட் அனுப்புகிறோம் என்றார். அது நாள் வரை நான் Voice-Over செய்தது கிடையாது. [...]

பனிப் பிரதேசம் – Part 7

எனக்கு பல முறை, சாமியார்களின்  வாழ்க்கை எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசை. படிக்கும் முன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . நான், இன்று கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவன். " சாமி, எனக்கு நல்ல புத்தியை கொடு" என்று வேண்டுபவன் தான் .கடவுளுக்கு பயந்தவன். ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று நம்பியவன். பின், கடவுளின் மீது நம்பிக்கையை எனக்கு கொடுத்தவர், கடவுள் தான். சாமியார்கள் இல்லை. உண்மையான சாதுக்களை, ஹரிதுவாரிலும் ரிஷிகேசிலும் பார்த்தவன். கடவுளை நம்புகிறவன் கோவிலில் [...]

பனிப் பிரதேசம் – Part 6

டாக்டருக்கு, படித்துவிட்டு ஏன் ஆர்டிக்கில் 15 வருடம் வேலை செய்தீர்கள்? என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து சொன்னார் "நான் படித்தது ஒன்று. இப்பொது, செய்துகொண்டு இருப்பது ஒன்று. படித்துவிட்டோம் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அதையே நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. எனக்கும் அப்படித்தான்" என்றார். நான், பிரிட்டனில் மருத்துவம் படித்தேன். அங்கேயே, எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பாக்கெட் நிறைய சம்பளம். வாழ்க்கை, நேர்க் கோட்டில் தான் போய்க்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இல்லை, இல்லை : [...]

பனிப் பிரதேசம் – Part 5

அதற்கு பின், நீச்சல் நண்பரை தினமும் சந்தித்தேன். ஆர்டிக் பற்றி பல மணிநேரங்கள் பேசினோம். நான், அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை மெதுவாக கேட்க ஆரம்பித்தேன். பதில்களும் வர ஆரம்பித்தன. என் கேள்விகள், உரையாடலை துவங்கும். அவர் பதில்கள், புதிய கேள்விகளை துவக்கும்.   கடிகார முள், சுற்றாமல் நின்று வேடிக்கை பார்க்கும். ஆர்டிக் பற்றி பேசுவதால், முள் உறைந்து போய் இருக்கலாம்.   அவர் பேச்சில் அவ்வளவு சுவாரசியம். நேரம் போவது எங்களுக்கு தெரியும். அதனால் தான், 4 [...]

கரீனா கபூரைப் பார்த்தேன்…

நேற்று சினிமா நடிகை கரீனா கபூரைப் பார்த்தேன். என் வீடு அருகே இருக்கும் லோக்கல் கடையில் நேற்று, ஒரு அதிசியம் நடந்தது. இந்தி சினிமா நடிகை, கரீனா கபூரை நான் பார்த்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரே தான்.   எல்லோரும் ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, நடிகையையோ எதிர்பாராத இடத்தில் பார்த்து இருப்போம். அதுவும் கனடாவில், கரீனா கபூரை பார்த்தது எனக்கு ஆச்சிரியம் தான். நானும் முதலில் நம்பவில்லை. அவர் ஏன் இங்கு வந்தார்? அதுவும் [...]

By |2014-02-13T20:53:01-08:00February 13th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |6 Comments

பண்ணையாரும் பத்மினியும் ( 2014 )

மற்றுமொரு விஜய் சேதுபதி கலக்கல் படம். நான் கதையை சொல்ல போவதில்லை.கண்டிப்பாக பாருங்கள். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், படம் முழுக்க ஒரு கார் பேசுகிறது. பேச வைத்து இருக்கிறார் இயக்குனர். படத்தில், மொத்தம் 10 கதா பாத்திரங்கள்தான். உங்களுக்கு நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,அட்டக்கத்தி...போன்ற படங்கள் பிடிக்கும் என்றால்.....பண்ணையாரும் பத்மினியும் படமும் பிடித்தே ஆகவேண்டும். சுமார் தான், பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாரளமாக ஜில்லா, குல்லா என்று எதையாவது பார்த்து சந்தோசமாய் இருங்கள். சில பேருக்கு [...]

ஜில்லா ( 2014)

ஜில்லா.... திரை விமர்சனம். என்னடா, படம் வந்து ஒரு மாசம் கழித்து விமர்சனம்னு யோசிக்கிறீங்களா? சில படங்களை, கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால், பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காது. தள்ளி போகும். எப்படியாவது, பார்த்து விடவேண்டும் என்று நல்ல பிரிண்ட் கிடைக்கும் வரை பொறுத்து இருப்போம். ஜில்லா படத்தின், சூப்பர் பிரிண்ட் கிடைத்தது. டவுன்லோட் செய்ததை கிளிக் செய்ய மனம் வரவில்லை. சில படங்களை, பார்கவே கூடாது என்று நினைப்போம். சூப்பர் பிரிண்ட் கிடைத்தாலும்... கூட பார்த்து [...]

By |2014-02-17T00:49:23-08:00February 8th, 2014|Categories: விமர்சனம்|Tags: , , |0 Comments

பனிப் பிரதேசம் – Part 4

அந்த சனிக் கிழமையும் வந்தது. எனக்கு முன்னமே, ஐஸ்லாந்துகாரர் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தார். இரண்டு நாடுகளையும் பற்றி படித்ததை, என் மூளை மனப்பாடம் சரியாக செய்ததா, என்று என் வாயை விட்டு கேட்க சொன்னேன். வாய், மூளையுடன் கேட்டு சரிபார்த்து எனக்கு முணுமுணுத்து சொன்னது. எல்லாம் சரி, நீரில் குதி என்றது. வாய் சொன்னதை கேட்டு, மூக்கை பொத்தி, கேள்விகளுடன், குளத்தில் குதித்தேன்.   முங்கி, நான் வெளியே வரும் போது நண்பர் நீருக்குள் சென்றார். வெளியே [...]

பனிப் பிரதேசம் – Part 3

வீட்டுக்கு வந்தவுடன், முதல் வேலையாக கூகிள் எர்த் ( Google Earth)  திறந்து கிறீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து எங்கே உள்ளன என்று ஆராய ஆரம்பிதேன். உண்மைதான். Satellite View - on செய்து பார்த்ததில் கிரீன்லாந்து வெண்மையான நிறத்திலும்,ஐஸ்லாந்தின் பெரும் பகுதி பச்சை நிரந்திலும் இருந்தன. இந்த இரண்டு நில பரப்புகளைப் பற்றி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த சனிக்கிழமைதான் ரெய்க்யவிக் நண்பரை மீண்டும் சந்திப்பேன். அதற்குள், எனக்கு அந்த இரண்டு நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். [...]

Go to Top