கென்யாவில் வாழ்ந்து வரும் என் நண்பர் பாலமுரளி.
இந்த பக்கத்தின் சூப்பர் அட்மினும் அவரே.
இவர் ஒரு சிறந்த புகைப்பட நிபுணர் மற்றும் பயண அனுபவ கட்டுரையாளர்.
2014 ல் இந்தியா சென்று வந்த பின்பு அவர் எழுதியதில் இருந்து ….
———————————————-
இந்த முறை இந்தியா சென்று வீட்டை ஒதுங்க வைக்கும் போது, கண்டு எடுத்த பொக்கிஷம்.
மகா கவியின் ஒரிஜினல் புகைப்படம்.
காரைக்குடியில் தாசன் ஸ்டுடியோவில் எடுத்தாக இருக்கலாம் என்று சொல்கிறார்.
பாரதியாரை பற்றி பள்ளிக்கூடத்தில் இரண்டு பக்கம் மட்டுமே திரும்ப திரும்ப படித்து இருப்போம். அவரை பற்றி நேரம் இருக்கும் போது படிக்கலாம்.
அவரை பற்றி சில:
அவர் முதலில் கற்றது இசை. அதனால்தான் சரஸ்வதியின் மீது கொள்ளை பிரியம்.
தன் 16 வயதிற்குள் தாய் தந்தையரை இழந்தார்.
14 வயதில் 7 வயதே உடைய செல்லம்மாளை மணந்தார்.
இவர்க்கு முதலில் engineer ஆக ஆசை இருந்ததாம்.
இவர் அதிகம் படித்தது தமிழ் நாட்டில் அல்ல.
இவருக்கு தமிழைப்போல சமஸ்கிரதம், ஹிந்தி அத்துப்படி.
1901 இல் எட்டயபுர மகாராஜா அரண்மனையில் கவிபாடும் வேலைக்கு interview அட்டெண்ட் செய்து செலக்ட் செய்தார்கள்.
பெண்ணை கடவுளாய் மதித்த மகா புருஷன். சிறுவயதில் தாயை இழந்தவனுக்கு தான் இந்த வலி தெரியும் போல.
இவர் படத்தில் பார்ப்பது போல் மழித்த முகம் கொண்டவர் இல்லை. பெரும்பாலும் தாடியுடன் அலைந்தார். முண்டாசு தலையில் எப்போதுமே இருக்கும்.
இவருக்கு இன்னொரு பெயர் முண்டாசு கவிஞர்.
பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தவர்.
தன் கடைசி 5 வருடங்களில் ஒரு வேலை உணவுகூட இல்லாமல் தண்ணீர் குடித்துவிட்டு கவிதைகள் எழுதினார்.
பாரதி தினமும் பழகிய கோவில் யானையின் பெயர் லாவண்யா. அது அவரை மிதிக்கவில்லை. முட்டி தள்ளியதில் கீழே விழுந்தவர் 3 மாதம் கழித்துதான் இறந்தார்.
இறக்கும் போதே மிக பிரபலம். ஆனால், அவர் சாவிற்கு வந்தது மொத்த நபர்கள் just 14.
இதில் 8 பேருக்கு செத்தவர் யார் என்றே தெயரியாதாம். கடைசி காரியம் செய்ய வந்தவர்கள்.
————————————————————————-
2012 ஆம் ஆண்டு, தாகூர் நூற்றாண்டு விழா வான்கோவரில் பெங்காலிகள் நடத்தினார்கள்.
ரபிந்த்ரநாத் தாகூரின் வீட்டில் வேலை பார்த்த சிறுவன் தற்போது 75 வயதில் அங்கு இருந்தார்.
என்னை பார்த்து நீங்கள் தமிழனா என்றார். ஆம் என்றேன்.
கவிதைகளை பற்றி பேசிய பின்பு என்னிடம் கேட்டார்..
மகா கவி பாரதியின் பேத்தி வான்கோவரில் தான் வசிக்கிறார்.
சந்திக்க விருப்பமா?
எங்களுக்கு உங்களிடம் இருந்து ஒரு ஓவியம் ஒன்று தேவை என்றார்.
இன்று வரை என்னால் சந்திக்க முடியவில்லை.
ஓவியமும் தீட்டவில்லை.
ஸ்ரீதர் ஏழுமலை
nice…அவர் engineering படிக்க ஆசை படவில்லை.. அழுத்தபட்டார்..அதில் வரும் கணக்குகளை பார்த்துதான்…கணக்கு எனக்கு பிணக்கு ஆமணக்கு என்றார்..
நன்றி சார். தகவலை மூலப் பதிவில் திருத்திவிடுகிறேன்
சார் எல்லாம் இல்ல bro சாதாரண பாலாதான்..
Hope someone restores this precious picture.
Yes…I will
இவரைப்பற்றி செய்திகள் படிக்கும் பொழுது எப்பொழுதும் கண்களில் கண்ணீர்தான்.
I tried to trace the image
Wow! அற்புதம் கணேஷ்.
Thanks Uncle
என்ன சொல்ல. அருமை.
தன்சொந்தச் சொந்தங்களாலேயே பைத்தியம் என்று பழிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கொடுமைக்கும் உள்ளானவர்.
இவரின் வாழ்க்கையை பற்றிய தகவல்களை அறியும் பொழுது மனம் கலங்குகிறது. வ.உ.சி. மற்றும் சுப்ரமண்ய சிவா போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியும் பொழுதும் மனம் கனக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி
இவரைப் பற்றி எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேபோல், அவர் எப்படிப்பட்டவர் என்று யாரேனும் கேட்டால், அவர் இப்படித்தான் என்று ஒரு வார்த்தைக்குள் அடைக்க முடியாதவர் . ” மகாகவி, மிகச் சிறந்த மனிதர், திமிர் பிடித்தவர், பொறுப்பற்றவர், தேசபக்தன், பித்தன், சில பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப் பட்டவர், பாலிஷ்டாக பேசத் தெரியாதவர், மனதில் பட்டதைப் பட்டென்று போட்டுடைக்கும் வெகுளி… ..” என்று சொல்லிக் கொண்டே போகலாம்….அவரைப் பறிப் பேசும்போதெல்லாம், எனக்கு ஏற்படும் பிரமிப்பை குறைக்க முடிந்ததேயில்லை………
ஜாதி ப்ரஷ்டம்: மூளை கொஞ்சம் முற்போக்குதானமா,கடல்தாண்டி போன etc etc இருந்த அந்த மனிதர ஒருவழி ஆகிடுவாங்க -பாரதி,ராமனுஜன்(கனிதமேதை),ராமனுஜர் போன்றர்கள்..
Amazing information shared.. Thanq