ஏறி உட்காந்தா, பத்தே மணி நேரத்தில் பஹாமாஸ் போலாம்னு சொல்றவன், நடுவே அஞ்சு, அஞ்சுமா இரண்டு break of journey ல் பத்து மணி நேரம் சும்மா உட்காந்துகிட்டு விட்டத்தை பார்கனும்ங்கிற கஷ்ட்டத்தை சொல்ல மாட்டான்.
ரியல் பஹாமாஸ் வேற ,

பிரேக் of journey ரியலிசம் வேற

பக்கோடா மொறுக் மொறுக்குன்னு சூப்பரா செய்யலாம்னு சொல்றவன், பக்கோடா மாவு புழிஞ்ச கையை கரித்துணியில் துடச்சிட்டுத்தான் அடுப்பு சட்டியில் கரண்டி புடிக்கனும்னு எங்கிற கஷ்ட்டதை சொல்வதில்லை.

ரியல் பக்கோடா வேற 

கரித்துணி எனும் ரியலிசம் வேற
எல்லாரும் கஷ்ட்டப்படாம அம்பானி ஆகமுடியாது என்பது ரியல். கஷட்டபட்டும் சப்பானியாவே காலம் கழிவதுதான் ரியலிசம். 

இரண்டுமே semi solid வாழ்க்கை என்றாலும்

பாயா வேற, பாயாசம் வேற.
இசம் எனும் இதிகாச புத்தகத்தில்

குருஜி.