பிரிட்டன்….தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று தன் குடிமக்களை கேட்டு அதன் ஓட்டு அடிப்படையையில் இன்று பிரிந்து போகிறது.
அதே வியாக்கியானம், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது பாகிஸ்தான் பிரிய வேண்டுமா வேண்டாமா என்று இந்திய குடிமக்களிடம் ஓட்டு கேட்டா கொடுத்தது?
தனக்கு வந்தா ரத்தம்… இன்னொருத்தனுக்கு வந்தா தக்காளி சட்னியா?
இங்கிலாந்து யூரோ வில் இருந்து பிரிய இங்கிலாந்து மக்கள் மட்டுமே ஒட்டு போட முடியும்.. யூரோ மக்கள் அல்ல. அதே போல ஸ்காட்லாந்து இங்கிலாந்தில் இருந்து பிரிய நடந்த ஓட்டெடுப்பில் இங்கிலாந்து ஒட்டு போட முடியாது. பாக்கிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிவதற்கு இந்தியாவின் ஒட்டு தேவை இல்ல. பாக்கிஸ்தான் மக்கள் ஒட்டு மட்டும் போதும்.
பிரிவதற்கு முன்னால் பாகிஸ்தான் என்பதே இல்லை. ஓட்டு இந்திய மக்களிடமே முடியும்.
sariyaga sonnnergal . Pakistan irukkavillaye.
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீதர். அப்போது , ஒட்டு மொத்த இந்தியர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் – அவர்கள் நியாயமானவர்களாக இருந்திருந்தால். ஆனால், அவ்ர்கள் அயோக்கியர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவர்கள் இந்தியாவை விட்டு கிளம்பும்போது இந்தியாவை எப்படிடா அழித்து விட்டு போவது என்பதிலேயேதான் குறியாக இருந்ததால் இந்தக் கேள்வியே அவசியமில்லாமல் போகிறது.
இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் தனி நாடு கேட்டால் ..அதற்கான ஓட்டெடுப்பு அந்த பகுதி மக்களிலடம் மட்டுமே நடத்த வேண்டும். மொத்த இந்திய மக்களிடம் கேட்டால் எப்போதும் வேண்டாம் என்று தான் பதில் வரும். பங்களாதேஷ் பிரிய பாகிஸ்தானிடம் ஒட்டு கேட்பது போல.
Manivannan Gajendran
உங்களிடம் ஒரு கேள்வி.
ஒரு கேக்கை வெட்டும் முன் வெட்ட வேண்டுமா வேண்டாமா என்பதை வெட்டாத முழு கேக்கிடம் கேட்ப்பீர்களா இல்லை …வெட்டிய பின்பு துண்டாக போகும் துண்டு பீசிடம் கேட்ப்பீர்களா???
கேக்கை சாப்பிட போகும் ஆளிடம் தான் கேட்பேன்.. ☺☺
அதான்… எந்த சாப்பிட போடும் ஆளிடம் கேட்ப்பீர்கள்? முழு கேக்கா, துண்டு கேக்கா?
அப்ப மக்கள் பிரதிநிதிக்கு அதிகாரம்..bengal,sindula முஸ்லீம் லீக் நிறைய இடத்தில வெற்றி பெற்றது மதவாதம்..நிறைய மரணம் ..வெறுத்து போய்தான் கொடுத்தாச்சி..இல்லனா இன்னும் இரான்,இராக் மாதிரிதான் இந்தியாவும் இருக்கும்..
கேக்கை விட்டு நாட்டுக்கு திரும்பி வரலாம்.. ஒரு நாடு அதில் உள்ள ஒரு பகுதியை அடிமை நாடு போல நடத்தி.. அதனால் அந்த பகுதி தனி நாடு கேட்டால் .. ஓட்டெடுப்பு எங்கு நடத்தப்பட வேண்டும்.. பாதிக்கபட்ட பகுதியிலா இல்ல அடிமை படுத்தும் நாட்டிடமா?
கனடா – கியூபெக் பொது வாக்கெடுப்பு (referendum) யாரிடம் எடுக்கப்பட்டது என்பதை உதாரணமாகக் கொள்ளலாம். அல்லது பிரச்சினைக்குத் தீர்வு காணும் எண்ணமில்லையெனில் பிரச்சினையை அரசியலாக்கி ஆறப்போட விரும்பினால் – நீங்கள் பிரிந்து செல்ல விரும்புகிறீர்களா எனப் பிரிய விரும்பும் பகுதி மக்களிடமிருந்தும், அந்தச் சிறு பகுதி நம் பெரிய நாட்டில் இருந்து பிரிந்து போவதை விரும்புகிறீர்களா எனப் பெரும் பகுதி மக்களிடமும் கருத்துக் கணிப்பும்/வாக்கெடுப்பும் நடத்தலாம் – இந்த வகையில் பிரச்சினையை என்றுமே முடிக்காமல் வைத்திருக்கலாம்!