1948 ஆம் ஆண்டு மொத்தம் 12 பேருக்குதான் January 30 பிளான் பற்றி தெரியும்.
இந்த முறை, கரம்சந்த் காந்திக்கு வார்னிங் அல்ல.

கடந்த ஐந்து முறையும் வெவ்வேறு தருணங்களில் முயன்றும் அவர்களால் காந்திக்கு வார்னிங் மட்டுமே கொடுக்க முடிந்தது. இது வார்னிங் அல்ல. முடிவு என்று முடிவு செய்தார் நாதுராம்.

காரணம், இதற்கு முன் நடந்த இரண்டில் கொலை முயற்சியில் நேரிடையாக சம்பந்தப்பட்டும் அவரால் காந்தியை கொல்ல முடியவில்லை. இந்த முறை முழு பக்க பலம் கொடுப்பது ஆப்தே. நாதுராமுக்கு நம்பிக்கை இருந்தது.

குண்டுகள் வெடிக்க வைத்து கொல்வதை விட, நெஞ்சில் நேருக்கு நேர் நின்று சுடுவது என்று இவர் ஆப்தேவுடன் முடிவு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

ஆப்தேவும், நதுராமும் சேர்ந்துதான் இத்தாலி துப்பாக்கி வாங்கினார்கள்.

கடந்த 144 நாட்கள் காந்தி அடிகள் செல்வந்தரான பிர்லாவின் மாளிகையில்தான் அவர்களின் உறவினர்களுடன் தங்கி இருக்கிறார் என்று நாதுராமுக்கு தெரியும்.மக்களை சந்திக்கவும், மாலை நேர பிராத்தனை கூடத்துக்கும் வெளியே வருவார் என்பதும் அவருக்கு தெரியும்.

இதோ அந்த நாள் வந்து விட்டது. ஜனவரி 30.

அன்று டெல்லியின் காலை, மாலையில் என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் விழித்தது. நாதுராம் துப்பாக்கி எடுத்து தன் இடுப்பில் மறைத்து வைத்தான்.
கூட்டாளிகள் அவனுக்கு வீர வணக்கம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

விறு விறு என்று பிர்லா மாளிகைக்கு சென்றான்.

காந்தியை பார்க்க அமெரிக்க பத்திரிக்கையாளர் வின்சென்ட் ஷீன் அப்போதுதான் இந்தியா வந்து இருந்தார். BBC யின் டெல்லி நிருபர் Bob Stimson னும் காந்தியை பார்த்து பேட்டி எடுக்க வந்து இருந்தார்.

இருவரும் தேர்ந்து எடுத்த தேதி ஜனவரி 30. அது நாதுராம் காந்திக்கு குறித்த தேதி. இந்த இரு நிருபர்கள் மாலையில் நடக்க இருக்கும் கொலையை ஆங்கிலத்தில் நேரிடி வர்ணனையை எழுதத்தான் வந்து இருக்கிறோம் என்பது தெரியாமலே வந்து, கூட்டத்துடன் சேர்ந்து நின்றார்கள்.

நான்கு மணியில் இருந்தே கூட்டம் காந்தியின் வருகைக்காக காத்து இருந்தது.
பாப், தனது மணி கடிகாரத்தை பார்த்தார்.
வின்சென்ட் ஷீன், என்ன மணி என்று கேட்டார்.

5.10 ….

ஏன் இன்னும் காந்தியை காணவில்லை என்று சொல்லும் போதே ஒரு உருவம் இவர்கள் தள்ளிவிட்டு முன் சென்றது. ஒல்லியான தேகம், வெள்ளை உடை….. தலையின் பின் புறம் மட்டுமே தெரிந்தது…அந்த உருவத்துக்கு காது குத்தப்பட்டு இருந்ததை இருவரும் கவனிக்கவில்லை.

இரண்டு நிமிடங்கள் போனதே தெரியவில்லை.

இப்போது Bob, தன் கை கடிகாரத்தை பார்த்து – மணி 5.12 என்கிறார்.
மெதுவாக சுவர் ஓரம் சென்று சாய்ந்து நின்று காந்தி வரப் போகும் வழியை பார்க்கிறார்கள்.

கூட்டத்தில் இப்போது சல சலப்பு.

“There he is…..”

தூரத்தில் ஒரு உருவம் மெதுவாக நடந்து வருவதை ஷீன் பார்க்கிறார்.
“அதோ பாப்பு, அதோ பாப்பு” என்று கூட்டம் ஆராவாரம் இல்லாமல் முனு முணுக்கிறது.

மாலை வெயில் அவர் தலையில் பட்டு மின்னலோடு ஒளிர்கிறது.
“இது ஒரு கண் கொள்ளாக் காட்சி” என்கிறார் வின்சென்ட் ஷீன்.

ஷீன் வெறும் நிருபர் மட்டும் அல்ல, சிறந்த நாவல் ஆசியரும் கூட.
இன்று நடக்க போவதை Lead, Kindly Light: Gandhi & the Way to Peace என்ற நாவலாக எழுதப் போகிறோம் என்று அவருக்கு அப்போது தெரியுமா என்ன?

ஷீனுக்கு உடம்பு எல்லாம் சிலிர்க்கிறது.
மகாத்மாவை கண்கள் பார்க்கிறது என்பதை மனம் யோசிக்காமல், அவரின் மகிழ்ச்சி சிதையுண்டு நெகிழ்ச்சியாக மாறுகிறது.

கரம்சந்த் காந்தியை இருவர் கைத்தாங்கலாக பிடித்து வர, மெதுவாக நடந்து இவர்களை கடந்து செல்கிறார். கூட்டத்தில் சிலர் அவரை வணங்க, சிலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை ஷீன் பார்க்கிறார்.

இவருக்கும், காந்திக்கும் பது அடி தூரம்தான். இன்னும் சில அடிகள் வைத்து படிகளை ஏறினால் பிராத்தனை கூட்டத்துக்கு சென்று விடுவார்.

அப்போது அந்த மெலிந்த உருவம் காந்தியை நெருங்கி வணங்குவது போல் குனிகிறது.

காந்தியை கைத்தாங்கலாக பிடித்த பெண், பாபுவுக்கு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லும் போதே அந்த உருவம் அவரை தள்ளிவிட்டு, தன் துப்பாக்கியை எடுத்து பாயிண்ட் பிளான்க் ரேஞ்சில் மூன்று முறை காந்தியின் நெஞ்சில் சுடுகிறது.

“பட்” “பட்” “பட்” .

காந்தி சுடுபவரை பார்க்கிறார்.

இவரா ….???

இரண்டு முறை பேச அழைத்தும் பேச வராமல் போன நாதுராமா என்னை கொல்ல வந்தவர்…???

“ஹே ராம்” என்று சொல்லி முன்று குண்டுகளில் சரிந்து விழுகிறார்.

கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு எல்லாம் புரிய சில நிமிடங்கள் ஆனது. ஷீனுக்கு புரிந்துவிட்டது. தன்னை தாண்டி சென்ற மெல்லிய தேகம் காந்தியை வீழ்த்திவிட்டது என்று.

கண்கள் பணிக்க, BBC பாப் எங்கு என்று கூட்டத்தில் தேடுகிறார்.
அப்போதுதான் பார்க்கிறார், காந்தியை சுட்ட நாதுராம் எங்கும் தப்பி ஓடவில்லை.

அங்கேயே நிமிர்ந்து நின்று பார்க்கிறார் நாதுராம்.
நான் காந்தியை கொன்றது சரியே என்று அவன் மனம் மீண்டும் சொல்லியது.

அதே சமயம் பாப் அருகே இருந்த தொலை பேசி நிலையஹில் இருந்து லண்டன் BBC க்கு பேசினார். இன்று அமைதி இறந்துவிட்டது என்றார்.

அதே சமயம் புனேவில் இந்து மகா சபையை சேர்ந்த சிலர் மகிழ்சியுடன் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். சில சமயம் வரலாறு புளிக்கும்.

தொடரும்,
ஸ்ரீதர் ஏழுமலை