1948 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி டெல்லி நகரமே குளிரில் நடுங்கியது.
டெல்லி ரயில் நிலையத்தில் க்குத்தி ராமன்…..
.
ஆறாம் நம்பர் தங்கும் அறையில் மங்கிய விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அறைக்கு வெளியில் அமைதி இருந்தாலும் உள்ளே தீ பற்றிக்கொண்டு இருந்தது.
அறைக்கு உள்ளே சிலர் சிலர் நெருங்கி அமர்ந்துதிட்டம் தீட்டிகொண்டு இருந்தார்கள்.
எல்லோர் மனதிலும் ஓடிய ஒரே சிந்தனை “இந்த முறை தப்பக்கூடாது”.
இதை சத்தமாக பேசியவர் நாராயண் ஆப்தே.
இவர் மும்பையில் அறிவியல் பாடம் நடத்தி வந்த வாத்தியார்.
அவர் வாய் முனுமுனுத்தது.
அவரை மற்றவர்கள் சத்தமாக பேச வேண்டாம் சமாதானம் செய்தார்கள்.
இருந்தாலும் ஆப்தே முணுமுணுத்தார் ..
“சே..ஐந்து முறையும் தப்பிவிட்டார் …. இந்த முறை தப்பவே கூடாது”.
அந்த அறையில் படுத்துக்கொண்டே இதை ஆமோதித்து தலையை மட்டும் ஆட்டினான் ஒருவர். அவர் பெயர் ராமச்சந்திரன். அவர் மீசை இல்லாமல் பார்க்க பெண் போல இருப்பார்.
காரணம் அவருக்கு மூக்கு குத்தி, அவரை பெண் போல வளர்த்தார்கள் அவர்கள் பெற்றோர்கள்.
தெருவில் விளையாடும் போது அவரை பசங்க கிண்டல் செய்தாலும் தன் தாய் தந்தைக்காக பொறுமையாக போவார் ராமச்சந்திரன்.
ராமச்சந்திரனின் தந்தை ஒரு தபால்காரர்.
தாய் கோதாவரிக்கு பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளும் இறந்துவிட்டன.
ஆனால் பிறந்த ஒரு பெண் குழந்தை மட்டும் இறக்கவில்லை.
அதனால் ராமச்சந்திரன் பிறந்தவுடன் அவன் ஆணாக இருந்தால் இறந்துவிடுவான் என்ற பயத்தில் அவனுக்கு மூக்கு குத்தி பெண் போல பாவாடை அணிந்து வளர்த்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு பின் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்த பின்பு ராமச்சந்திரனினின் மூக்குத்தி கழட்டப்பட்டது.
மூக்குத்தி என்றால் மராத்தியில் நாத் என்று சொல்லுவார்கள்.
ராமசந்திரனுக்கு மூக்கு குத்தி வளர்த்ததால், ராமச்சந்திரனை எல்லோரும் செல்லமாக நாதுராம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
அதே செல்லப்பெயரை கொண்டுத்தான் ஆம்தே அவரை அழைத்தான் ” என்ன யோசிக்கிறாய் நாதுராம்?”
மூக்குத்தி அணிந்த ஓட்டை மூக்குடன் நாதுராம் தன் மூக்கை சொரிந்து கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான்.
அவர் கையில் ஒரு Beretta – 9 mm ரக இத்தாலிய துப்பாக்கி பளபளத்தது.
இத்தாலிய – எதியோப்பிய போரில் இந்த பெர்ராட்டா துப்பாக்கிதான் அபிசீனியாவில் பேசியது என்று நாதுராமுக்கு தெரியும்.
இதை அம்தேவும், நாதுராமும் புனேவில் வாங்கினார்கள்.
இது அனைத்தும் நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கும் தெரியும்.
திகம்பர் பட்கே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா என்று ஏகப்பட்ட கூட்டாளிகள் மூக்குத்தி ராமனுக்கு உண்டு.
எத்தைனையோ முறை பேசி விவாதித்தது வெறுத்து போய் கட்டிலில் அமர்ந்து இருந்தான் .
ஹ்ம்ம்…எல்லோரும் தூங்குங்கள்.
நாளை எப்படியும் விடியத்தான் போகிறது என்றான்.
புரண்டு புரண்டு படுத்து தூங்கிப்போனான்.
அவன் மூக்குத்தி துவாரம் வழியே வந்த அனல் காற்று டெல்லி குளிரையும் வெப்பமாக்கியது.
மூக்குத்தி ராமன் துப்பாக்கி தோட்டாக்கள் ஒன்றை ஒன்று கட்டி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தன.
இந்த விளையாட்டை யார் இந்த தோட்டாக்களுக்கு கற்றுகொடுத்தது?
அவன் தூங்கிய போதும் அவன் துப்பாக்கி மட்டும் முழித்துக்கொண்டு இருந்தது.
தொடரும்.
ஸ்ரீதர் ஏழுமலை