நரியின் பான்டா சுவை
நான் எந்த வான்கோவர் தமிழ் கடைக்கு போனாலும் என் பையன் குட்டி போட்ட பூனை போல் என் பின்னாடியே வருவான். நேத்து கூட ஜெயா Brothers கடைக்கு போனேன். Brothers னு போட்ட கடையில் ஏனோ ஒரே ஒரு பிரதர்தான் இருந்தார். Fanta அல்லது Thumps Up எங்கே இருக்கு சார் என்று கேட்டேன். அடுத்த அறையில் உள்ள fridge ஒன்றை காண்பித்தார். ஒரு பழைய recycled பாட்டிலில் பான்டா என்னை பார்த்து சிரித்தது. அவன் பங்காளி Thumbsup [...]