பனிப் பிரதேசம் – Part 5
அதற்கு பின், நீச்சல் நண்பரை தினமும் சந்தித்தேன். ஆர்டிக் பற்றி பல மணிநேரங்கள் பேசினோம். நான், அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை மெதுவாக கேட்க ஆரம்பித்தேன். பதில்களும் வர ஆரம்பித்தன. என் கேள்விகள், உரையாடலை துவங்கும். அவர் பதில்கள், புதிய கேள்விகளை துவக்கும். கடிகார முள், சுற்றாமல் நின்று வேடிக்கை பார்க்கும். ஆர்டிக் பற்றி பேசுவதால், முள் உறைந்து போய் இருக்கலாம். அவர் பேச்சில் அவ்வளவு சுவாரசியம். நேரம் போவது எங்களுக்கு தெரியும். அதனால் தான், 4 [...]