விசாரணை: விமர்சனம்
தான் வாழ்ந்து சாதித்தைவிட, தான் இறந்த பின்பும் தன் சிந்தனைகளை உயிருள்ள விதைகள் மூலம் சாதனைகளாக உலகில் பரப்புபவனே உண்மையான கலைஞன். யதார்த்த கலைஞனும், செல்லுல்லாய்ட் சிந்தனை சிற்பியுமான பாலு மகேந்திரா நம்மிடையே ஒரு 'ஆடுகளத்தில்' விதைத்துவிட்டு சென்ற விதை ஒன்று வெற்றியுடன் வெற்றிமாறானை, தான்தான் பாலுவுன் அந்த சிந்தனை விதை என்று 'விசாரணை' இன்றி உலக அரங்கில் சொல்ல வைத்த படம்தான் விசாரணை. இரானிய படமான அஸ்கர் பாராடியின் "The separation" மற்றும் 1969 ல் [...]