பனிப் பிரதேசம்

பனிப் பிரதேசம் – மூத்த குடி அழிந்தது (Part 17)

ஆறு மாதம் கழித்து, மீண்டும் பனிப் பிரதேசம் தொடர் வருவதால் அதன் தொடர்ச்சி விடாமல் இருக்கவும், புதிதாய் படிப்பவர்களுக்கு உபயோகப்படும் வகையிலும் இது ஒரு இணைப்பு வடிவ பாகம். கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் நடந்த உரையாடல் முடிந்ததில் இருந்து தொடங்குகிறேன். _________________________________________ கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் பேசிய பின்பு என் அறைக்கு வந்தேன். தூக்கம், பசி இரண்டும் என்னை வாட்டியது . நான் தங்கி இருந்த அந்த ஹோட்டலின் [...]

பனிப் பிரதேசம் – Part 6

டாக்டருக்கு, படித்துவிட்டு ஏன் ஆர்டிக்கில் 15 வருடம் வேலை செய்தீர்கள்? என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து சொன்னார் "நான் படித்தது ஒன்று. இப்பொது, செய்துகொண்டு இருப்பது ஒன்று. படித்துவிட்டோம் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அதையே நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. எனக்கும் அப்படித்தான்" என்றார். நான், பிரிட்டனில் மருத்துவம் படித்தேன். அங்கேயே, எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பாக்கெட் நிறைய சம்பளம். வாழ்க்கை, நேர்க் கோட்டில் தான் போய்க்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இல்லை, இல்லை : [...]

பனிப் பிரதேசம் – Part 4

அந்த சனிக் கிழமையும் வந்தது. எனக்கு முன்னமே, ஐஸ்லாந்துகாரர் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தார். இரண்டு நாடுகளையும் பற்றி படித்ததை, என் மூளை மனப்பாடம் சரியாக செய்ததா, என்று என் வாயை விட்டு கேட்க சொன்னேன். வாய், மூளையுடன் கேட்டு சரிபார்த்து எனக்கு முணுமுணுத்து சொன்னது. எல்லாம் சரி, நீரில் குதி என்றது. வாய் சொன்னதை கேட்டு, மூக்கை பொத்தி, கேள்விகளுடன், குளத்தில் குதித்தேன்.   முங்கி, நான் வெளியே வரும் போது நண்பர் நீருக்குள் சென்றார். வெளியே [...]

பனிப் பிரதேசம் – Part 3

வீட்டுக்கு வந்தவுடன், முதல் வேலையாக கூகிள் எர்த் ( Google Earth)  திறந்து கிறீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து எங்கே உள்ளன என்று ஆராய ஆரம்பிதேன். உண்மைதான். Satellite View - on செய்து பார்த்ததில் கிரீன்லாந்து வெண்மையான நிறத்திலும்,ஐஸ்லாந்தின் பெரும் பகுதி பச்சை நிரந்திலும் இருந்தன. இந்த இரண்டு நில பரப்புகளைப் பற்றி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த சனிக்கிழமைதான் ரெய்க்யவிக் நண்பரை மீண்டும் சந்திப்பேன். அதற்குள், எனக்கு அந்த இரண்டு நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். [...]

பனிப் பிரதேசம் – Part 2

மாஸ்டர், நான் இங்க உறுப்பினர். நீச்சல் எனக்கு வரல, அதான் இங்க ..... நான் சொல்வது, மாஸ்டர் காதுக்கு விழவே இல்லை. அவர், மும்முரமாக தொலைகாட்சியை பார்த்து கொண்டு இருந்தார். நான், மீண்டும் மாஸ்டர் என்று அழைக்க.... செம, அடி...இப்பிடித்தான் அடிக்கணும், சூப்பர். வாங்க, வாங்க, இந்த Shot- டை பாருங்க, எப்படி அடிச்சி ஆடறான் டோனி என்றார். நானும், சூப்பர் சூப்பர் என்று Tread Mill மேல் ஏறி நின்று கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். சுமார், 30 [...]

பனிப் பிரதேசம் – Part 1

ஒரு நாள் நானும், மயிலும் நீரில் நீந்திக் கொண்டு இருந்தோம். சுமார் ஏழு வருடங்களுக்கு முன், ஒரு நாள் நானும் என் மகனும் கோவையில் நீச்சல் குளத்தில் நீச்சல் பழக முடிவெடுத்தோம். என் மகனின் செல்ல பெயர் மயிலு. அவனை, என் மனைவி அப்படித்தான் அழைப்பார். அது ஒரு தனியார் நீச்சல் குளம். நாங்கள் நீந்தி பழக வேண்டிய இடம், குளத்தின் கீழ் பாதி. நான்கு அடி ஆழம். என்னால் நின்று கொண்டே நீந்த முடியும். மயிலு [...]

இது ஒரு பனிப் பிரதேசம் – தொடக்கம்

இது ஒரு பனிப் பிரதேசம் ஒரு பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட உத்தேசித்து உள்ளது. தமிழில் பயண தொடராக www .ஸ்ரீதர்.காம் -ல் வெளியிடப்படும். இணையத்தில் வெளிவரும் முதல் பிரதி முற்றிலும் இலவசமே. முடிந்தவரை தமிழில் எழுதும் போது , உங்கள் கை பிடித்து ஆர்க்டிக் அழைத்து செல்லமுடியும் என்று நினைக்கிறேன். எனக்கு அவ்வளவாக தமிழ் எழுத வராது. முடித்தவரை, பிழை இல்லாமல் எழுத விழைகிறேன். சொல் மற்றும் பொருள் குற்றங்களை எடுத்து சொல்லுங்கள். கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். [...]

Go to Top