சின்ன பையனும் – பெரிய மாடும்
பொங்கல் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது மாட்டுப் பொங்கல். என் சொந்த கிராமம் நாங்கள் வசித்த ஊரில் இருந்து 15 km தொலைவில் இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் அப்போது விவசாயம் அமோகம். மூன்று போகமும் நெற் பயிர்கள் காற்றில் வளைந்தாடும். பச்சை மஞ்சள் என கூப்பாடு போடும். நீர் வற்றா கிணறு. அதன் பெயர் " ஆச்சாரி கிணறு" - (அந்த நிலத்தை ஒரு ஆசாரியிடம் இருந்து வாங்கியதால் கிணறுக்கு ஜாதியின் பெயர்). ஜாதியின் பெயர் வைத்ததால் என்னோவோ [...]