Tales of Africa:
ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு நிறம் உண்டு. ஆப்பிரிக்கா என்றால் " மஞ்சள் மயக்கம்". சவானா சதுப்பு நிலத்தில், வெயிலில் காய்ந்து திடீர் என மழையில் நினைந்து பூமத்திய ரேகையால் தினமும் இரண்டுவேலை மஞ்சளாக வகிடு எடுக்கப்படும் நிலமே ஆப்ரிக்கா. காலை சுமார் 4.30 மணிக்கு எழுந்து புகைப்படம் எடுக்க இருட்டில் சென்ற போது மூன்று உருவங்கள் ஆடாமல்அசையாமல் சூரியன் வரும் திசையில் அமர்ந்து இருந்தன. Low ஷட்டர் ஸ்பீடில் ஒரு லாங் exposure. மூன்றில் ஒன்று தாய், ஒன்று தந்தை இன்னொன்று குழந்தை என்று இருக்கக் கூடும். மஞ்சள் மயக்கத்தில் கிறங்கிய அந்தப் பறவைகள், ஆடாமல் அசையாமல் சூரிய வெளிச்சம் வந்த உடனே பறந்துசென்றுவிட்டன. இருட்டில் எடுத்த புகைப்படம் என்பதால், ஏன் இவை ஒன்றை ஒன்று பார்த்தபடி அவ்வளவு நேரம் உட்காந்து இருந்தனஎன்று புரியவில்லை. ஆனால் அந்த மூன்று பறவைகளும் மெலிதாக ஹம் செய்து கொண்டு இருந்தன. இதை " dawn chorus" என்பார்கள். பறவைகள் ஏன் காலையில் மட்டும் பாடுகின்றன? தான் இருக்கும் இடத்தை மற்ற பறவைகளுக்கும், இன்று வானிலை எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே தன்குட்டிகளுக்கு சொல்லும் வானிலை அறிக்கைதான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த மஞ்சள் காலையில் அந்தத் தாய் பறவையும், தந்தை பறவையும் தான் குட்டிக்கு என்ன சேதி சொல்லிப் பாடின? Interpreting Bird Language is an art form.