பனிப் பிரதேசம்

பனிப் பிரதேசம் – மூத்த குடி அழிந்தது (Part 17)

ஆறு மாதம் கழித்து, மீண்டும் பனிப் பிரதேசம் தொடர் வருவதால் அதன் தொடர்ச்சி விடாமல் இருக்கவும், புதிதாய் படிப்பவர்களுக்கு உபயோகப்படும் வகையிலும் இது ஒரு இணைப்பு வடிவ பாகம். கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் நடந்த உரையாடல் முடிந்ததில் இருந்து தொடங்குகிறேன். _________________________________________ கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் பேசிய பின்பு என் அறைக்கு வந்தேன். தூக்கம், பசி இரண்டும் என்னை வாட்டியது . நான் தங்கி இருந்த அந்த ஹோட்டலின் [...]

பனிப் பிரதேசம் – Part 16

உலகம் சிறியது எஸ்கிமோக்கள் என்னிடம் காட்டிய முத்திரை, இமாலயத்தில் ரிஷிகள் தினம் செய்யும் முத்திரைகளில் ஒன்று. இதைத்தான் ரஜினி தன் Baba படத்தில் உபயோகித்து இருப்பார். “முத்திரை (முத்ரா)” என்பது ஒரு குறியீடு. புத்தர் அமர்ந்து இருக்கும் சிலையில் கையில் ஒரு முத்திரையை காட்டி கொண்டு இருக்கும் போஸ் இருக்கும். அது ஒரு வித முத்திரை தான். இதுபோல், புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய பல சிலைகளில் காணலாம். வடக்கே, பனி மலைகளில் வாழ்ந்த மனிதர்களின் [...]

பனிப் பிரதேசம் – Part 15

மகா, மொட்டு, கப்பு: நான் ஹோட்டல் லாபியில் நடந்து வரும்போது, அங்கே மூன்று பேர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முதுகு மட்டும், என் கண்களுக்கு தெரிந்தது. மெதுவாக சென்று அவர்கள் முன்பு நின்றவுடன்தான், அவர்களின் முகத்தை முழுவதுமாக என்னால் பார்க்க முடிந்தது. அகண்ட முகம், சப்பை மூக்கு, ஏக்கப் பார்வை, கரை படிந்த பற்கள், சடை முடி, கிழிந்த ஜீன்ஸ் பாண்ட்ஸ், கையில் சாராயம், கப்பு நாற்றம். இவர்கள் குளிப்பது கிடையாது என்பது, எனக்கு உடனே மூக்கு [...]

பனிப் பிரதேசம் – Part 14

யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா? இவர்களிடம் என்ன பேசினேன்? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வண்டி, மெதுவாக பெஸ்ட் வெஸ்டர்ன் ( Best Western Gold Rush Inn) ஹோட்டல் முன்பு நின்றது. இங்கு இருந்துதான், என் முதல் கட்ட பயணம் தொடங்க வேண்டும். இதுதான் வெள்ளைக் குதிரையில் உள்ள ஓரே உருப்படியான விடுதி. இந்த தங்கும் விடுதி, 1898 ஆம் ஆண்டு யூகான் தங்க வேட்டையின் போது கட்டப்பட்ட ஹோட்டல். ரொம்ப பழைய ஹோட்டல். எதையோ பறிகொடுத்த சோகம் அதன் [...]

பனிப் பிரதேசம் – Part 13

இருவது வயது ஜப்பானிய சப்பைக் கிளி, வண்டியை அசால்டாக பனியில் ஒட்டியது. வண்டி, வளைந்து நெளிந்து, கிளியின் சொல்படி பனியில் வழுக்கிக் கொண்டே போனது.   பனி ரோடில் வண்டி ஓட்டுவது, பொண்டாடியிடம் வாதாடுவதற்கு சமம். கொஞ்சம் ஓவரா, அமித்தி பிடிச்சுட்டு, பின்னாடி நீங்களே நினைச்சாலும் நிறுத்த முடியாது. அது பாட்டுக்கு ஒரு சைடா போயிக்கிட்டே இருக்கும். நிறுத்தனும்னு நினைச்சாலும் நிக்காது. இப்பிடி நடக்கும் போது நீங்க செய்ய வேண்டியது, பேசாம Steering Wheel - ளை, [...]

பனிப் பிரதேசம் – பார்ட் 12

நான் ஆர்க்டிக் கிளம்பும் நேரம், ராகு காலம். நல்லதையும் செய்வார் ராகு என்று படித்த துண்டு. ஏறமுடியாதவனை கண்டானாம், ஏணி பந்தயம் வச்சானாம் என்று இடக்கு பண்ற கிரகம் எது தெரியுமா? அவர் தான் மிஸ்டர் ராகு. என்னதான் யோகக்காரகன் என்று பெயரை வைத்திருந்தாலும், சமயம் கிடைச்சா சந்தடி சாக்கில் சிந்து பாடுவதில் ராகு கில்லாடி. இது ஜாதகத்த்தில். அதற்கு மேல், தனிப்பட்ட முறையில் தினசரி ஒன்னரை மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதற்கு பெயர் [...]

பனிப் பிரதேசம் – Part 11

இந்த நான்கு வரிகளைத்தான் திரும்ப திரும்ப, பல ஆர்க்டிக் குறிப்புகளில் 4 மாதங்களாக படித்தேன். பனி, பனி...எங்கும் பனி.. இது ஒரு வெண்மையான வெறுமையான கடற்கரை. அழகையும், பிரமிப்பையும் வெகுமதியாய் கொடுக்கும் ஒரு தொலை தூர இலக்கு. நீங்கள் இங்கே பார்க்கப்போவது அனுபவிக்க நம்பமுடியாத நிலப்பரப்பு. இது தனிமையான, அற்புதமான மனித இருப்பை காணாத, காலடி சுவடு இல்லாமல் வரையப்பட்ட வண்ணமுடைய இயற்கை தேசம். இங்கே கருப்பு இரவு வானம், அமைதியாக பகலை மூழ்கடித்து, மகத்தான வெறுமையை [...]

பனிப் பிரதேசம் – Part 10

2013, டிசம்பர் மாதம், தனியாக ஆர்டிக் செல்ல முடிவெடுத்து விட்டேன். என் மனைவியிடமும், மகனிடமும் நான் ஆர்டிக் செல்ல இருப்பதாக கூறினேன். வருத்தப்பட்டார்கள்... கூட வரமுடியவில்லை என்று. இது ஒன்றும் கொடைக்கானல் இன்ப சுற்றுலா அல்ல...குடும்பத்துடன் புளி சாதம் கட்டிக்கொண்டு செல்ல...இது குடும்பத்துடன் போக வேண்டிய இடம் அல்ல. ஆர்டிக் சென்டர் வரை வேண்டுமானால் குடுபத்துடன் மே, ஜூன் மாதங்களில் சென்று வரலாம். ஆர்டிக் சென்டர் என்பது ஆர்டிக் செல்லும் வழியில் இருக்கும் பாதி தூர மைல் [...]

பனிப் பிரதேசம் – Part 9

கனடாவில் காலம் நனைந்து ஓடியது. கனேடிய மண்ணில் நான் கால் வைத்த இடம் "வான்கூவர்". கரைந்து போக வேண்டிய மூன்று வருடம் தினம் தினம் மழையில் நினைந்துதான் ஓடியது.... இங்கு வருடத்தில், சராசரியாக 165 நாட்கள் மழை பெய்யும். மீதம் உள்ள நாட்களில், மழை பெய்வதுபோல் இருக்கும். சூரியன் தெரியும் நாட்களில் அலுவலகத்தில்" WOW, What a sunny day !!!" என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு கொண்டாடுவார்கள்" இந்த ஊருக்கு, சூரியன் ஒரு கடன்காரன். [...]

Go to Top