தமிழ் (Tamil)

சங்கே முழங்கு: 

No one wants to die. இதை Steve Jobs வாழும் போதே சொன்னார். சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இறக்க விழைவது இல்லை. வாழும் போது சின்ன சின்ன மேடர்களுக்கு எல்லாம் எவ்வளவு கவலைப்படுகிறோம்? எத்தனையோ இரவுகளைத் தூங்காமல் கழிக்கின்றோம். மொபைல் காணாமல் போனாலோ, பாக்ஸிங் டே டீல் மிஸ் ஆனாலோ ...சின்னது முதல் பெரிய கவலைகளை நமக்கு ஏராளம். எல்லாக் கவலைகளையும் தினம் சுமக்கும் நாம் இறக்கும் பொது "சில நொடிகளில்" எல்லாக் [...]

Babel – Movie review 

கொஞ்சம் பழய படம்தான். 2006 released படம். உங்களுக்கு non linear பிட்டு பிட்டாக தொங்கி இணைக்கும் கதைகள் பிடிக்கும் என்றால் மட்டுமே பார்க்கவும்.  மொத்தம் 4 கதைகள். இவை அனைத்தும், இடம், கலாச்சாரம், குழந்தைகள், அரசியல் ஒட்டி இனைகின்றன. மொராக்கோவில் ஒரு பாலைவன கிராமம், அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ என்ற நான்கு இடத்தில் தனித்தனியே நடக்கும் கதைகளை நாம்தான் படம் பார்க்கும் போது இணைக்க வேண்டும். ஜப்பான் நாட்டில் தொழில் அதிபர் மொரோக்காவிற்கு hunting  சுற்றுலா [...]

பூத உடலும், பூமியும்

அல்பர்ட்டாவில் டைனோசர் பார்க் ( Dinosaur Provincial Park ) இருக்கிறது. பலர் சென்று இருக்கலாம். இது அந்த இடத்தை ஒட்டிய ஒரு தகவல். இன்று ஒரு அறிவியல் கட்டுரை படித்துக்கொண்டு இருக்கும் போது எழுத வேண்டும் என்று தோன்றியது .. ஓகே ...back to தி மேட்டர். அந்த இடம் Drumheller. சுமார் ஊட்டி மலை height இருக்கும். 2000 + அடி Above MSL. கடல் மட்டத்துக்கு மேல். டைனோசார்கள் இந்த உலகில் அழிந்தவுடன்தான் [...]

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 7

என் சைக்கிள் Research லேப் நோக்கிச் சென்றது. கார் திரும்பி லோக்மான்யா வீதிக்குச் சென்று நின்றது.   தர்மேஷ் காரை நிறுத்திவிட்டு, "ஜஸ்ட் ஒரு ஐந்தே நிமிடம்.. மதன் பாயை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்... ஆல்ரெடி லேட் ....என்னைக் கடித்து துப்பிவிடுவார்"..என்று சொல்லிவிட்டு பதில் கூட எதிர்ப்பார்க்காமல் காரை விட்டு இறங்கி நடந்து சென்றார். கையில் ஒரு நியூஸ் பேப்பரில் மடித்த ஒரு bundle இருந்தது. பூர்ணிமா அகர்வால் எதுவேமே சொல்லவில்லை...கண்களை மூடி, அப்படியே அயற்சியில் கண்களை மூடினார். [...]

By |2017-10-16T16:42:57-07:00October 16th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|15 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 6

அன்று நான் டீ குடித்த கடையின் பெயர் "அர்ச்சனா பேக்கிரி". பேக்கிரி இருக்கும் இடம் RS புரம். என் கல்லூரியில் இருந்து சரியாக 2.7 கிலோ மீட்டர்ஸ்.   அது ஒரு மலையாளி நடத்தும் டீக்கடை. கடையின் பெயர் அர்சனாவா, ஆராதனாவா இல்லை அரோமாவா என்று ஞாபகம் இல்லை. ஆனால், ஏதோ ஒரு அ..   விடியற் காலை என்பதால் ஓனர் கடையில் இல்லை. வேலைக்கும், பாலாக்காட்டில் இருந்து பனியின் போட்ட ஒரு பையன்தான் சேட்டன் செட் [...]

By |2017-10-14T00:52:49-07:00October 14th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil), Updates|39 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 5

ஆண் என்பவன் வேட்டை ஆடவும், பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமே என்று நம்பி பிறந்து இறப்பவர்கள் இந்த உலகில் ஏராளம். ஆதாம், ஆப்பிளைக் கொடுத்தது முதல், ஆப்பிள் போன் உபயோகிக்கும் இந்தக் காலம் வரை ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதை மனிதனே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. சுமார், 6 மில்லியன் ஆண்டுகள் ஆன பின்பும், நம் மூளையில் வெறும் 35% மட்டுமே உபயோகிக்கிறோம். மீதி 65% மூளை, நாம் தூங்கும் போது [...]

By |2017-10-12T23:55:32-07:00October 12th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|22 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 4

உலகம் பிம்பங்களை நம்பும் உலகம். அதற்காக எல்லாமே குத்து மதிப்பாக இருக்கும் என்று அர்த்தமில்லை. உலகத்தில் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் இயங்குகிறது. எப்படி என்கிறீர்களா ? சொல்கிறேன் ....   நான் வரைந்த முதல் படம் "பரிசுத்த ஆவி" என்றும், முதல் முகம் ஜூஹி சாவ்லாவின் முகம் என்றும் உங்களுக்கு அறிமுகம் செய்தேன். எப்படி ஒருவனால் முதல் முகமே இவ்வளவு perfection னுடன் ஓவியமாக வரையமுடியும் என்று ஒரு கணமாவது யோசித்தீர்களா? பெரும்பாலும், இருக்காது. அப்படியே [...]

By |2017-10-11T20:41:11-07:00October 11th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|27 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 3

வரைவது இன்று நேற்று அல்ல.. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. குரங்கு மனிதனாக மாறிய போது அது முதலில் பழகியது பேசவோ எழுதவோ அல்ல .. பாறைகளில் ..ஓவியம் வரைய. ஓவியமே எழுத்துக்களின் தாய். அதுவே பேச்சின் தந்தை. மொழி எனும் குழந்தை ஓவியத்தால் பிறந்தது. நீங்கள் ஒரு கம்ப்ளீட் மனிதனாக மாறவேண்டும் என்றால் உங்களுக்கு வரையத் தெரிந்து இருக்க வேண்டும். இது அபத்தமாகத் தெரியலாம். ஒருவரிடம், உங்களால் பேசியோ, எழுதியோ ஒன்றைப் புரிய வைக்க முடியவில்லை என்றால் நீங்கள் அதை வரைந்துசொல்லலாம். எழுத்து, பேச்சை விட விஷுவல் வரைபடத்தின் பலமே அலாதி. Broader Picture of an Issue வை புரிந்து கொள்ள அதன் பிம்பம் முக்கியம். ஒன்றின் பிம்பத்தை அறிய அதன் Broader Picture நமக்குத் தெரிய வேண்டும். முதன் முதலில் ஒரு முகத்தை வரையும் போதுதான் அந்த Broader Picture ஐ எப்படிப் புரிந்து கொள்ளாவது என்று புரிந்தது. முதலில் நான் வரைய ஆசைப்பட்டது அப்போது எல்லாம் சினிமா நடிகையின் நல்ல புகைப்படம் வேண்டும் என்றால் நீங்க வாங்க வேண்டிய புத்தகம் சரோஜாதேவி இல்லை...ஸ்டார் டஸ்ட். ஸ்டார் Dust ஒரு வட இந்திய சினிமா இதழ். அதன் பேப்பர் மற்றும் பிரிண்ட் Qulaity க்கு நிகரான இதழ் தமிழில் அப்போதுகிடையாது. அதற்கும் பெட்டர் என்றால் டெபோனர். ரயில்வே நிலையத்தில் அந்தப் புத்தகத்தை கிளிப் செய்து வைத்து இருப்பார்கள். மெடிக்கல் காலேஜில் ஹியூமன் அனாடமி படிக்க ஆசைப்பட்டு முடியாத போனவர்களுக்கான பைபிள் அது. நான் வரைந்த முதல் முதுகு படம் அந்தப் பைபிளில் இருந்து காப்பி எடுத்து வரைந்தது. அந்த முதுகு ஓவியத்துக்கு நான் வைத்த பெயர் "பரிசுத்த ஆவி. சொல்கிறேன் .. கலை இரண்டு வகைப்படும். 1. எது தேவை இல்லையோ அதை நீக்கி தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளவது முதல் வகை. 2. எது தேவையோ அதை மட்டும் வைத்துவிட்டு மீதியை நீக்குவது இரண்டாம் வகை. ஒரு கல்லில் தேவை இல்லாததை நீக்கினால் சிலை. ஒரு வெள்ளைத் தாளில் தேவையானதை வரைந்தால் ஓவியம். ஓவியம் வரையத் தெரிந்தால் சிற்பக்கலை எளிது. தூங்கப் பழகிவிட்டால் போர்த்திக் கொள்ள பழகிவிடலாம். முதல் படத்தை debonair ல் இருந்து வரைந்ததால் அடுத்து ஸ்டார் டஸ்ட் எடுக்கும் துணிவை அந்தப் பைபிள் தந்தது. வெள்ளைத் தாளில் கருப்பு தடவி, முதுகை மட்டும் வெள்ளையாக வரைந்தால் இது முதல் category ஓவியம். அடுத்து நான் வரைய முனைந்தது ..இரண்டாவது category ஓவியம். ஸ்டார் டஸ்ட்னின் சென்டர் spread ல் அந்த வாரம் ஜூஹி சாவ்லா இருந்தார். அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்து முதல் முகத்தை வரைய ஆரம்பித்தேன். ஆரம்பமே பிரச்சனை ..எனக்கு எங்கு ஓவியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலேயே குழப்பம். ஓவியங்கள்தோ, முறுகலாகத் தோசை போன்றது. அதன் கடைசி வடிவம் முதலில் மாவை எங்கு ஊற்றி, எப்படி சூத்தினீர்கள் என்பதில் ஆரம்பித்து அதை எங்குநிறுத்தினீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும். ஜூஹி சாவ்லாவை பல முறை சூடான தோசைக் கல்லில் ஊற்றி ஊற்றி சுத்தினேன். பல காகிதங்கள் கரைந்து நாயர் கடை டீயில் கரைந்தன. சுமார் ஒரு மாதம் முயன்று முயன்று கடைசியில் ஓவியம் வந்தது. ஆனால் நான் வரைந்தது சரியா இல்லை இன்னும் சரி செய்யவேண்டுமா என்று தெரியவில்லை. இரவு வரைந்துவிட்டு இத்தோடு முடிந்தது என்று படுத்துவிட்டு காலையில் பார்த்தால் பல தவறுகள் தெரியும். அதைச் சரி செய்ய மீண்டும் அதில் கையை வைத்துக் கெடுத்துவிடுவேன். எனக்கு ஓவியத்தை எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆனால், அதை எங்கு எப்போது முடிக்க வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை. மீண்டும் பல காகிதங்கள் நாயர் டீக்கடையில் கரைந்து கடைசியில் அந்தச் சூட்சமம் தெரிந்தது. ஒரு ஓவியத்தின் கண்கள் எப்போது நம்மோடு பேச ஆரம்பிக்கிறதோ அப்போது வரைவதை நிறுத்தி விடலாம். இதைத் தெரிந்து கொள்ள எனக்கு இரண்டு மாதம் ஆகியது. எத்தனையோ காகிதங்கள் கிழிக்கப்பட்டன. காகிதத்தில் முக்கி முக்கி டீ குடித்ததாதல் தலையில் முதன் முதலில் ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்த்தது. [...]

By |2017-10-10T15:15:08-07:00October 10th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|34 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 2 

நாம் டீசெண்டா வாழ உடனே கத்துக்கலாம். காரணம், இந்த process எல்லாமே நம்ம கையில் இருக்கு. ஆனா தெரு பொறுக்கியா மாற மொத்தம் இரண்டு வேண்டும். 1. நாம் பொறுக்கியா மாற இன்னொருத்தர் உதவணும். 2. நாம பொறுக்க ஒரு தெரு வேண்டும். இது ரெண்டும் யாருக்கு அமையுதோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உடனே, தெரு பொறுக்கினா கெட்ட வார்த்தைன்னு நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம ஒரு Un Disclosed டெஸ்டினேஷன் தேடி, தினம் ஒரே தெருவில் திரும்பத்திரும்ப அதைத் தேடுபவனே தெருப் பொறுக்கி. இப்படி தெருவா தெருவா தேடி, அதை ஒரு மரத்துக்கு கீழ் கண்டுபிடித்தா அவன் ஞானி. கிரேக்க, தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் எல்லாமே ஒரு காலத்தில் தெரு பொறுக்கியாஇருந்தவங்கதான். இவங்க ஏதென்ஸ் நகர வீதிகளில் பொறுக்காத நாள் இல்லை. இப்படிப் பொறுக்கி பொறுக்கி கடைசியில் மரத்துக்கு கீழ் வந்து உட்காந்து மத்தவங்களுக்கு பொறுக்க கத்துக்ககொடுத்தாங்க. புத்தர் நேரடியா மரத்துக்கு கீழ் உடகாந்தவர். சிலர் தெரு, ஊரு எல்லாம் சுத்தியை பிறகுதான் வந்து மரத்துக்கு கீழஉட்க்காருவாங்க. சுவான்சாங் போன்றவர்கள் உலக மகா பொறுக்கி. சரி, சேட்டு பொண்ணுக்கும் சுவான்சாங்க்கும் என்ன சம்பந்தம்னு கேட்குறீங்களா? இருக்கு ... அப்ப, நான் மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டு இருந்த நேரம். கேப்பாமாரியா இருந்த நான் தெரு பொறுக்கியா மாறிக்கொண்டு இருந்த transformation காலம். Research லைப் ஏனோ பிடிக்கவில்லை. நாலு சுவத்துக்குள்ள எண்ணத்த வாழ்க்கை முழுவதும் தேடுவது என்ற அலுப்பு வரத் தொடங்கிய காலம். டெய்லி லேப்க்கு போக வேண்டியது. எதையாவது நோண்ட வேண்டியது. எப்படியும் இரண்டு வருஷத்தில் மாஸ்டர் டிகிரி முடிந்து விடும். ஆல்ரெடி 6 வருஷம் காலி. மாஸ்டர்ஸ், முடிச்சா வாழ்க்கை முடியாது அதுக்கு மேல மூணு நாலு வருஷம் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சிலதாடி வைத்த Ph.D சீனியர்ஸ் சொறிந்து கொண்டே பயம் காட்டினார்கள். ஒரு நாள் சண்டே Ghee Rice வித் சிக்கன் சாப்பிட்டுவிட்டு....நாம் ஏன் இந்த Research field விட்டு மாறி வேற ஏதாவது உடனேவேலைக் கிடைக்கும் ஒரு field க்கு மாற கூடாதுனு யோசித்தேன். எதோ ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை .., பல நாள் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்னுபார்க்கும் போதுதான் அதுக்கு உண்டான பலன் தெரிந்தது. தாடி முளைத்து இருந்தது. ஆஹா.. இளம் வயதில் முதலில் வளரும் தாடியை செறிவது பிறக்கும் கன்றுக்குட்டியைத் தாய் பசு நாக்கால் வருடிவருடிக்கொடுப்பது போன்ற சுகமானது. சரி, விடுங்கள் ..அதை அணுபவித்தவன்னுக்குத்தான் தெரியும். தாடி வளர்ந்தாச்சு ..Perfect. ஒரு தெருப் பொறுக்கியா மாற முதல் தகுதி அவனுக்குத் தாடி வேண்டும். இதை பிளாட்டோவே சொல்லி இருக்கிறார்... நாம் பார்க்கும் உலகம் வேறு, மற்றவர்களால் அறியப்படும் உலகம் வேறு. நாம் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை உலகிற்குக் காட்ட எல்லாத் தெரு பொறுக்கிகளும் முதலில் வளர்த்தது தாடிதான். தாடி வளர்ந்துவிட்டது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். எனக்காக இல்லை என்றாலும் இந்தத் தாடிக்காவது செய்ய வேண்டும். அதனால், ஏன் நாம் வரையக் கூடாது என்று யோசித்தேன். ஏன் வரைய வேண்டும் என்று யோசித்தேன் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வயது வரை நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு படத்தையும் வரைந்தது கிடையாது. சிறு வயது முதல், இந்த வயது வரை எந்த drawing மாஸ்டர்ரிடம் கூட ஓவியம் படித்தது இல்லை. ஸ்கூலில் Drwaing கிளாசில் 6 வந்து வரைந்ததோடு சரி. ஏன் எந்த ஓவியப் போட்டியிலும் சரி, வீட்டிலும் சரி ஓவியம் வரைந்தது இல்லை. படத்தில், என் பின்னால் இருக்கும் ஓவியம் நான் தாடி வளர்ந்து மூன்று மாதம் கழித்து வரைந்தது. எதோ ஒரு நாள் போய் டவுன்ஹாலில் பேப்பர் போர்ட் வாங்கி வந்து ஒரே படத்தை 25 முறைக்கு மேல் வரைந்து வரைந்துகிழித்து பின் ஓரளவு சரியாக வந்தவுடன் அதை ஒரு frame போட்டு மாட்டி வைத்து எடுத்த படம் இது. நீங்க கேட்கலாம்..முதல் படமே இப்படி ஒரு செக்சி போஸ்ஸா என்று. தப்பு என்னிடம் இல்லை. நான் அந்த பொண்ணோட முகம் வரையத்தான் ஆசைப்பட்டேன். எனக்கு வரைய தெரியல. அந்தம்மா முதுகு ஈஸியா இருந்தது. அதான் அதை வரைந்தேன். இந்தப் படத்தை வரைவதற்குள் நான் பட்ட பாடு இருக்கே..அத்தோட நிறுத்தி இருக்கலாம். [...]

By |2017-10-12T13:42:44-07:00October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments
Go to Top