தமிழ் (Tamil)

இயேசு வழி காட்டினார்!

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து  வந்து கொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்ன சிக்னல். ஆள் நடமாட்டம் இல்லை, இரவு 8 மணி. மழை தூரிக்கொண்டு இருந்தது... நடை பாதை பொத்தானை அழுத்திவிட்டு காத்துக் கொண்டு இருந்தேன். சிக்னலில் கோளாறு போல. 5 நிமிடம் வரை பச்சை விளக்கு அணையவில்லை. சிக்னலின் அருகே  ஒரு கிருஸ்துவ தேவாலயம். வண்டிகள் நிக்காமல் ஒரு புறம் மட்டும் ஓடிக்கொண்டு இருந்தது. புரியவில்லை. தீடீர் என்று வெள்ளை சொக்காய் போட்ட இரண்டு [...]

By |2013-12-25T02:05:12-08:00December 25th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

கிருஷ் பர்த்டே.

19 December!! இன்று  கிருஷ் பர்த்டே. நான் கொண்டாடும் ஒரே தினம் ! 2000 வருடம், பெங்களூர் இஸ்கான் கிருஷ்ணன் கோவிலின் உள்ளேயே ஒரு அமெரிக்க கம்பெனி " lord Krishna' என்னும் அனிமேஷன் படம் எடுக்க விழைந்தது. கிருஷ்ண லீலைகள் தான் படம். ஒரு எட்டு பேர் செலக்ட் செய்து கிருஷ்ணரை படத்துக்காக, பல முகங்களை 3d யில் வடிவமைக்க சொன்னது. அதில் நானும் ஒருவன். மாய்ந்து மாய்ந்து வரைந்தோம். அமெரிக்க கம்பெனி தனியாக ஒரு இடம் [...]

By |2013-12-20T14:05:45-08:00December 19th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

உடல் வலிமையை விட மன சாந்தியே முக்கியம்.

இந்த குட்டையில் கல் எறிந்தவர்கள் ...... போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் இரண்டு உடற் பயிற்சியை சொல்லிக் கொடுத்தார். இதை செய்யும் போது நான் மூன்றாவது பயிற்சியை கண்டுப் பிடித்தேன். 1. இது கடினம். குப்புற படுத்து காலையும் கையையும் அகட்டி, தரையில் இருந்து 10 இன்ச் அளவில் உடம்பை சமமாக அப்படியே ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும். மரண வலி. இதை வெறும் வயிறில் சாப்பிடாமல் செய்ய வேண்டுமாம். இதை செய்தால் கைகள் வலு [...]

இது ஒரு மழைக்காலம் !

சுட்டெரித்த சூரியனால் வாடிய மேகம் தன் கரு நீல இதழ்களை மூடி "ஓ"- என்று கண்ணீர் விட்டு அழுகின்றன ! இதை கண்டு வருந்திய மேபிள் மரங்களும் ..தன் அரஞ்சு இலை உதிர்த்து விதவை கோலமாய் ரோட்டில் வறண்டு நின்று ஒப்பாரி வைக்கின்றன ! இதுவரை பசும் தோல் போர்த்தி நடித்த மலைகளும் வெள்ளிப் பனி மூடி தூர நின்று பல் இளிக்கின்றன ! சுகமாய் சுற்றி திரிந்த சீகுல் பறவைகளும் அவசரமாய் இனம் பெருக்க ஊளையிட்டு [...]

By |2013-11-30T17:28:08-08:00October 13th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

கனடா, என்னை வாடா என்றது…….

கனடா, என்னை வாடா என்றது....... 2010 ஆண்டு.. அன்று ருபாய் நோட்டு சிரிப்பை தரவில்லை நிம்மதி தரும் எனும் நம்பிக்கை கூட இல்லை அப்போது, கனடா, என்னை வாடா என்றது. சிவப்பு வண்ண மேபிள் கொடி பட்டொளி வீசி பறந்தது Flight ஏறி பறந்தேன்..உற்றார் உறவுகளை பிரிந்தேன்.   இன்றோடு, மூன்று வருடம் ஆகிறது. மூன்று ஆண்டுகள் போனதே தெரியவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு மணி துளியும் எனக்கு தெரிந்தே நகர்ந்தது. ஆமை போல். [...]

By |2013-11-24T13:39:21-08:00October 6th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

வெளிநாட்டு வாழ்க்கை:

வெளிநாட்டு வாழ்க்கை: புதிய வீட்டுக்கு இன்டர்நெட் connection செய்ய வந்தவர் இந்த வீட்டில் wiring சரில்லை என்றார். நான் சொன்னேன், பழைய வீட்டில் நன்றாக இருந்தது என்றேன். அவர் சொன்னார் -அது பில்டரை பொருத்தது. சரி எங்கு இதற்கு முன் இருந்தாய் என்றார். இடத்தை சொன்னேன். Hey buddy, நானும் அங்கு தான் குடியிருக்கிறேன் என்றார். என் வீட்டு நம்பரை சொன்னேன். அவர் வீட்டு நம்பரை சொன்னார். அவர் சொன்ன நம்பர் என் எதிர் வீடு. எதிர் [...]

By |2013-12-14T19:34:52-08:00July 14th, 2013|Categories: தமிழ் (Tamil)|0 Comments

Cows Around – வேட்டை காரன் புதூர் – மாடு

என் பையனுக்கு ஆடு மாடுனா பிடிக்கும். . . 20 டாலருக்கு Craiglist -ல மாடு பார்த்தேன் . வாங்கி கொடு என்றான். எங்கடா கட்டி வைப்பே என்றேன்? Garage -ல கட்டி போட்டு, கொஞ்சம் புல்லு போட்டா போதும் என்கிறான் சின்ன வயதில் வேட்டை காரன் புதூரில், ஆடு மாடுகளுடன் இருந்த நாட்கள் என்றும் அழியாதவை. இந்த வெள்ளை காரனும் இதை தான் பாடுறான். லோக்கல் FM ஸ்டைலில் இந்த பாட்டு ..என் பையனுக்கு [...]

நேரம் (2013 )

ஒரு Budget படம் - ஒரு Budget காமடி - ஒரு பாடல் - One Line ஸ்டோரி நேரம் போனதே தெரியவில்லை . Dry Sense Comedy. இப்போதெல்லாம் ஒரு படம் இயக்க வேண்டும் என்றால் கதை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒரு கான்சப்ட்டும், நல்ல தொழில்நுட்ப கலைஞர்களும், சினிமா மீது ஆர்வமும், நகைச்சுவை உணர்வும் இருந்தால் போதும். சாதாரண ஒரு விஷயத்தையே கொஞ்சம் எதிர்ப்பார்ப்போடு கூடிய திரைக்கதையோடு சொன்னால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இப்படமும் ஒரு [...]

By |2013-11-23T20:58:54-08:00June 15th, 2013|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|0 Comments

இயற்கையை ரசிக்காதவன் – முழு கடவுளை பார்க்காதவன்..

வெள்ளி கிழமை காலை எழுந்தேன் பாடரில் ஒரு மணி நேரம் தவித்தேன் கிழக்கு நோக்கி காரை விரட்டினேன் .. போகும் வழியில் உடுப்பியில் பாவ் பாஜி சுவைத்தேன் Idaho மலைகளை கடந்தேன்..மலைத்தேன் செந்நிற பள்ளத்தாக்கை அடைந்தேன் அன்று முழு நிலவு ..இரவு ஒன்பது மணி இருட்டும் பள்ளத்தாக்கில் வெண் நிற அருவி கொட்டுவதை உச்சி முனையில் நின்று ரசித்தேன், நிழற் படம் எடுத்தேன் டெலஸ்கோப் பொருத்தி நட்சத்திரம் ஒளிர்வதை கண்டேன் மீண்டும் தென் கிழக்கே ஊர்தியை விரட்டினேன் [...]

By |2013-11-23T22:50:41-08:00June 12th, 2013|Categories: தமிழ் (Tamil)|Tags: |0 Comments
Go to Top