சூப்பர் பௌல் -அப்படீனா என்ன சேகரு?
ஏதோ அமெரிக்காவுல சூப்பர் பௌல்லாமே? அப்படீனா என்ன சேகரு? அதுவா, நம்ம ஊரு மாரியம்மன் கோயில்ல பெரிய சட்டியில கூழ் ஊத்துவாங்கல்ல, அது மாதரி அமெரிக்காவுல, ஊரு ஊரா சேந்து பெரிய ஸ்டேடியத்துல கூடி, வருசத்துக்கு ஒரு முறை கூழ் ஊத்துவாங்க. என்ன ஒரு வித்தியாசம். குடிக்க, ஒரு சின்ன கிண்ணம் கொடுப்பாங்க. கிண்ணத்தை, பூசாரி தரையில் வச்சதும், அதை புடுங்க அடி தடி நடக்கும். தள்ளு முள்ளு நடக்கும். அடிபடும். ரொம்ப, அடி படாம இருக்க கவச [...]