விமர்சனம்

பாகுபலி – ( www.sridar.com)

பாகுபலி - (www.sridar.com) எல்லோரும் படத்தை பற்றி பல வகையில் எழுதி விட்டதால் அதையே நான் திரும்ப எழுதப் போவதில்லை. இது என் மாற்றுப் பார்வை இந்திய தீபகற்பத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. பேலியோலிதிக் கற்காலம் தொட்டு வெள்ளைக்காரன் ஆண்ட கலோனியல் காலம் வரை அது பரந்து விரிந்தது. சுமார் 75,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் மனித தடம் தன் கலாச்சாரத்தைப் பதித்துவிட்டது. நாம், இன்று இழந்து நிற்கும் கலாசாரம் பன்னெடுங்காலமாக நம் மக்கள் வாழ்வியலை [...]

கபாலி விமர்சனம் – பார்ட் 2

கபாலியின் ஹீரோ 25 வருடமா சிறையில் இருக்கும் ஒரு கேங் லீடர். டான்னு அவங்களே சொல்லிக்கிறாங்க. படத்தின் ஒன் லைன் இதுதான். படம் ஆரம்பிக்கும் போது கபாலிக்கு குடும்பம் இல்லை. படம் முடியும் போது கபாலியே இல்லை. அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என்பதை அவர் சிறையில் படிக்கும் " சந்தா மாமா " எனும் புத்தகத்தை வைத்து படிப்பது போல கதை ஆரம்பிக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியில் வரும் போது எடுக்கும் இரண்டு புல் [...]

By |2016-07-23T15:10:19-07:00July 23rd, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|12 Comments

Kabali – கபாலி : விமர்சனம் – பார்ட் 1

படத்தை பார்க்கலாம். மோசம் எல்லாம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் படத்தை சுமார் பத்து முறை பார்த்தால்தான் கதையே புரியும். அப்படி ஒரு complex ஆன சிக்கல் மிகுந்த வெயிட்டான கதை மற்றும் கதைக்களம். இந்த ஒரு படத்துக்குள் 42 கதைகள் ஒளித்து வைத்து ரஞ்சித் கலக்கிவிட்டார். அதகளம். ரஞ்சித் மாதிரியே நானும் கதையை சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும். அதனால் வேறு பார்வையில் ... முதலில் வில்லன்: டோனி லீ ...டோனி லினு ஓரே ஒரு [...]

By |2016-07-22T01:29:23-07:00July 22nd, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|29 Comments

ரஸ்டம்: ஒரு கள்ளகாதல் கொலை….

Rustom: பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ....  1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மேனக்‌ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்து வந்தார். மனைவி ஒரு பிரிடீஷ். பெயர் சில்வியா. அழகி. குழந்தைகளும் இருந்தன.  நானாவதியின் 15 வருட நண்பன் பிரேம் அஹுஜா. நாநாவதி, தேசிய கடமைக்காக [...]

விசாரணை: விமர்சனம்

தான் வாழ்ந்து சாதித்தைவிட, தான் இறந்த பின்பும் தன் சிந்தனைகளை உயிருள்ள விதைகள் மூலம் சாதனைகளாக உலகில் பரப்புபவனே உண்மையான கலைஞன். யதார்த்த கலைஞனும், செல்லுல்லாய்ட் சிந்தனை சிற்பியுமான பாலு மகேந்திரா நம்மிடையே ஒரு 'ஆடுகளத்தில்' விதைத்துவிட்டு சென்ற விதை ஒன்று வெற்றியுடன் வெற்றிமாறானை, தான்தான் பாலுவுன் அந்த சிந்தனை விதை என்று 'விசாரணை' இன்றி உலக அரங்கில் சொல்ல வைத்த படம்தான் விசாரணை. இரானிய படமான அஸ்கர் பாராடியின் "The separation" மற்றும் 1969 ல் [...]

By |2016-10-12T21:31:05-07:00February 11th, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |19 Comments

தாரை தப்பட்டை: விமர்சனம்

பாலா, இளயராஜா எனும் இரண்டு பேரை மறந்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் இது ஒரு மிக மொக்கையான, சுமார் படம் எனும் லிஸ்ட்டில் கூட வர கஷ்டபடும் ஒரு தட்டையான தமிழ் படம். தாரை என்பது ஒரு நீளமான 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் இசைக் கருவி. தப்பட்டை என்பது தோல் வாத்தியம். இந்த இரண்டையும் வாசிக்கும் ஒரு விளிம்பு நிலை மனிதர்களின் படம் என்று எண்ணத்தோடு பார்த்தால் இது ஒரு பெரிய [...]

By |2016-01-25T22:50:25-08:00January 25th, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|15 Comments

நானும் ரௌடிதான்; ( 2015) – விமர்சனம்

படம் அருமை. கண்டிப்பா இது 'ஆஹா அஹா' வகை. மிஸ் செய்யாமல் பார்க்கவும். படத்தின் வெற்றி, படத்தை லாஜிக்கோடு நகர்த்தி ..காதல், காமெடி, சரவெடினு சரியா அதில் மிக்ஸ் செய்து கடைசியில் நீதியின் தர்மத்தில் முடித்தது. விஜய் சேதுபதி, சில தோல்விகளுக்கு பின் டைரக்டர் கூடவே இருந்து "இதுக்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா" போல ஒவ்வொரு காட்சியின் ஸ்கிரிப்ட்டையும் செதுக்கி எடுத்த படம் என்று நினைக்கிறேன். பவர்புள் ஸ்கிரிப்ட்னு சொல்லமுடியாது. இதை சரியா ஸ்க்ரீனில் டெலிவரி செய்து அசத்தி [...]

By |2015-10-24T08:51:34-07:00October 24th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|9 Comments

Martian – (2015) – விமர்சனம்

ரொம்ப எதிர்பார்த்து படம் பார்க்க போனால் செவ்வாய் கிரகம் நம்ம அபுதாபி, துபாய் குறுக்கு சந்தில் உள்ள விவேகானதர் தெரு பாலைவனம் போல்தான் உள்ளது. Disappointed. மார்ஸ் நல்லா இருந்தா, கனடாவில் இருந்து immigration அப்பளை செய்யலாம் என்று நினைத்த என் பையன் கனவில் சிவப்பு மண் விழுந்துவிட்டது. படத்தின் கதை இதுதான். கும்பலாக மார்ஸ் சென்ற ஒரு நாசா குரூப், அங்கு அடிக்கும் திடீர் புயலால் அவர்களில் ஒருவரை ஏதோ No. 335 பஸ் மிஸ் [...]

By |2016-10-12T21:31:05-07:00October 12th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |4 Comments

கிருமி ( 2015) விமர்சனம்:

நமக்கு ஒருத்தன் துரோகம் செய்தால், அவனை பொது இடத்தில் பார்த்து சிரித்து ஒதுங்கி போவதே நாம் அவனை வென்றதுக்கு சமம். இதுதான் படத்தின் ஒன் லைன். இது ஒரு அட்டகாசமான action thriller படம். கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம். பெரிய கதாநாயகர்கள் எல்லாம் படத்தில் கிடையாது. கதை, வசனம், இசை, பாடல்கள் மற்றும் காட்சி அமைப்பு என்று அறிமுக இயக்குனர் அனுசரண் கலக்கி எடுத்து உள்ளார். கதாநாயகன் ஒரு வெட்டி. அவரை சுற்றி [...]

By |2015-10-09T22:06:32-07:00October 9th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|28 Comments
Go to Top