பயணம்

Tales of Africa: தண்ணி மாஸ்டர் 

ஆப்ரிக்காவின் தண்ணி மாஸ்டர் யார் என்றால் இவர் தான். ஆங்கிலத்தில் பெயர் வாட்டர் பக். இவர் இருக்கும் இடத்தில் தண்ணி இருக்கும், அப்படி இல்லை என்றால் தண்ணி இருக்கும் இடத்தில் இவர் இருப்பார். பரிணாமத்தில் மாட்டுக்கும், மானுக்கும் இடைப்பட்ட ஒரு பொசிஷன் தலைவருக்கு. இவருக்குச் சிங்கம், சீட்டா என்று பல எதிரிகள் இருப்பினும் கத்துகிட்ட ஒரு தனி தன்மை இருப்பதால் தப்பித்துக் கொள்ளும். இவர், தண்ணி மாஸ்டர் மட்டும் இல்லை. மிகவும் நாற்றம் பிடித்த தண்ணி மாஸ்டர். [...]

கடவுளின் டிசைன்

இது ஆப்ரிக்காவில் எடுத்த படம். தூரத்தில் இருந்து பார்த்தபோது ஒரு குட்டி யானை இறந்துவிட்டது என்று எண்ணினோம்... அதனால்தான் கூட்டமாக, இறந்த யானையை சுற்றி மற்ற யானைகள் நின்று கொண்டு இருகின்றன என்று நினைத்து ஓட்டுனரை அருகே சென்று பார்க்கலாம் என்று சொன்னேன். Is it is dead ? என்றேன்... அதற்கு அவர் இல்லை இல்லை ...என்று சிரித்தார். குட்டி தம்பி தூங்கிக்கொண்டு இருக்கிறாராம்... யானைக்கூட்டம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது [...]

By |2015-05-24T07:17:59-07:00May 24th, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|6 Comments

ஒரு மரத்தில் இரு பறவைகள்

இந்த புகை படத்தை ஆப்ரிக்காவில் எடுத்தேன். மேல ஒரு கிளையில் பிணம் தின்னி கழுகு (வல்லூறு) ஒன்றும் , அதன் கீழே இன்னொரு கிளையில் சிட்டுக்குருவி ஒன்றும் எதிர் எதிர் திசைகளில் பார்த்துக்கொண்டு இருந்தன. சுமார் பத்து நிமிடங்கள் கடந்தும் இரண்டும் இரைக்காக காத்து இருந்தன. எது முதலில் பறந்து போகும் என்று காத்து இருந்தேன். நிசப்தமான மாலை நேரம். என் புகைப்பட கருவியை மெதுவாக சப்தமில்லாமல் எடுத்து பொருத்தினேன். பதினைந்து நிமிடங்கள் கடந்து " கிளிக்" [...]

By |2016-10-12T21:31:12-07:00March 17th, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

சுப முகூர்த்தம்:

ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க சில சமயம் Location scouting செய்யவேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்க Washington ஸ்டேட்டில் இருக்கும் Anacortes எனும் குட்டி தீவுக்கு சென்றேன். Anacortes தீவில் ஒரு மாலை பொழுதில் கார் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலை எங்கு எல்லாம் சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று location scout செய்ய குடும்பத்துடன் காரில் சென்றேன். சுற்றி சுற்றி ஒரு மணிநேரம் ரிமோட் locations எல்லாம் சுற்றி விட்டு, அந்தி [...]

By |2016-10-12T21:31:12-07:00February 2nd, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: , , |35 Comments

புன்னிலம் ( African Savannah) – படம் சொல்லும் கதை

காலை மணி ஐந்து. தாமஸ், என்னை எழுப்பினார். இவர்தான் என் Safari வண்டியின் ஓட்டுனர். மனைவியும் மகனும் அயர்ச்சியில் தூங்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இருட்டை பிளந்துகொண்டு அவருடன் கிளம்பினேன். வயர்லஸ் கருவிகளில் மனிதர்கள் மிருகங்களை போல் பேசுவார்கள். தாமஸிடம் சொன்னேன் " எனக்கு இன்று காலை மிருகங்களை பார்க்க விருப்பமில்லை" ஒரு டிபிகல் ஆபிரிக்க புன்னிலம் ( African Savannah) மரத்தோடு புகைப்படம் எடுக்கவேண்டும். நிற்காமல் செல் என்று கட்டளையிட்டு லென்சோடு சாய்ந்துவிட்டேன். சுமார் அரைமணிநேரம் [...]

Li River Bamboo Rafting – லீ நதியோரம் …

xingping - சீனா சென்றால் பார்க்க வேண்டிய ஒரு இடம். இது ஒரு hidden photography paradise . இது சென்ட்ரல் சீனாவில் லீ நதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இங்கே ஓடும் நதியில் மீன் பிடித்து வாழும் மீனவ குடும்பங்கள் வசிக்கும் கிராமம் தான் சின்க்பிங். சின்க்பிங் செல்பவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டியது அந்தி சாயும் பொழுதில், மூங்கில் படகில் லீ நதியில் லாந்தர் விளக்கின் ஒளியில் பயணிப்பதுதான். சுமார் இரண்டு மணி நேரம் வரை [...]

By |2016-10-12T21:31:19-07:00December 6th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

ஆர்பரிக்கும் ஆப்ரிக்கா !!!

ஏய் மானிடா...!!! ஆர்பரிக்கும் ஆப்ரிக்கா என்னை வா, வா என்றது வளர்ந்த கரு, பிறந்த மடியை தேடிச் சென்றது பூவுலகில் பிறந்த பயனை, புண்ணிய பூமியில் தேடி அலைந்தது இது, மனித குலத்தின் தாய்நாடு நம் தாத்தன், பாட்டன் வாழ்ந்த காடு அதோ அங்கே, வெள்ளை மல்லிகையை தலையில் வைத்து கிளிமஞ்சாரோ சிரிக்கிறாள் அவள் அழகை ரசிக்க, மந்தி மந்தியாய் யானைகள் மஞ்சள் வெயில் மயக்கத்தில் அன்னநடை நடக்கின்றன ஜூலையில் பிறந்த யானைக் குட்டிகள், தாயின் கால்களுக்கு இடையே பரமபதம் ஆடுகின்றன கொம்பேறி காண்டாமிருகம் கொட்டாவி விடுகின்றன [...]

By |2014-08-02T10:46:27-07:00August 4th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|14 Comments

லாஸ் வேகாஸ்…

  இரவை புகைப் படம் எடுக்க, முப்பதாம் மாடி ஜன்னலை திறந்தேன்   ஏப்ரல் குளிர் உடலை வருடியது மகிழ்ச்சிக்கு வாசம் உண்டு என்று நாசி சொன்னது   பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு இரவு ராணி வேகாஸ் தான் சரியான பொண்டாட்டி   இரவில் கண் சிமிட்டும் இவளைப் பார்த்து, சுடுகாட்டில் செத்த பிணமும் குத்தாட்டம் போடுகிறது   டாலரில் ஆசையை எழுதி, ஸ்லாட் மெசினிக்கு காதல் கடிதம் எழுதுவார்கள்   எல்லார் காதல் கடிதத்தையும் வாங்கிவிட்டு, [...]

By |2016-10-12T21:31:46-07:00April 29th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|0 Comments

இது ஒரு பனிப் பிரதேசம் – தொடக்கம்

இது ஒரு பனிப் பிரதேசம் ஒரு பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட உத்தேசித்து உள்ளது. தமிழில் பயண தொடராக www .ஸ்ரீதர்.காம் -ல் வெளியிடப்படும். இணையத்தில் வெளிவரும் முதல் பிரதி முற்றிலும் இலவசமே. முடிந்தவரை தமிழில் எழுதும் போது , உங்கள் கை பிடித்து ஆர்க்டிக் அழைத்து செல்லமுடியும் என்று நினைக்கிறேன். எனக்கு அவ்வளவாக தமிழ் எழுத வராது. முடித்தவரை, பிழை இல்லாமல் எழுத விழைகிறேன். சொல் மற்றும் பொருள் குற்றங்களை எடுத்து சொல்லுங்கள். கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். [...]

Go to Top