அந்த நாள்

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 2 

நாம் டீசெண்டா வாழ உடனே கத்துக்கலாம். காரணம், இந்த process எல்லாமே நம்ம கையில் இருக்கு. ஆனா தெரு பொறுக்கியா மாற மொத்தம் இரண்டு வேண்டும். 1. நாம் பொறுக்கியா மாற இன்னொருத்தர் உதவணும். 2. நாம பொறுக்க ஒரு தெரு வேண்டும். இது ரெண்டும் யாருக்கு அமையுதோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உடனே, தெரு பொறுக்கினா கெட்ட வார்த்தைன்னு நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம ஒரு Un Disclosed டெஸ்டினேஷன் தேடி, தினம் ஒரே தெருவில் திரும்பத்திரும்ப அதைத் தேடுபவனே தெருப் பொறுக்கி. இப்படி தெருவா தெருவா தேடி, அதை ஒரு மரத்துக்கு கீழ் கண்டுபிடித்தா அவன் ஞானி. கிரேக்க, தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் எல்லாமே ஒரு காலத்தில் தெரு பொறுக்கியாஇருந்தவங்கதான். இவங்க ஏதென்ஸ் நகர வீதிகளில் பொறுக்காத நாள் இல்லை. இப்படிப் பொறுக்கி பொறுக்கி கடைசியில் மரத்துக்கு கீழ் வந்து உட்காந்து மத்தவங்களுக்கு பொறுக்க கத்துக்ககொடுத்தாங்க. புத்தர் நேரடியா மரத்துக்கு கீழ் உடகாந்தவர். சிலர் தெரு, ஊரு எல்லாம் சுத்தியை பிறகுதான் வந்து மரத்துக்கு கீழஉட்க்காருவாங்க. சுவான்சாங் போன்றவர்கள் உலக மகா பொறுக்கி. சரி, சேட்டு பொண்ணுக்கும் சுவான்சாங்க்கும் என்ன சம்பந்தம்னு கேட்குறீங்களா? இருக்கு ... அப்ப, நான் மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டு இருந்த நேரம். கேப்பாமாரியா இருந்த நான் தெரு பொறுக்கியா மாறிக்கொண்டு இருந்த transformation காலம். Research லைப் ஏனோ பிடிக்கவில்லை. நாலு சுவத்துக்குள்ள எண்ணத்த வாழ்க்கை முழுவதும் தேடுவது என்ற அலுப்பு வரத் தொடங்கிய காலம். டெய்லி லேப்க்கு போக வேண்டியது. எதையாவது நோண்ட வேண்டியது. எப்படியும் இரண்டு வருஷத்தில் மாஸ்டர் டிகிரி முடிந்து விடும். ஆல்ரெடி 6 வருஷம் காலி. மாஸ்டர்ஸ், முடிச்சா வாழ்க்கை முடியாது அதுக்கு மேல மூணு நாலு வருஷம் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சிலதாடி வைத்த Ph.D சீனியர்ஸ் சொறிந்து கொண்டே பயம் காட்டினார்கள். ஒரு நாள் சண்டே Ghee Rice வித் சிக்கன் சாப்பிட்டுவிட்டு....நாம் ஏன் இந்த Research field விட்டு மாறி வேற ஏதாவது உடனேவேலைக் கிடைக்கும் ஒரு field க்கு மாற கூடாதுனு யோசித்தேன். எதோ ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை .., பல நாள் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்னுபார்க்கும் போதுதான் அதுக்கு உண்டான பலன் தெரிந்தது. தாடி முளைத்து இருந்தது. ஆஹா.. இளம் வயதில் முதலில் வளரும் தாடியை செறிவது பிறக்கும் கன்றுக்குட்டியைத் தாய் பசு நாக்கால் வருடிவருடிக்கொடுப்பது போன்ற சுகமானது. சரி, விடுங்கள் ..அதை அணுபவித்தவன்னுக்குத்தான் தெரியும். தாடி வளர்ந்தாச்சு ..Perfect. ஒரு தெருப் பொறுக்கியா மாற முதல் தகுதி அவனுக்குத் தாடி வேண்டும். இதை பிளாட்டோவே சொல்லி இருக்கிறார்... நாம் பார்க்கும் உலகம் வேறு, மற்றவர்களால் அறியப்படும் உலகம் வேறு. நாம் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை உலகிற்குக் காட்ட எல்லாத் தெரு பொறுக்கிகளும் முதலில் வளர்த்தது தாடிதான். தாடி வளர்ந்துவிட்டது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். எனக்காக இல்லை என்றாலும் இந்தத் தாடிக்காவது செய்ய வேண்டும். அதனால், ஏன் நாம் வரையக் கூடாது என்று யோசித்தேன். ஏன் வரைய வேண்டும் என்று யோசித்தேன் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வயது வரை நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு படத்தையும் வரைந்தது கிடையாது. சிறு வயது முதல், இந்த வயது வரை எந்த drawing மாஸ்டர்ரிடம் கூட ஓவியம் படித்தது இல்லை. ஸ்கூலில் Drwaing கிளாசில் 6 வந்து வரைந்ததோடு சரி. ஏன் எந்த ஓவியப் போட்டியிலும் சரி, வீட்டிலும் சரி ஓவியம் வரைந்தது இல்லை. படத்தில், என் பின்னால் இருக்கும் ஓவியம் நான் தாடி வளர்ந்து மூன்று மாதம் கழித்து வரைந்தது. எதோ ஒரு நாள் போய் டவுன்ஹாலில் பேப்பர் போர்ட் வாங்கி வந்து ஒரே படத்தை 25 முறைக்கு மேல் வரைந்து வரைந்துகிழித்து பின் ஓரளவு சரியாக வந்தவுடன் அதை ஒரு frame போட்டு மாட்டி வைத்து எடுத்த படம் இது. நீங்க கேட்கலாம்..முதல் படமே இப்படி ஒரு செக்சி போஸ்ஸா என்று. தப்பு என்னிடம் இல்லை. நான் அந்த பொண்ணோட முகம் வரையத்தான் ஆசைப்பட்டேன். எனக்கு வரைய தெரியல. அந்தம்மா முதுகு ஈஸியா இருந்தது. அதான் அதை வரைந்தேன். இந்தப் படத்தை வரைவதற்குள் நான் பட்ட பாடு இருக்கே..அத்தோட நிறுத்தி இருக்கலாம். [...]

By |2017-10-12T13:42:44-07:00October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 1

எல்லோருக்கும் வாழ்க்கையில் லக் அடித்து இருக்கும். சின்னதோ பெரியதோ . ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும். அப்படிப்பட்ட ஒரு லக் ஒரு காலேஜ் பையனுக்கு எப்படி அடித்தது என்பது பத்திய கதைதான் இது. இந்தக் கதையின் முடிவு வரி இப்படித்தான் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும். அது எவ்வளவு பெரிய பம்பர் லாட்டரி லக் என்பது [...]

By |2017-10-09T13:11:45-07:00October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|30 Comments

சுவாதி கொலை.. ஒரு postmortem.

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது. இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார். உயிர் [...]

Creativity எனும் கரிச்சட்டி:

இது என் Creative Product. அசிங்காமா இருந்தாலும் இது தான் உண்மை. சுமார் 8 வருஷம் முன்னாடி என் பையன் ஸ்கூலில் நடந்த Fancy Dress போட்டிக்கு நான் என் Creative மூலையை கசக்கி செய்த நசுங்கிய ரயில் என்ஜின் தான் இது. இந்தியாவில் குழந்தைகளுக்கு ஸ்கூலில் போட்டி என்றால், சில பள்ளிகளில் அது பெற்றோர்களுக்கு உண்டான போட்டி. ஸ்கூலில் எந்த போட்டி என்றாலும், நான் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் அந்த குழந்தைக்கு இருக்கோ [...]

By |2015-03-16T18:47:11-07:00March 16th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|7 Comments

ஆத்தாவா – தாத்தாவா ?

ஒரு காலத்தில் முழு நேர ஓவியனா மாறிடலாமா என்று எண்ணியது உண்டு. 16 வருஷம் முன்னாடி ஒரு பிரபல கோயம்புத்தூர் ஹோட்டல் வாசலில் ஈசல் வைத்து ஒரு மார்க்கெட் சர்வே எடுத்தேன். ஒரு படம் வரைஞ்சா எவ்வளவு காசு தருவாங்க என்று சர்வே எடுத்து ஒரு வாரம் செஞ்சு பார்க்கலாம் என்று முடிவு செஞ்சேன். காரணம் அதுக்கு முன்னாடி ரூமில் வைத்து ஒரு வாரத்தில் தத்ரூபமா வரைஞ்ச சேட்டு பொண்ணு படத்துக்கு, சேட்டு அப்போதே 5,000 வரை [...]

By |2015-03-09T21:40:34-07:00March 9th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|10 Comments

டயனோராவும் பாட்டியின் புண்ணியமும்

October, 1984 முதல் வாரம். ஒரு அம்பாசிடர் காரின் புகை மூட்டம் எங்கள் வீட்டின் முன்னால் அடங்கி நின்றது. வாயில் புகையுடன் என் மாமா இறங்கி வந்தார். பாசமலர் சிவாஜியை விட அதிக பாசம் உள்ள அண்ணன் அவர். தன் தங்கைக்கு (என் அம்மாவிற்கு) தான் உபயோகபடுத்திய Black and White டிவியை கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். கார் டிக்கியை அவர் திறக்கும் போது நான் ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு பெரிய கருப்பு [...]

By |2015-03-07T08:58:27-08:00March 7th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|3 Comments

வெட்டுக்கத்தியும் BRU காபியும்:

என் பையனுக்கு சங்கீதம், வாயில் அருவி போல் கொட்டவேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அவனும் ஒரு முத்துசுவாமி தீட்சிதராகவோ அல்லது சியாமா சாஸ்திரிகளாகவோ வரணும் என்ற நப்பாசைதான் காரணம். எனக்கு பாட தெரியாது. எனக்கு இல்லாத திறமை என் பையனுக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தவன், நான். பாட்டு எனக்கு வருதோ இல்லையோ, என் பையனும் பாடனும். காரணம், நான் ஒரு டிபிகல் இந்திய தந்தை. இது நடந்தது உண்மை.... அவனுக்கு சுமார் ஏழு வயது [...]

By |2015-01-06T15:47:53-08:00January 6th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|13 Comments

ஒரு புளிய மரத்தின் விதை

அது ஒரு கனாக்காலம்...1998. ஒரு புளியமரம். அன்று அதன் கீழே சில விதைகள் உதிர்ந்தன... அங்கே ஒரு மலையாளி நாயர் டீ கடை வைத்து இருப்பார். தினமும் காலை 8.00 மணிக்கு, ஒரு காக்கி சட்டை போட்டுக்கொண்டு ஒரு ஓட்டை சைக்கிளில் டீ கேன் கட்டிக்கொண்டு வருவார். அதன் கை பிடியில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கும். அதில் சுமார் 100 மசால் வடையுடன் விற்க வருவார். என் முதலாம் ஆண்டு Ph.D படிப்பு துவங்கிய வருடம் [...]

By |2016-10-12T21:31:18-07:00December 31st, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|9 Comments

பேபி எனும் பேபிமா:

கோவையில் நான் வசிக்கும் போது என் வீட்டு வேலைக்கு ஒரு வேலைக்காரி வைத்து இருந்தேன். அவர் பெயர் பேபி. சுமார் 50 வயசு அவுங்களுக்கு. நல்லவங்க. அவங்க ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. சேரும் போது பேபின்னு சொன்னாங்க அதனால நாங்க அவுங்கள பேபின்னு தான் கூப்பிடுவோம். அவுங்க புருஷன் பக்கத்துக்கு ஓட்டலில் செக்யூரிட்டி வேலை பார்த்தார். நல்ல குடும்பம். அவர் தன் மனைவியை பேபிமானு பாசமாதான் கூப்பிடுவார்னு, பேபி சொல்லுச்சு. அவுங்களுக்கு ஓரே ஒரு பேபி. அதுக்கு [...]

By |2014-12-19T08:48:04-08:00December 19th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments
Go to Top