blog

blog2016-10-12T21:30:49-07:00
1410, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 6

By |October 14th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil), Updates|39 Comments

அன்று நான் டீ குடித்த கடையின் பெயர் "அர்ச்சனா பேக்கிரி". பேக்கிரி இருக்கும் இடம் RS புரம். என் கல்லூரியில் இருந்து சரியாக 2.7 கிலோ மீட்டர்ஸ்.   அது ஒரு மலையாளி நடத்தும் டீக்கடை. கடையின் பெயர் அர்சனாவா, ஆராதனாவா இல்லை அரோமாவா என்று ஞாபகம் இல்லை. [...]

1210, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 5

By |October 12th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|22 Comments

ஆண் என்பவன் வேட்டை ஆடவும், பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமே என்று நம்பி பிறந்து இறப்பவர்கள் இந்த உலகில் ஏராளம். ஆதாம், ஆப்பிளைக் கொடுத்தது முதல், ஆப்பிள் போன் உபயோகிக்கும் இந்தக் காலம் வரை ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதை மனிதனே முழுமையாகப் புரிந்து [...]

1110, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 4

By |October 11th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|27 Comments

உலகம் பிம்பங்களை நம்பும் உலகம். அதற்காக எல்லாமே குத்து மதிப்பாக இருக்கும் என்று அர்த்தமில்லை. உலகத்தில் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் இயங்குகிறது. எப்படி என்கிறீர்களா ? சொல்கிறேன் ....   நான் வரைந்த முதல் படம் "பரிசுத்த ஆவி" என்றும், முதல் முகம் ஜூஹி சாவ்லாவின் முகம் [...]

1010, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 3

By |October 10th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|34 Comments

வரைவது இன்று நேற்று அல்ல.. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. குரங்கு மனிதனாக மாறிய போது அது முதலில் பழகியது பேசவோ எழுதவோ அல்ல .. பாறைகளில் ..ஓவியம் வரைய. ஓவியமே எழுத்துக்களின் தாய். அதுவே பேச்சின் தந்தை. மொழி எனும் குழந்தை ஓவியத்தால் பிறந்தது. நீங்கள் ஒரு கம்ப்ளீட் மனிதனாக மாறவேண்டும் என்றால் உங்களுக்கு வரையத் தெரிந்து இருக்க வேண்டும். இது அபத்தமாகத் தெரியலாம். ஒருவரிடம், உங்களால் பேசியோ, எழுதியோ ஒன்றைப் புரிய வைக்க முடியவில்லை என்றால் நீங்கள் அதை வரைந்துசொல்லலாம். எழுத்து, பேச்சை விட விஷுவல் வரைபடத்தின் பலமே அலாதி. Broader Picture of an Issue வை புரிந்து கொள்ள அதன் பிம்பம் முக்கியம். ஒன்றின் பிம்பத்தை அறிய அதன் Broader Picture நமக்குத் தெரிய வேண்டும். முதன் முதலில் ஒரு முகத்தை வரையும் போதுதான் அந்த Broader Picture ஐ எப்படிப் புரிந்து கொள்ளாவது என்று புரிந்தது. முதலில் நான் வரைய ஆசைப்பட்டது அப்போது எல்லாம் சினிமா நடிகையின் நல்ல புகைப்படம் வேண்டும் என்றால் நீங்க வாங்க வேண்டிய புத்தகம் சரோஜாதேவி இல்லை...ஸ்டார் டஸ்ட். ஸ்டார் Dust ஒரு வட இந்திய சினிமா இதழ். அதன் பேப்பர் மற்றும் பிரிண்ட் Qulaity க்கு நிகரான இதழ் தமிழில் அப்போதுகிடையாது. அதற்கும் பெட்டர் என்றால் டெபோனர். ரயில்வே நிலையத்தில் அந்தப் புத்தகத்தை கிளிப் செய்து வைத்து இருப்பார்கள். மெடிக்கல் காலேஜில் ஹியூமன் அனாடமி படிக்க ஆசைப்பட்டு முடியாத போனவர்களுக்கான பைபிள் அது. நான் வரைந்த முதல் முதுகு படம் அந்தப் பைபிளில் இருந்து காப்பி எடுத்து வரைந்தது. அந்த முதுகு ஓவியத்துக்கு நான் வைத்த பெயர் "பரிசுத்த ஆவி. சொல்கிறேன் .. கலை இரண்டு வகைப்படும். 1. எது தேவை இல்லையோ அதை நீக்கி தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளவது முதல் வகை. 2. எது தேவையோ அதை மட்டும் வைத்துவிட்டு மீதியை நீக்குவது இரண்டாம் வகை. ஒரு கல்லில் தேவை இல்லாததை நீக்கினால் சிலை. ஒரு வெள்ளைத் தாளில் தேவையானதை வரைந்தால் ஓவியம். ஓவியம் வரையத் தெரிந்தால் சிற்பக்கலை எளிது. தூங்கப் பழகிவிட்டால் போர்த்திக் கொள்ள பழகிவிடலாம். முதல் படத்தை debonair ல் இருந்து வரைந்ததால் அடுத்து ஸ்டார் டஸ்ட் எடுக்கும் துணிவை அந்தப் பைபிள் தந்தது. [...]

910, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 2 

By |October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

நாம் டீசெண்டா வாழ உடனே கத்துக்கலாம். காரணம், இந்த process எல்லாமே நம்ம கையில் இருக்கு. ஆனா தெரு பொறுக்கியா மாற மொத்தம் இரண்டு வேண்டும். 1. நாம் பொறுக்கியா மாற இன்னொருத்தர் உதவணும். 2. நாம பொறுக்க ஒரு தெரு வேண்டும். இது ரெண்டும் யாருக்கு அமையுதோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உடனே, தெரு பொறுக்கினா கெட்ட வார்த்தைன்னு நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம ஒரு Un Disclosed டெஸ்டினேஷன் தேடி, தினம் ஒரே தெருவில் திரும்பத்திரும்ப அதைத் தேடுபவனே தெருப் பொறுக்கி. இப்படி தெருவா தெருவா தேடி, அதை ஒரு மரத்துக்கு கீழ் கண்டுபிடித்தா அவன் ஞானி. கிரேக்க, தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் எல்லாமே ஒரு காலத்தில் தெரு பொறுக்கியாஇருந்தவங்கதான். இவங்க ஏதென்ஸ் நகர வீதிகளில் பொறுக்காத நாள் இல்லை. இப்படிப் பொறுக்கி பொறுக்கி கடைசியில் மரத்துக்கு கீழ் வந்து உட்காந்து மத்தவங்களுக்கு பொறுக்க கத்துக்ககொடுத்தாங்க. புத்தர் நேரடியா மரத்துக்கு கீழ் உடகாந்தவர். சிலர் தெரு, ஊரு எல்லாம் சுத்தியை பிறகுதான் வந்து மரத்துக்கு கீழஉட்க்காருவாங்க. சுவான்சாங் போன்றவர்கள் உலக மகா பொறுக்கி. சரி, சேட்டு பொண்ணுக்கும் சுவான்சாங்க்கும் என்ன சம்பந்தம்னு கேட்குறீங்களா? இருக்கு ... அப்ப, நான் மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டு இருந்த நேரம். கேப்பாமாரியா இருந்த நான் தெரு பொறுக்கியா மாறிக்கொண்டு இருந்த transformation காலம். Research லைப் ஏனோ பிடிக்கவில்லை. நாலு சுவத்துக்குள்ள எண்ணத்த வாழ்க்கை முழுவதும் தேடுவது என்ற அலுப்பு வரத் தொடங்கிய காலம். டெய்லி லேப்க்கு போக வேண்டியது. எதையாவது நோண்ட வேண்டியது. எப்படியும் இரண்டு வருஷத்தில் மாஸ்டர் டிகிரி முடிந்து விடும். ஆல்ரெடி 6 வருஷம் காலி. மாஸ்டர்ஸ், முடிச்சா வாழ்க்கை முடியாது அதுக்கு மேல மூணு நாலு வருஷம் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சிலதாடி வைத்த Ph.D சீனியர்ஸ் சொறிந்து கொண்டே பயம் காட்டினார்கள். ஒரு நாள் சண்டே Ghee Rice வித் சிக்கன் சாப்பிட்டுவிட்டு....நாம் ஏன் இந்த Research field விட்டு மாறி வேற ஏதாவது உடனேவேலைக் கிடைக்கும் ஒரு field க்கு மாற கூடாதுனு யோசித்தேன். எதோ ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை .., பல நாள் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்னுபார்க்கும் போதுதான் அதுக்கு உண்டான பலன் தெரிந்தது. தாடி முளைத்து இருந்தது. ஆஹா.. இளம் வயதில் முதலில் வளரும் தாடியை செறிவது பிறக்கும் கன்றுக்குட்டியைத் தாய் பசு நாக்கால் வருடிவருடிக்கொடுப்பது போன்ற சுகமானது. சரி, விடுங்கள் ..அதை அணுபவித்தவன்னுக்குத்தான் தெரியும். தாடி வளர்ந்தாச்சு ..Perfect. ஒரு தெருப் பொறுக்கியா மாற முதல் தகுதி அவனுக்குத் தாடி வேண்டும். இதை பிளாட்டோவே சொல்லி இருக்கிறார்... [...]

910, 2017

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 1

By |October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|30 Comments

எல்லோருக்கும் வாழ்க்கையில் லக் அடித்து இருக்கும். சின்னதோ பெரியதோ . ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும். அப்படிப்பட்ட ஒரு லக் ஒரு காலேஜ் பையனுக்கு எப்படி அடித்தது என்பது பத்திய கதைதான் இது. இந்தக் கதையின் முடிவு வரி இப்படித்தான் [...]

410, 2017

ஷாக்க்க்க்..

By |October 4th, 2017|Categories: Vancouver Tamil World, என்னமோ போடா !, தமிழ் (Tamil)|8 Comments

கனடா வந்த புதிதில் பல ஷாக்குகள் நடந்தன...அதில் முதல் shock... bike. பைக் என்றால் இங்கே சைக்கிள் என்றார்கள். அடேய், அப்ப நம்மூர் பைக்கை என்ன சொல்வீங்க என்றால் மோட்டர் சைக்கிள் என்றார்கள்.  மோட்டர் வச்ச சைக்கிள் மோட்டர் சைக்கிள் என்றால் மோட்டர் இல்லாத சைக்கிள் வெரும் சைக்கிள் [...]

410, 2017

முதல் பாடம்.. தன்னன்னே தன்னன்னே !

By |October 4th, 2017|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|17 Comments

நேற்று தபலா முதல் class க்கு போனேன். Master கேட்டார். எதுக்காக தபலா கத்துக்க வந்து இருக்கே. அதுவும் இந்த வயசுல. உன் objective என்னனு கேட்டார். சார், நான் "அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் வாசிக்கனும்" என்றேன். இது என் வாழ் நாள் லட்சியம்.  அப்படின்னா என்னனு [...]

310, 2017

தியாகம்ன்னா என்ன?

By |October 3rd, 2017|Categories: Sridar's Personal, என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

தியாகம்ன்னா என்ன?  எப்ப பார்த்தாலும் சின்னம்மா எனும் சசிகலா தன் வாழ்க்கையே தியாகம் செய்ததா அவரும், அவர் கூட இருப்பவர்களும் சொல்கிறார்கள். நட்புக்காக தன்னையே தியாகம் செய்தார் என்பதுதான் அவர்கள் வாதம். ஆனா, அப்படி என்ன தியாகம்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார்கள். நானும் யோசிச்சு பார்த்தேன். அப்படி என்னதான் [...]

310, 2017

வரலாற்று அழிவுகளும் தாஜ் மஹாலும்..

By |October 3rd, 2017|Categories: Sridar's Personal, என்னமோ போடா !, தமிழ் (Tamil)|5 Comments

இது மிக முக்கியமான வரலாற்று பதிவு.  யோகி ஆத்யனாத் தாஜ் மஹலை இந்தியாவின் tourist list ல் இருந்து எடுத்தது ஒரு வரலாற்று பிழை. அது just like that நடக்கவில்லை.  ஏதோ ஒரு காரணி இதற்கு முன் தாஜ் மஹலை ஒட்டி நடந்து இருக்க வேண்டும். அந்த [...]

Go to Top