சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும் – பார்ட் 3
வரைவது இன்று நேற்று அல்ல.. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. குரங்கு மனிதனாக மாறிய போது அது முதலில் பழகியது பேசவோ எழுதவோ அல்ல .. பாறைகளில் ..ஓவியம் வரைய. ஓவியமே எழுத்துக்களின் தாய். அதுவே பேச்சின் தந்தை. மொழி எனும் குழந்தை ஓவியத்தால் பிறந்தது. நீங்கள் ஒரு கம்ப்ளீட் மனிதனாக மாறவேண்டும் என்றால் உங்களுக்கு வரையத் தெரிந்து இருக்க வேண்டும். இது அபத்தமாகத் தெரியலாம். ஒருவரிடம், உங்களால் பேசியோ, எழுதியோ ஒன்றைப் புரிய வைக்க முடியவில்லை என்றால் நீங்கள் அதை வரைந்துசொல்லலாம். எழுத்து, பேச்சை விட விஷுவல் வரைபடத்தின் பலமே அலாதி. Broader Picture of an Issue வை புரிந்து கொள்ள அதன் பிம்பம் முக்கியம். ஒன்றின் பிம்பத்தை அறிய அதன் Broader Picture நமக்குத் தெரிய வேண்டும். முதன் முதலில் ஒரு முகத்தை வரையும் போதுதான் அந்த Broader Picture ஐ எப்படிப் புரிந்து கொள்ளாவது என்று புரிந்தது. முதலில் நான் வரைய ஆசைப்பட்டது அப்போது எல்லாம் சினிமா நடிகையின் நல்ல புகைப்படம் வேண்டும் என்றால் நீங்க வாங்க வேண்டிய புத்தகம் சரோஜாதேவி இல்லை...ஸ்டார் டஸ்ட். ஸ்டார் Dust ஒரு வட இந்திய சினிமா இதழ். அதன் பேப்பர் மற்றும் பிரிண்ட் Qulaity க்கு நிகரான இதழ் தமிழில் அப்போதுகிடையாது. அதற்கும் பெட்டர் என்றால் டெபோனர். ரயில்வே நிலையத்தில் அந்தப் புத்தகத்தை கிளிப் செய்து வைத்து இருப்பார்கள். மெடிக்கல் காலேஜில் ஹியூமன் அனாடமி படிக்க ஆசைப்பட்டு முடியாத போனவர்களுக்கான பைபிள் அது. நான் வரைந்த முதல் முதுகு படம் அந்தப் பைபிளில் இருந்து காப்பி எடுத்து வரைந்தது. அந்த முதுகு ஓவியத்துக்கு நான் வைத்த பெயர் "பரிசுத்த ஆவி. சொல்கிறேன் .. கலை இரண்டு வகைப்படும். 1. எது தேவை இல்லையோ அதை நீக்கி தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளவது முதல் வகை. 2. எது தேவையோ அதை மட்டும் வைத்துவிட்டு மீதியை நீக்குவது இரண்டாம் வகை. ஒரு கல்லில் தேவை இல்லாததை நீக்கினால் சிலை. ஒரு வெள்ளைத் தாளில் தேவையானதை வரைந்தால் ஓவியம். ஓவியம் வரையத் தெரிந்தால் சிற்பக்கலை எளிது. தூங்கப் பழகிவிட்டால் போர்த்திக் கொள்ள பழகிவிடலாம். முதல் படத்தை debonair ல் இருந்து வரைந்ததால் அடுத்து ஸ்டார் டஸ்ட் எடுக்கும் துணிவை அந்தப் பைபிள் தந்தது. வெள்ளைத் தாளில் கருப்பு தடவி, முதுகை மட்டும் வெள்ளையாக வரைந்தால் இது முதல் category ஓவியம். அடுத்து நான் வரைய முனைந்தது ..இரண்டாவது category ஓவியம். ஸ்டார் டஸ்ட்னின் சென்டர் spread ல் அந்த வாரம் ஜூஹி சாவ்லா இருந்தார். அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்து முதல் முகத்தை வரைய ஆரம்பித்தேன். ஆரம்பமே பிரச்சனை ..எனக்கு எங்கு ஓவியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலேயே குழப்பம். ஓவியங்கள்தோ, முறுகலாகத் தோசை போன்றது. அதன் கடைசி வடிவம் முதலில் மாவை எங்கு ஊற்றி, எப்படி சூத்தினீர்கள் என்பதில் ஆரம்பித்து அதை எங்குநிறுத்தினீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும். ஜூஹி சாவ்லாவை பல முறை சூடான தோசைக் கல்லில் ஊற்றி ஊற்றி சுத்தினேன். பல காகிதங்கள் கரைந்து நாயர் கடை டீயில் கரைந்தன. சுமார் ஒரு மாதம் முயன்று முயன்று கடைசியில் ஓவியம் வந்தது. ஆனால் நான் வரைந்தது சரியா இல்லை இன்னும் சரி செய்யவேண்டுமா என்று தெரியவில்லை. இரவு வரைந்துவிட்டு இத்தோடு முடிந்தது என்று படுத்துவிட்டு காலையில் பார்த்தால் பல தவறுகள் தெரியும். அதைச் சரி செய்ய மீண்டும் அதில் கையை வைத்துக் கெடுத்துவிடுவேன். எனக்கு ஓவியத்தை எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆனால், அதை எங்கு எப்போது முடிக்க வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை. மீண்டும் பல காகிதங்கள் நாயர் டீக்கடையில் கரைந்து கடைசியில் அந்தச் சூட்சமம் தெரிந்தது. ஒரு ஓவியத்தின் கண்கள் எப்போது நம்மோடு பேச ஆரம்பிக்கிறதோ அப்போது வரைவதை நிறுத்தி விடலாம். இதைத் தெரிந்து கொள்ள எனக்கு இரண்டு மாதம் ஆகியது. எத்தனையோ காகிதங்கள் கிழிக்கப்பட்டன. காகிதத்தில் முக்கி முக்கி டீ குடித்ததாதல் தலையில் முதன் முதலில் ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்த்தது. [...]