Sakthi Krishna: Voice Artiste
பருத்தி வீரன் படத்தில் பாட்டுக்கு இடையே ஒரு குரல் வரும்? "என்ன நாயனக் காரே வச்சிட்டு வேடிக்க பாத்துட்டிருக்கீங்க?" இந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. வான்கூவரில் வசிக்கும் திரு.சக்தி கிருஷ்ணா அவர்களின் குரல்தான் இது. இது மட்டும் அல்ல, மறைந்த டைரக்டர், நடிகர் கொச்சின் ஹனீபா நடித்த மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கில் நிறைய படத்துக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் கொச்சின் ஹனீபாவின் குரலில் பேசிய படங்களில் மதராசபட்டினமமும் [...]