இந்தியாவில் ஒரு காலத்தில் யானைகள் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் போல மேய்ந்தன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், குறுநில மன்னன் ஒருவன் பஞ்சசீலத்தை ஆண்டுவந்தான்.

அவன் பெயர் கும்பமேசி.

அவனிடம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று எல்லா வித படைகளும் இருந்தது.
இவ்வள்ளவு படைகள் இருந்தும், கும்பமேசி ராஜாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருந்துவந்தது.

தன் யானைப் படைகளை போல தனக்கு பிறக்கும் மகனும் மிக பலசாலியாக வரவேண்டும் என்று விரும்பினான்.
யானைப்பால் குடித்தால் யானை பலமும், புலிப்பால் குடித்தால் புலியின் பாய்ச்சலும் வரும் என்று யாரோ சொன்னதை நிஜம் என்று நம்பினான்.
தன் படையில் உள்ள பலசாலி யானை ஒன்று குட்டி போடுவதற்காக அவன் அந்தபுரம் கூட செல்லாமல் ராணிகளிடம் ‘டகால்டி’ செய்து வந்தான்.

ராணிகள் பலர், பட்டத்து பிள்ளை பெற ராஜாவிடம் தூது அனுப்பியும், அந்த பலசாலி யானை கருவுற்ற பின்புதான் அந்தபுறம் வருவதாக பல ராணிகளுக்கு வாக்கு அளித்தான் கும்பமேசி.

அந்த பலசாலி யானையும், ‘ஆ” என்று கத்தி ஒருநாள் கருவுற்றது.
அதில் இருந்து எண்ணி 365 நாள் கழித்து ஒரு பகல் வேளையில் அரசவைக்கு லீவ் போட்டு விட்டு அந்தபுர காலிங் பெல்லை மெல்ல அழுத்தினான் கும்பமேசி.

அடுத்த 300 வது நாள் அந்த புறத்தில் ‘ஆஆ’ என்று ராணி பிரசவ வலியில் துடிக்க, யானை பாகனும் யானை குட்டி போட்ட நல்ல செய்தியை கொண்டுவந்து கும்ப மேசியிடம் சொல்லி ஒரு மணி மாலையை பிரிசாய் வென்றான்.

“குவா குவா – என்ற சத்தத்துடன் “சோட்டா கும்பமேசி” பிறந்தான்.
கும்பமேசி உடனே யானைப்பால் கறந்து வர ஆள் அனுப்பினான்.

ராணியின் தாய் பாலை கொடுக்காமல், தாய் யானையிடம் இருந்து பாலை கறக்க சிப்பாய்கள் அந்த பலசாலி யானையை கட்டிப் போட்டார்கள்.

ஒரே மிதி.

போன நாலு சிப்பாய்களையும் மிதித்தே கொன்றது தாய் யானை. கஷ்டப்பட்டு யானையின் கண்களை கட்டி போட்டு எப்படியோ யானையிடம் இருந்து பாலை கறந்தார்கள்.

சோட்டா கும்பமேசி அதை முதல் நாள் கஷ்டப்பட்டுதான் குடிதான். திக்காக இருந்தது யானைப்பால். மீண்டும் மத்தியமும் அதை குடிக்க வைத்தார்கள்.
இப்படியே நாலு நாள் விடாமல் பத்து பேர் யானை மிதியில் செத்து கறந்த யானை பாலை குடித்த சோட்டா கும்பமேசி ஐந்தாவது நாள் நுரை கக்கி இறந்து போனான்.

குட்டி யானையும், தாய் பால் அருந்தாமல் செத்து போனது.
ஷாக்காகி போனான் கும்பமேசி.

கடுப்பான கும்பமேசி தன் அரசகுல ராஜ குருவை அழைத்து… ஏன் “சோட்டா கும்பமேசி” யானைப்பால் குடித்ததும் செத்தான் ? சொல்லு குருவே.
ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு பெத்த புள்ளை செத்து போச்சு. நான் அடுத்த குழந்தை பெற புலிப்பாலை கொடுக்கலாமா என்று கேட்டான்?

அதற்கு அந்த ராஜகுரு ஒரு பாடலை பாடினார்:

வாதம்போந் தாதுபுஷ்டி வந்தடரும் வன்பலமோ
யாதுபித்தங் கூடி யழகுதிக்குந் – தாதுமலர்த்

தேனைப்பா லிற்கலந்த தித்தீப்பைப் போலிருக்கும்
யானைப்பா லுண்ணு மவர்க்கு.

யோவ், குருஜி…நீ பாட்டுக்கு பட்டிட்டே ..அர்த்தம் சொல்லுயா என்றான்.

குருஜி சொன்னார் ” யானைப் பால் தேனைப் பாலில் கலந்தது போன்று ச்வீட்டாக இருக்கும்.
வாத கோபம் நீங்கும். தாது விருத்தியும், மிகுந்த பலமும், தீராத பித்தம் கூடி தேக அழகும் உண்டாகும்.
யானையின் சரீரம் அதிக வெப்பமானது.சூரியன் அஸ்தமனமான பின் இரவில் இரத்தத்தின் சூடு குறைந்து பால்தசைக் கோளங்களில் சேகரமாகும் பாலைக் காலையில் கறந்து உட்கொண்டால் தேக பலம், தேகக் கொழுமை, சுக்கில விருத்தி உண்டாகும்.சூரியோதயத்திற்குப் பின் சுரக்கும் பாலை மாலையில் கறந்து உட்கொண்டால் பலவீனத் தையும், சந்துவாதத்தையும் உண்டாக்கும்” என்றார்.

கும்பமேசி குழம்பி போனான்.

டேய் வெண்ணை குருவே ….என் புள்ள ஏன் யானைபால் குடிச்சு செத்து போனான்ன்னு கேட்டா ஏதோ வெண்பா எல்லாம் என்கிட்டே பாடி குழப்புற?
யோவ்… புரியற மாதிரி சொல்லுயா என்று கர்ஜித்தான்.

குருஜி பொறுமையாக பேச ஆரம்பித்தார்:

டேய் கும்பமேசி…முதிலில் குருஜிகிட்ட மரியாதையா பேசு.. வெண்ணை நோன்னைனு பேசப்படாது.
நீ இந்து ராஜாதானே… உனக்கு முதலில் சில இந்து மத basics பத்தி சொல்றேன் என்றார்.
அதுக்கப்புறம் எப்படி சோட்டா கும்பமேசி யானைப்பால் குடிச்சி செத்தான்னு சொல்லறேன் என்றார். பொறுமையா கேளு என்றார்.

கும்பமேசி குருவிடம் சரணடைந்தான். எப்படியும் அடுத்தமுறை புலிப்பால் கொடுக்கும் போது குழந்தை சாகாம இருக்க குருஜி வழி சொல்லுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

முதலில் இந்து மதத்தில் உள்ள basics க்கு குருஜி, கும்பமேசியை அழைத்து சென்றார்

“இந்து மதம் தான் உலகத்தில் உள்ள வெரி ஓல்ட் பிலிம் production house களில் ஒன்று.

ஏதோ பிலிம்னு சொன்னதால இதை கட்டுக் கதைன்னு நினைக்காதே கும்பமேசி.
எல்லாமே இந்து மதத்தில் நம்பப்பட்ட உண்மை. எல்லாத்தையும் இந்துவா நம்பு” என்றார்.

ஹ்ம்ம் சொலுங்க என்றான் கும்பமேசி…

குருஜி சொன்னார் … இந்த தயாரிப்பு நிறுவனத்தில் மொத்தம் மூன்று பேர் partners.

1. Creative Director / Production Manager – தி ஸ்ட்ரிக்ட் ஆபிசர் – பிரம்மன்
2. Sustainment and Support Manager – மிஸ்டர் கூல் – விஷ்ணு
3. Post Production Manager – அல்டிமேட் ஸ்டார் – சிவன்

மேலோட்டமா இந்த கம்பெனியில் மூணு டிவிஷன் இருந்தாலும் இதில் ஏகப்பட்ட branches ஒவ்வொரு department டிலும் உண்டு.

முதிலில் Creative Director பத்தி பார்ப்போம். தி ஸ்ட்ரிக்ட் ஆபிசர் – பிரம்மன்.

இவர்தான் சோட்டா கும்பமேசியின் கிரியேட்டர்…

கும்பமேசி குருஜியிடம் கேட்டான்…

” ஏன் சோட்டா கும்பமேசியை பிரம்மன் பிறக்க வைத்து பின்பு யானைப்பால் என்னை கொடுக்க வைத்து இறக்க வைத்தார் ?
அந்த குழந்தை என்ன பாவம் செய்தது ? கடவுள் என்னை தண்டிக்காமல் ஏன், என் குழந்தையை கொன்றார் ?

குருஜி சொன்னார் ‘ அது தான் பிரம்மனின் பேடன்ட் டிசைன்’.

ஒரு இந்து உயிர் ஜனிப்பதும், நீப்பதும் நம் கையில் இல்லை

சொல்கிறேன் …

ஆத்மா அழியாதது.
மரணம் ஆத்மாவுக்கல்ல.

இறந்தது சோட்டா கும்பமேசியும், குட்டி யானையும்தான் .
இவர்களின் ஆத்மா இன்னும் இறக்கவில்லை.

உயிரோடுதான் இருக்கிறது ..
அது உன்னையும், தாய் யானையையும் தினம், தினம் சுற்றி வந்து வாட்டும்

இதுவே பிரம்ம சூத்திரம்..
சொல்கிறேன் பிரம்மன் யார் என்று …

( தொடரும் )
ஸ்ரீதர் ஏழுமலை