இது ஒரு உண்மை சம்பவம் ஒட்டிய உண்மை கதை .
போன மாசம் நான் வால்மார்டில் வாங்கிய ஒரு Vacuum Cleaner ரை Return செய்ய போயிருந்தேன்.
லைனில் எனக்கு முன்னாடி ஒரு Chinese நின்னுட்டு இருந்தார். அவர் முறை வந்ததும், கையில் இருந்த ஒரு பாலீதீன் பையில் இருந்து ஒரு ஐட்டத்தை வெளிய எடுத்தார்.
சொன்னா நம்புங்க … அது அந்தாளு போட்ட உள்ளாடை (அதாவது ஜட்டி). அதைத்தான் return செய்யதான் வந்து இருந்தார்.
இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? படிங்க புரியும்.
Return Center ரில் இருந்த அந்த பொண்ணு அந்த ஐட்டம் இருந்த நிலமையை பார்த்து ஷாக்காகி போச்சு.
காரணம், அந்த ஆளு அந்த ஜட்டியை ஒரு வாரமா போட்டு பாத்து இருக்கார். ஒத்து வரலையாம். அரிக்குதாம். அதான் அண்ணன் அதை கழட்டி எடுத்துட்டு வந்துட்டார்.
Return Counter ரில் இருந்த அந்த பொண்ணு சொல்லுச்சு ” சார் … உள்ளாடைகள் , packet பிரிச்சு இருந்தாலும் பரவாயில்லை. use செய்யாம இருந்தா கண்டிப்பா எடுத்துக்குவோம். Sorry சார், இதை நீங்க உபயோகிச்சு இருக்கீங்க அதனால வாங்க முடியாது” என்றது.
ஏன் shoe க்கு ஒரு பாலிசி, ஜட்டிக்கு ஒரு பாலிசி….நான் ஒதுக்க மாட்டேன் என்றார்.
அதுக்கு அந்த பொண்ணு ” சார் , இது health issue..புரியும்னு நினைகிறேன் ” என்றது.
நீங்களே பாருங்க , நான் நால்லாதானே இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ..நீங்க வாங்கித்தான் ஆகணும் என்றார்.
அதுக்கு அந்த பொண்ணு “சார் …நீங்க வாங்கும் போதே size பார்த்து வாங்கி இருக்கலாமே” என்றார்.
அதுக்கு அந்த ஆளு, “ஏங்க, ஜட்டியை போட்டு பாக்காம எப்படி அது நல்லா பிட் ஆகும்னு ஒருத்தனுக்கு தெரியும் ?” ன்னு ஒரு போடு போட்டார்.
அந்த பொண்ணு, “சார் உங்க சைஸ் தெரிஞ்சவே போதுமே சார்”னு பொறுமையா பதில் சொல்லுச்சு.
அதுக்கு அந்த ஆள் ” ஏங்க, போன வாரம், பால் வாங்க வந்த நான் ஜட்டி 50% offer போட்டு இருந்துச்சு … வாங்கிட்டேன். எனக்கு என் ஜட்டி சைஸ் தெரியாது. என் கூட பொண்டாட்டி கூட வரலை. சரின்னு அங்க இருக்கிற ஆளுகிட்ட போய் கேட்கலாம்னு பார்த்தா அதுவும் பொம்பளை… போன் போட்டு பார்த்தும் என் பொண்டாட்டி எடுக்கல …அதான் குத்து மதிப்பா வாங்கி போட்டுடேன்.. இப்ப சின்ன சைஸ்.. அரிக்குது. நீங்க return எடுத்தே ஆகணும் ” என்று கடுப்பா சொன்னார்.
அந்த பொண்ணும் சார் ” நான் வாங்க முடியாது ” … இதை வாங்கினா நாங்க குப்பையில் தான் போடணும்… ராக்கில் மீண்டும் வைக்க முடியாதுன்னு சொல்லிடிச்சு.
அதுக்கு டென்ஷன் உச்சிக்கு போன அந்த ஆளு ” நீ அதை உன் தைலயில் போடுவியோ இல்லை , குப்பையில் போடுவியோ எனக்கு தெரியாது.. இதை நான் போடமுடியாது.. திரும்பி வாங்காத வரை நான் நகர மாட்டேன் என்று குதிக்க ஆரம்பித்தார். அப்பத்தான் நான் நோட்டீஸ் செஞ்சேன் . மனுஷன் எதையுமே போடாம வந்துதான் சண்டை போட்டுட்டு இருக்கார்னு…
அந்த பொண்ணு பாவம்.
மேனேஜருக்கு போன் போட்டதும், இன்னொரு அம்மணி வந்து மொத்த கதையையும் கேட்டு மயங்கி… glows கையோட அதை செத்த எலி தூக்குவது போல தூக்கி அந்தாளு கண்ணு முன்னாடியே குப்பையில் போட்டுச்சு.
Refund செய்யும் போது பார்த்தேன்.
————————————————–
ஜட்டியின் நிறம் வெள்ளை
அதில் 95% அழுக்கு .
ஜட்டியின் விலை $ 3.99 + Tax
Off 50%
மொத்த refund $ 1.995 + Tax
————————————————-
வெளிய போகும் போது பார்த்தேன்.
அந்தாளு வால்மார்ட் MacDonald லில் அந்த ரெண்டு டாலருக்கு காபி வாங்கி குடிச்சிகிட்டே அவன் பொண்டாட்டிக்கு போன் போட்டு பேசிட்டு இருந்தார்.
கிட்ட போய் அப்படி என்ன தான் பேசுறார்னு கேட்டேன் …
ஏதோ வால்மார்ட்டில் return செஞ்ச காசில் சீனப் பெருஞ் சுவர் கட்டிட்ட மாதிரி
” யேய் …மரியா..யூ .வால்மார்ட் ஜட்டி… சூ ஈ ஈ …return ஷி … பூ ஈ..ஹி , சிஞ் சின் 1.99 ” னு பல்லை இளிச்சிக்கிட்டு வாங்கின காபியை பாதி குடிச்சிட்டு, மீதியை குப்பையில் கொட்டிட்டு போயிட்டே இருந்தான்.
நீங்க ரிச்மண்டில் பார்க்கும் பாதி சீன பெரும் சுவர்கள் இப்படி ஜட்டி காசில் கட்டப்பட்டவைதான்.
இவிங்க இப்படித்தான்.
pramadam with some suspense super Sridhar
Sridhar, you are great story teller. You do come across such characters time to time, isn’t it? Call it innocence or ignorance or lack of empathy!
Sridar, very nicely narated. Have come across such characters… Was actually looking forward to this post. ????????
Great!!!
நல்ல வேளை, நான் இந்தியால இருந்து wholesale இறக்குமதி செஞ்சிட்டேன்.
is the elastic working okay?
Absolutely perfect sir 😛
Machi Thiruvarutchelvan – Nee jatti poduviyaa ???????????? !!! Adade !!! ????????????
Neenga poda mateengala Yakub Mohamed Sulaiman bhai? ????????????
இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் ஜட்டி பிரச்சினை ஜாதி பிரச்சினை ஆகியிருக்கும்.
பையன் இன்னும் வளரல சார்.
Correct sir, romba varushama orae hip size la than irrukaen :
போதும் தம்பி புரிஞ்சிடிச்சு…
Thala. I got you as well !!! ROFL !!! 😀 😀 😀
Public la green green a pesarale…
அபச்சாரம், அபச்சாரம்!!
அருமை அருமை ஶ்ரீதர்! ஆனால் அவர் கேட்ட ஒரு கேள்வி என்னைச் (ஜி)சிந்திக்க வைத்துவிட்டது. பாகுபாடு காட்டாத, பாகுபாடு காட்டுவது சட்டத்திற்கு முரணானது என்று அறியப்பட்ட இங்கு – ஏன் செறுப்புக்கு ஒரு நிலை கோவணத்திற்கு வேறொரு நிலை!?
Ganesh Ramalingam… Any experience ???
Illana idhu romba comedya iruku…
Walmart return policy Vazhga
இந்த பிரச்சினை வராம இருக்கத்தான் தமிழன் – ஆல் இன் ஒன் size கோவணம் கண்டு பிடித்தான். என்ன பேடண்ட் வாங்காம போயிட்டார் எங்க தாத்தா…
(நல்லெண்ணம்) ஜட்டில இருந்தாதானே அகப்பை’ல வரும்…
I can hear the mind voice of that Walmart staff member, singing “ஜட்டி சுட்டதடா!” 😉
நண்பா… காக்கைக்கும் தன் ஜட்டி பொன் ஜட்டி!
Hope they don’t return condoms like this..height of nonsense in the name of..blah blah etc..
Ivanuku lam India than seri..oru vatti bill pannina, No return no exchange in most of the shops….
Cheap
ஜட்டி is the best returns !செம