நமக்கு ஒருத்தன் துரோகம் செய்தால், அவனை பொது இடத்தில் பார்த்து சிரித்து ஒதுங்கி போவதே நாம் அவனை வென்றதுக்கு சமம்.
இதுதான் படத்தின் ஒன் லைன். இது ஒரு அட்டகாசமான action thriller படம்.
கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம்.
பெரிய கதாநாயகர்கள் எல்லாம் படத்தில் கிடையாது.
கதை, வசனம், இசை, பாடல்கள் மற்றும் காட்சி அமைப்பு என்று அறிமுக இயக்குனர் அனுசரண் கலக்கி எடுத்து உள்ளார்.
கதாநாயகன் ஒரு வெட்டி. அவரை சுற்றி நடக்கும் யதார்த்த நிகழ்வுகளில் நட்பு, காதல், கள்ளக்காதல், முத்தம், சத்தம், துரோகம், லஞ்சம், கொலை, அடியாள், போலீஸ், பொண்டாட்டி, குழந்தை என்று ரவுண்டு கட்டி அடித்து இருக்கிறார்கள்.
படத்தின் இசை கே என்கிற கிருஷ்ண குமார்…ஹிந்தி பிசா படத்துக்கு இசை அமைத்தவர். இரண்டு பாடல்களில் கானா பாலா பாடிய பாட்டை பல இடங்களில் bgm ஆக போட்டு கதையோடு இழைத்து இருக்கிறார் இயக்குனர்.
கதை என்ன வென்று முழுவதும் சொல்ல மாட்டேன். போலீஸ் informer ராக வரும் சார்லிக்கு இவ்வளவு நடிப்பு வரும் என்று இந்த படம் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
கதிர்தான் கதாநாயகன். மலையாள ரேஷ்மி மேனன்தான் இவர் மனைவி. இருவருமே கண்ணாலேயே படத்தில் பேசுகிறார்கள்.
அந்த போலீஸ்காரர்கள் இருவருமே நிஜம் என்று தோன்ற வைக்கும் கதா பாத்திரங்கள். படத்தில் ஏகப்பட்ட நச் காட்சிகள். செதுக்கி எடுத்து உள்ளார் இயக்குனர்.
என்ன சொல்வது …இந்த வருடத்தின் இன்னொரு யதார்த்த கலக்கல்.
எல்லோருக்கும் புடிக்குமா என்று தெரியாது.
எனக்கு மிகவும் பிடித்தது:
சீட்டு கட்டு shuffle செய்யும் போது பின்னணி இசையை match செய்த காட்சி.
நாயகி ரேஷ்மி மேனன், கதிரின் நடிப்பு.
மனசாட்சியுடன் கதாநாயகன் இரவின் வெளிச்சத்தில் பேசுவது
பிடிக்காதது: துரோகம் தொடர்வது.
7/100 or 7/1000??
corrected …சார்
ஒரு புள்ளி விட்டு போச்சு புள்ளி ராஜா சார்
0 loss theory. Well explained
7/10 or 7/100?
ஐ தினக் ஐ கரக்… டட்
புள்ளி still there. Producer will commit suicide
http://www.sridar.com Rating: 7.0 /10.0 போதுமா சார்
குருஜி. கணக்கு ‘பண்ண’ தெரியாத குருஜி.
Shouldn’t kanakku be in apostrophe? 😉
மாயை??
மாயை பற்றி எழுத இருப்பதால் ஏற்பட்ட மாயை. தத்வமசி.
Thanks Sri , I was just confused whether to watch this movie or not????
Watch it.. It’s a good movie
Just watched , nice movie ????
Cute, short and sweet – BOTH the movie and Sridar’s review!. I like the ending as well as the meaning of the background song played at the end!
காவலர்கள், காவல்துறை காட்சியமைப்புகள் யதார்த்தம்.
க்ளைமாக்ஸ் யதார்த்தம்.
Hats off to Sridhar for this wonderful review. Nangu sonneerrgal. Where to see.
தமிழ் துப்பாக்கி
where can i watch it?
Charlie is a brilliant character artist, more than a comedian.. I feel He didn’t shine much for his talent.. Movie that comes immediately to my mind is vetri kodi kattu..
Watched kutram kadithal after your review, will watch this movie too
GOOD REVIEW
but i liked the girl, hahhah, pretty girl, alagaana manaivee and he still flirts with the other slut..hahha..just a thought guys
Yeah awesome movie! Perfect review too!!!
கடவுளை நம்புவர்கள்,நம்பாதவர்கள்; ஏழை, பணக்காரன். இதே போல மனசாட்சி உடையவர்கள், மனசாட்சியை மண்ணுக்குள் புதைத்தவர்கள். இந்த எதிர் எதிர் கும்பலுக்கு இடையில் ஒரு பெரிய, கடக்க முடியாத சுவர் இருக்கிறது. ஒரு கூட்டத்தை அதன் எதிர் கூட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம். வெறுமே அங்கலாய்ப்பதை தவிர வேறு வழியில்லை.
அன்பான, அழகான மனைவி, குடும்பம் இருந்தும் கதிர் ஏன் இப்படி ‘லோலாயி’யாக திரிந்தான்; தான் செய்த தவறுகளுக்கு ஒரே சாட்சியான கதிரை காப்பாற்றியது அந்த இன்ஸ்பெக்டரின் எந்த பக்க மனசாட்சி, பிரபாகரின் கொலை மட்டும்தான் கதிரின் மன, குண மாற்றத்துக்கு காரணமா போன்ற கேள்விகளுக்கு ஒப்புக்கொள்ளத்தக்க பதில்கள் இல்லை.
எப்படி இந்த ‘லோலாயி’க்கு இப்படி ஒரு அழகான லுலாயி மனைவி என்பதே ஒரு கேள்விதான்.
மீண்டும் ஒரு யதார்த்தமான, ஆரவாரமில்லாத, அருமையான தமிழ்ப்படம்! விமர்சனம் மற்றும் பின்னூட்டங்கள் அமர்க்களம்!