இது பேய் தான், நித்தியா நடுங்கினாள்.
இரவு மணி 11 இருக்கும்… வீட்டில் கும் இருட்டு.
இந்நேரம், அவள் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால், மேல் மாடியில் யாரோ மெதுவாக நடக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள்.
எதிர் வீட்டில் இரண்டு நாளுக்கு முன்தான் ஒரு தற் ‘கொலை’ நடந்தது.
வீட்டை விட்டு மணைவி இன்னொருவருடன் ஓடிப் போனதால், software engineer மகேஷ் தூக்கில் தொங்கிவிட்டார்.
மகேஷுக்கு 45 வயசு இருக்கும். நல்ல மனுஷன். எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு இருந்தவர்.
அவர் நித்தியாவிற்கு போன வாரம்தான் face புக் request கொடுத்து இருந்தார்.
இன்னும் கூட அது பெண்டிங்கில் உள்ளது. அவள் அதை accept செய்யாமல் வைத்து இருந்தாள்.
Accept செய்யலாம் என்பதற்குள் தூக்கில் தொங்கி விட்டார்.
கழுத்து நெரித்து இறந்து கிடந்ததை இவள்தான் அவள் வீட்டு ஜன்னல் வழியே பார்த்துவிட்டு போலீசுக்கு போன் செய்தாள்.
பயம் இப்போது நித்தியாவை தொற்றிக்கொண்டது.
இப்போது மேல் மாடியில் லைட் on செய்யும் சத்தமமும் கேட்டது.
பகீர் என்றது இவளுக்கு. பயத்தில் இப்போது கண்களை மூடிக் கொண்டாள்.
இப்பொது, பழைய அலுமினிய பாத்திரம் ஒன்று உருளும் சத்தமும் கேட்டது.
நித்தியாவிற்கு இப்பொது இதயம் பட படபடவென அடிக்க தொடங்கியது.
சில நிமிடங்கள் கழித்து லைட் தானகேவே அணைந்தது.
கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள்.
நைட் லாம்ப் வெளிச்சத்தில் கருப்பாக ஒரு உருவம் மெதுவாக மாடியில் இருந்து கீழே நடந்து வந்தது.
வாய் திறந்து கத்த முடியாமல் தவித்தாள் நித்தியா.
தலை கருப்பாக இருந்தது. இடுப்புக்கு கீழ் கால்கள் தெரியவில்லை.
அந்த உருவம் அவள் அருகே வந்து தூங்கி கொண்டுத்தான் இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு போவதை உணர்ந்தாள்.
மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் நித்தியா.
அந்த உருவம், மேஜையில் இருந்த இவள் லேப் டாப்பை ஓபன் செய்தது.
இவள் Facebook அக்கௌன்ட்டை ஓபன் செய்தது.
எப்படி என் password அந்த பேய்க்கு தெரிந்தது? இது அந்த software engineer பேய் மகேஷ் தான்.
எப்படியோ என் Facebook அக்கௌன்ட்டை hack செய்துவிட்டது.
நித்தியாவிற்கு இப்போது பயம் வந்து வேர்த்துக் கொட்டியது.
அந்த சாப்ட்வேர் engineer கொடுத்த Facebook friend request டை அந்த உருவமே தலை ஆட்டிக்கொண்டே delete செய்தது.
ஒரு இருபது நிமிடங்கள் இவளின் பழைய புகைப்படங்கள் பார்த்த பின்பு அந்த உருவம் ஒரு பெறு மூச்சு விட்டது.
சரியாக இருபது நிமிடம் கழித்து, தன் தலையை தொட்டு ஏதோ யோசித்தது.
அனேகமாக அடுத்து ஒரு கொலைதான்.
நித்தியா நினைத்தது போலவே உருவமும் கொலை செய்ய எதையோ தேடியது.
ஒரு திக் கயிறு போல ஒன்றை தேடி எடுத்துக்கொண்டு நித்தியாவை நோக்கி வந்தது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது..கழுத்தை நெறித்து கொல்வதற்குள் தப்பிக்க வேண்டும்.
“வீல்” என்று கத்தினாள் நித்தியா.
டக் என்று ஓடிப்போய் லைட் ஆன் செய்தது அந்த உருவம்.
ஏன் பயபடுற ….நான் தான் நித்தியா …உன் புருஷன் முருகேசன்.
தூங்கிட்டு இருக்கும் போதுதான் யோசிச்சேன்…
எதிர்த்த வீட்டு அந்த சாப்ட்வேர் engineer ஏன் செத்து போனான்னு.
நானும் இது நாள் வரை வேலை வேலைன்னு இருந்துட்டேன்.
நீயும் பல நாளா, என் வெள்ளை முடிக்கு “டை” அடிங்கன்னு என்கிட்ட சொல்லிட்ட.
அதான், உன் கிட்ட சொல்லாம முதல் முறையா டை அடிச்சேன்.
போய் குளிச்சிட்டு வரேன். பழைய அலுமினிய டப்பாவில் நீ போடுற டையைதான் கலக்கினேன்.
பழைய துண்டு தான். லுங்கியும் பழசுதான். கருப்பானாலும் பரவாயில்லை.
நீ நாளைக்கு உன் face book கில் என் கருப்பு முடியோட ஒரு status போடணும்.
Nithya Murugaesan Feeling Young with Murugaesa பாண்டியன்னு.
நான் பழைய முருகேசனா மாறாப் போறேன்.
அது சரி, எதுக்கு என் Facebook account ட்டை எனக்கு தெரியாம உள்ள போய் நோண்டி பார்த்துட்டு இருக்கீங்க ?
இது மாதிரி இன்னொரு தடவை பார்த்தேன், உங்களை கொன்னேபுடுவேன் முருகேசா.
புருஷன்னு கூட பாக்கமாட்டேன்.
அவ்ளோதானா? 😀
கற்பனை யா ? அனுபவமா?
கற்பனை
Nice pei story…
Good short film story… When will the next story release ???