பிரஞ்சு நாட்டில் ஒருவர் உலோக தகட்டில் புகைப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் என்ற செய்தி மெதுவாக கப்பல் வழியே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இருப்பினும் இந்த உலோக புகைப்படங்களில் ஒரு குறைபாடு இருந்தது. புகைப்படம் எடுத்த பல மாதங்கள் கழித்து மெதுவாக அவை அழியத் தொடங்கும். நிலையான புகைப்படங்கள் எடுப்பதில் சிக்கல் அன்று இருந்தது.
ஆங்கிலேயர்கள் சும்மா இருப்பார்களா என்ன??
William Henry Fox Talbot என்னும் வெள்ளைக்காரர் யோசித்தார். எதற்கு உலோக தகட்டை வைத்து இப்படி கஷ்டப்பட்டு புகைப்படம் எடுக்க வேண்டும் ?
பேப்பர் மீது கெமிக்கலை தடவி படத்தை எடுத்துவிட்டு, பின்பு அதை இன்னொரு உப்பு கரைசலை வைத்து ஏன் அவற்றை நிலை படுத்தக் கூடாது என்று யோசித்தார்.
அவர் கண்டுபிடித்ததுதான் உப்பு காகித போட்டோ கிராபி.
அதை உடனே பேடன்ட் செய்துவிட்டு, ஒரு புத்தகம் எழுதினார். The Pencil of Nature என்ற புத்தகம்தான் அது. உலகின் முதல் photography technical guide இதுதான்.
இதில் மொத்தம் 24 படங்கள்…அதற்கு உண்டான விளக்கங்கள் இருந்தன. இதை commercial பதிப்பாக 1844 ல் வெளியிட…இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
அந்த காலத்திலேயே பாரிஸ் நகரத்தில் முற்போக்கு சமூகம் வாழ்ந்துவந்தது. நம்மூரில் நாடார் சமூகம்தான் முதன் முதலில் பெட்டிக்கடை வைத்து தொழில் தொடங்கினார்கள்.
அதுபோல் பாரிஸ் நகரத்தில் ” நாடார் (Nadar) என்பவர் முதல் portrait studio வை தொடங்கினார்.
கூட்டம் அலைமோதியது. மேல் தட்டு மக்கள், கோட்டு சூட்டு போட்டு நாற்காலியில் ஓவியருக்கு மணிக்கணக்கில் போஸ் கொடுத்தவர்கள் 30 நிமிடம் மட்டுமே அமர்ந்து போட்டோ எடுக்க ஆசைப்பட்டார்கள். என்னது 30 நிமிடமா ???
ஆம், அந்த காலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க குறைந்தது 30 நிமிடம் ஆடாமல், அசையாமல் அமரவேண்டும்.
இதை எப்படி குறைப்பது என்று Alexander Wolcott என்ற அமெரிக்கர் யோசித்தார். அவர் ஒரு பல்கலை வித்தகர். ( Drama critic, essayist, playwright, editor, actor, raconteur, radio personality).
அவர் வீட்டில் 85 அறைகள் இருந்தனவாம் . அவர் கண்டுபிடித்ததுதான் உலகின் முதல் பேடன்ட் செய்யப்பட்ட கேமரா (US Patent No. 1582) . 1840 களில் அட்டகாசமான முதல் commercial கேமரா ரெடி.
இதில் லென்ஸ் எல்லாம் இல்லை. ஒரு மர டப்பா. டப்பா முன் ஒரு ஓட்டை.இதை ஒரு குப்பி கொண்டு மூடி இருப்பார்கள். இது தான் ஓல்ட் லென்ஸ் cap .
இரண்டு மர பலகை இடையே ஒரு காகிதத்தில் கெமிகல் தடவி வெளிச்சம் புகாத வகையில் சொருகி வைத்து இருப்பார்கள்.
இந்த பலகையை டப்பாவில் வைத்துவிட்டு அந்த மர plate க்களை உருவி விடுவார்கள்.
பின்பு ஓட்டையை கையால் திறந்து வெளிச்சம் அந்த கெமிகல் பேப்பரில் படும் படி expose செய்யவேண்டும். சுமார் 5 நிமிடம் ஒருவர் அமர்ந்தால் படம் அந்த காகிதத்தில் படியும்.
இது ஒரு positive பிலிம். உள்ளது உள்ளபடியே வரும். படத்தை அடுத்த 30 நிமிடதிற்குள் process செய்தால் புகைப்படம் ரெடி. இதை வெட் plate process என்பார்கள்.
இப்படி இந்த வெட் plate 1840 களில் பிரபலமாக… இதை தூக்கிகொண்டு மர டப்பாவுடன் போட்டோ எடுக்க உலகம் முழுவதும் கிளம்பிவிட்டார்கள்.
எத்தனை புகைப்படம் எடுக்க வேண்டுமோ அத்தனை plate எடுத்து செல்லவேண்டும். கூடவே இதை process செய்யும் மினி dark ரூம் உள்ள குதிரைவண்டியும் எடுத்து செல்லவேண்டும்.
பணக்கார மனிதர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
இது ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க 1840 களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தடம் பதிக்க ஆரம்பித்தார்கள். கப்பலில் வியாபாரம் செய்ய வந்த அவர்கள் இங்கு கட்டப்பட்ட கோவில்களை கண்டு வாயடைத்து போனார்கள்.
அவர்களின் கண்ணில் முதலில் பட்டது அஜந்தா மற்றும் எல்லோரா குகை சிற்பங்கள். 1847 ஆம் ஆண்டு William Armstrong Fallon என்ற ஆங்கிலேயர் ஒரு கேமராவோடு வந்தார். அவர் அஜந்தா எல்லோரா கோவில்களை இந்த வெட் plate கேமரா வைத்து புகைப்படம் எடுத்து ஒரு புத்தகம் போட்டு இங்கிலாந்தில் விற்றார்.
இதை பார்த்த இங்கிலாந்து ராஜ வம்ச ஆட்சியாளர்கள் வாயை பிளந்தார்கள். 1870 கள் வரை இந்த மர டப்பா கொஞ்சம் கொஞ்சமாக develop ஆகி இருந்தது. லென்ஸ் லென்ஸ் காப் எல்லாம் வந்துவிட்டது.
இருந்தாலும் வெட் plate டெக்னாலஜி தான்.
அப்போது இந்தியாவில் Archeological Survey of India என்ற அமைப்பை ஆங்கிலேயர்கள் 1970 ல் நிறுவி இருந்தார்கள். அதில் ஊர் ஊராக சென்று சரித்திரம் வாய்ந்த கோவில்களையும், கலை பொக்கிஷங்களையும் புகைப்படம் எடுக்க இங்கிலாந்து மகாராணி இரண்டு போட்டோ கிராபர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார்.
ஒருவர் Thomas Biggs – அவர் பிஜப்பூர் பதாமி கோவில்களை 1885 ஆண்டு படம் பிடித்தார். இன்னொருவர் Linnaeus Tripe. அவரை சென்னாப்பட்டினம் என்னும் சென்னைக்கு அனுப்பிவைத்தது.
General Alexander Cunningham என்பவர்தான் இதன் தலைவர்.
Linnaeus Tripe ரயிலில் சென்னை வந்தார். அவர் வரும் போது இங்கிலாந்தில் இருந்து கப்பலில் எடுத்துவந்த கேமரா மற்றும் வெட் போட்டோ plates மற்றும் சிறிய processing lab setup எடுத்துவந்தார்.
1857 ல் அவரை சென்னையின் official photographer என்று கவர்னர் அறிவித்தார்.
அதுவரை தமிழர்களுக்கு photograph என்றாலே என்னவென்று தெரியாது.
இந்த வெட் plates மற்றும் லேப் setup தூக்கிகொண்டு வர assistant தேவைப்பட்டது. சி.அய்யாசாமி என்பவரை தன் assistant டாக சேர்த்துக்கொண்டு தென் தமிழகம் நோக்கி புறப்பட்டார்.
வெட் plates மிக கனமானவை. ஒரு நாளில் இரண்டு படங்கள் மட்டுமே எடுக்க முடியும். எடுத்து முடித்தபின் அதை எவ்வாறு அமிலங்களை கொண்டு கழுவி பிக்ஸ் செய்ய வேண்டும் என்பதை அய்யாசாமிக்கு சொல்லிகொடுத்தார்.
இங்கிலாந்தில் இருந்து கொண்டுவந்த வெட் plates முடிந்து விட்டபின்பு, அவர்களே வெட் plates செய்ய தொடங்கினார்கள்.
இது ஒரு கொடூர வேலை. முடிந்தால் படித்து பார்க்கவும்.
http://unblinkingeye.com/Articles/WPC/wpc.html
சில்வர் நைட்ரேட் கெமிக்கலை போட்டவுடன் கருமையான புகைவரும். நச்சும் கூட. இதை அந்த பிளேட்டில் படியவைப்பார்கள்.
உண்மையாகவே கரும் புகையை மூட்டி ஒரு plate டில் படங்களை பதிய வைத்ததால், இந்த படங்களை முதலில் புகையினால் வந்த படம் – புகைப்படம் என்றார்கள்.
அய்யாசாமி தான் புகையை ஒரு இருட்டு அறையில் மூட்டுவார். தினம் ஒன்று இரண்டு பலகைகளை ரெடி செய்வார்கள். பின்பு அதை படம் பிடித்து அங்கேயே கழுவி காயவைப்பார்கள்.
இப்படி அவர்கள் ஒரு நடமாடும் ஆய்வு கூடத்துடன் சென்று புகையை மூட்டி பலகைகளை வைத்து எடுத்து படங்கள்தான் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்கள்.
இவர்கள் சென்ற இடம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி. சுமார் பத்து வருடங்களில் இந்த புகையை மூட்டி எடுத்த படங்கள் சென்னை மாகாணத்தில் பிரசித்தி பெற்றன.
இவர்கள் எடுத்த படம் தான் மேதராசபட்டினத்தின் முதல் புகைப்படங்கள். அந்த படத்தில் காட்டும் படங்கள் கூட இவர் எடுத்ததுதான்.
1862ல் இவர் எடுத்த படங்களை ஆர்தர் என்பவர் Poodoocotah, Madura, Ruakotta, Seringham, the Elliot Marbles, என்று ஒரு collection ஏற்படுத்தி சென்னையில் exhibition நடத்தினார்.
1857 ல் மக்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சாமாக அதிகரிக்க இவரை அரசாங்கம் பர்மா அனுப்பியது.
போகும் போது, தன் அணைத்து புகை பட கருவிகளையும் அய்யாசாமியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்பு அய்யாசாமி சென்னையில் புகையை மூட்டி பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்தார்.
புகைப்படம் என்ற சொல் தமிழில் பிரபலமானது. 2002 ஆண்டு அய்யாசாமியின் பேரனை சென்னையில் சந்தித்தது தனிக்கதை.
சென்னையில் புகை மூட்டி படம் எடுக்கும் அதே வேலையில், அமெரிக்காவில் ஒரு பண்ணை வீட்டில் ஒருவர் புகை பிடித்துக்கொண்டே யோசித்துக்கொண்டு இருந்தார்.
அவர் தான் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (George Eastman)
எதற்கு இப்படி கஷ்டப்பட்டு புகையை வைத்து positive படம் எடுக்கிறார்கள் என்று நெகடிவ் திங்கிங் செய்தார்.
அவர் சுருட்டில் இருந்து வந்த புகையின் நிழல் தரையில் தெரிந்தது.
புகைப்படம் நிழற்படம் ஆகும் நாள் அன்று கலெண்டரில் கிழிக்கப்பட்டது.
தொடரும்
ஸ்ரீதர் ஏழுமலை
First Camera
Pugai Padam Plate
Portable lab
Dabba
Madras _ PhotoCLub
Wow! Thanks again for the explanation and the pictures… excellent!
A rare personality having deep knowledge and interest in all the fields. (Y) Ella ball um sixer adikaareenga. _/_
Hats off to you for keeping this going in a story format. Love reading this.
சொல்ல வார்த்தைகளில்லை நண்பா… இன்னும், இன்னும், என மனம் நாடுகிறது….
கொண்டு வாருங்கள் பகுதி மூன்றை….
எங்கேயிருந்து இவ்வளவு தகவல்கள் சேகரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை .
ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அறிவுத்திறனுக்கு வாழ்த்துக்கள்!
VERY VERY VALUABLE INFORMATION.THANK YOU VERY MUCH SRIDHAR SIR
Clas …
Informative. Good.
Superb