இந்த புகை படத்தை ஆப்ரிக்காவில் எடுத்தேன்.
மேல ஒரு கிளையில் பிணம் தின்னி கழுகு (வல்லூறு) ஒன்றும் , அதன் கீழே இன்னொரு கிளையில் சிட்டுக்குருவி ஒன்றும் எதிர் எதிர் திசைகளில் பார்த்துக்கொண்டு இருந்தன.
சுமார் பத்து நிமிடங்கள் கடந்தும் இரண்டும் இரைக்காக காத்து இருந்தன. எது முதலில் பறந்து போகும் என்று காத்து இருந்தேன்.

நிசப்தமான மாலை நேரம். என் புகைப்பட கருவியை மெதுவாக சப்தமில்லாமல் எடுத்து பொருத்தினேன்.
பதினைந்து நிமிடங்கள் கடந்து ” கிளிக்” என்று ஒரு புகை படம் எடுத்தேன்.
அந்த சத்தம் கேட்டு இரண்டும் ஓரே நேரத்தில் பயந்து பறந்து சென்றன.

வாழ்க்கையில் எளியவனுக்கு உள்ள அதே பயம் தான் வல்லவனுக்கும் உள்ளது.
அந்த பயம் எதனால் என்று தெரியாதவரை.

For high Resolution: ( www.sridar.photography)

http://www.sridar.photography/p966668437/h33c8c1d1#h33c8c1d1