இது என் Creative Product. அசிங்காமா இருந்தாலும் இது தான் உண்மை.
சுமார் 8 வருஷம் முன்னாடி என் பையன் ஸ்கூலில் நடந்த Fancy Dress போட்டிக்கு நான் என் Creative மூலையை கசக்கி செய்த நசுங்கிய ரயில் என்ஜின் தான் இது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு ஸ்கூலில் போட்டி என்றால், சில பள்ளிகளில் அது பெற்றோர்களுக்கு உண்டான போட்டி.
ஸ்கூலில் எந்த போட்டி என்றாலும், நான் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் அந்த குழந்தைக்கு இருக்கோ இல்லையோ, பெற்றோர் சிலருக்கு அந்த வெறி இருக்கும்.

சிலருக்கு அது தன்மான பிரச்சனை.
நான் எவ்வளவு பெரிய அறிவாளி..???
என் பசங்க மட்டும் எப்படி பரிசு வாங்காம இருக்கலாம் என்று அவர்கள் செய்யும் அதும்பும், அடிக்கும் லூட்டிகளும் பல பல.

எல்லா குழந்தைகளுக்கும் எல்லா திறமைகளும் இருக்காது. வராத ஒன்றை வரவைக்க கதற கதற …அழவைத்து செய்யும் அட்டூழியம்.
குழந்தைகளுக்கான போட்டியும், கிரியேடிவ் home works போன்றவை குழந்தைகளுக்கு உண்டானது என்பதை சில பள்ளிகளும், வாத்தியார்களும் மறந்து விடுவார்கள்.

உதாரணம்… என் பையனுக்கு கொடுத்த homework இது தான்…
வீட்டில் உள்ள materials வைத்து தராசு (Weighing Scale) ஒன்றை குழந்தைகளே செய்து வரவேண்டும். என் பையன் என்னிடம் வந்து…
நீங்களே இதை செய்து கொடுங்கள் என்றான்.
உடனே நான் ….உனக்கு தான் homework …எனக்கு இல்லை …உனக்கு என்ன முடியுமோ அதை செய் என்றேன்.

அதற்கு அவன் …இல்லை இல்லை ….மத்த பசங்க எல்லாம் சூப்பரா அவங்க அப்பா, அம்மா வச்சு செஞ்சுட்டு வருவாங்க… எனக்கு prize கிடைக்காது என்றான்.
அதுக்கு நான்…அப்பிடி எல்லாம் ஸ்கூலில் prize கொடுக்க மாட்டாங்க …Students அவங்க மூளையை உபயோகித்து செய்த தராசுக்கு தான் பரிசு கிடைக்கும் என்றேன்.
அப்படியே கொடுக்கலைனாலும் கவலை இல்லை, முடிஞ்சத செய்னு சொல்லிட்டேன்.

அவனும் மூஞ்சை தொங்க போட்டுக்கொண்டு ஏதோ ஒரு காகிதத்தில் தராசு செய்துகொண்டு சென்றான்.
Evening சோகமா வந்தான்…என்ன பரிசு கிடைச்சுதா என்றேன்?

ஹ்ம்ம் ஹ்ம்ம் இல்லை …நான் தான் அப்பவே சொன்னேனே…
கிளாஸ் மேட் ஒருத்தனின் அப்பா ஒருவர் , கடைக்கு சென்று நிஜ தராசு ஒன்றை வாங்கி கொடுத்து முதல் பரிசை தட்டி சென்றுவிட்டாராம்.

அட கொடுமையே …
அது வாத்தியாரம்மா மேல தப்பு ….கவலை படதே அடுத்தமுறை நல்லா செய் என்று விட்டுவிட்டேன்.

அடுத்த ஆறுமாதத்தில் வந்ததுதான் இந்த Fancy Dress போட்டி.
வீட்டுக்கு வந்த அவன் …இந்த முறை நீங்கதான் கண்டிப்பா ஹெல்ப் செய்யணும் என்றான்.

ஓகே …என்ன செய்வதாய் பெயர் கொடுத்துட்டு வந்தே ? என்றேன்.
தாமஸ் Train என்றான்.

எனக்கு தலை சுத்தியது.

இதுக்கு நான் போய் நிஜ ரயில் வண்டியா வாங்கிட்டு வரமுடியும்?
அது மட்டும் இல்லாம ….அந்த train ல நின்னு அவன் வண்டியை ஓட்டிக்கிட்டே ” Hi, I am Thomas – The Tank Engine” என்று வீர வசனம் பேசவேண்டுமாம்.
என்னால் கண்டிப்பா செய்யமுடியாது என்றேன். உடனே என் மனைவியும் மகனும் …உங்க creativity டுக்கு இது எல்லாம் ஜுஜுபி என்றார்கள்.

ஒரு நாள் தான் டைம். ஒரு பெரிய அட்டை பெட்டி, கோவை செல்வ சிங் கடையில் நாலு பிளாஸ்டிக் மூடி என்று ஆரம்பித்து ஒரு ஆறு மணி நேரம் வேண்டா வெறுப்பாக செய்த அந்த அற்புத train தான் இது.
இதில் நடுவே உள்ள ஒரு ஓபனிங் இருக்கும். அதில் அவன் நின்னு அதை கையில் தூக்கி பிடித்து நடந்துகொண்டே ” பாடிக்கொண்டே நடக்கணும்”

இதன் Train அழகை பார்த்த என் மகனும் மனைவியும் என் creativity யை காரி துப்பினார்கள்.
அதை துடைத்துக்கொண்டு, அடுத்த நாள் அவனுடன் ஸ்கூல் சென்றேன்.

பரிசு கிடைக்கவில்லை.

காரணம் அவன் கிளாஸ் மேட் அப்பா, நிஜ பச்சை கிளி இரண்டை வாங்கி வந்து தன் பொண்ணு கையில் கொடுத்து ஆண்டாள் வேசம் போட்டு முதல் பரிசை தட்டிட்டு போயிட்டார்.