அதி புத்திசாலியை இந்த உலகம் பைத்தியக்காரனாக பார்க்கும்.
கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் கொடுக்காமல் தன்னிடம் அழைத்துக்கொள்வார்.

The Imitation Game – என்ற திரைப்படம் ஒரு அட்டகாசமான உண்மை சம்பவம். மிஸ் செய்யாமல் பார்க்கவும்.
இந்த திரைப்படம், இன்று நாம் உபயோக்கிக்கும் கம்ப்யூட்டரின் கணித அடிப்படையை உடைத்து காண்பித்த இங்கிலாந்து கணித மேதையின் உண்மை கதை.
அவர் பெயர் அலன் டூரிங் Alan Mathison Turing.

இன்று நீங்கள் விளையாடும் வீடியோ கேம்மின் அடிப்படை ” Artificial Intelligence” . இதன் கம்ப்யூட்டர் கோடிங் பெயர் ” AI coding”.

ஒரு கேம் கேரக்டர் பல மில்லியன் probability யில் உங்கள் keyboard பட்டன் அழுத்தத்திற்கேற்ப, pre code செய்த ஒன்றை அதுவாக செலக்ட் செய்வது தான் Artificial Intelligence.
படத்தின் கரு இதுதான்.

படத்தில் சொல்லாத ஒன்றை மட்டும் சொல்கிறேன். மீதியை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலன் ஒரு பிறப்பால் ஆங்கிலேயர் என்றாலும் அவர் மூளையின் கரு இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் சத்ரப்பூர் என்னும் ஊரில் உருவானது. கரு வளர்ந்தது தமிழ் நாட்டில்.
அவர் தந்தை இந்தியாவில் போஸ்டல் சர்வீசில் வேலை பார்த்தார். அம்மா Madras Railways ல் தலைமை engineer.
இவர் அடிக்கடி இங்கிலாந்து செல்லும் போது அவர் இங்கிலாந்தில் பிறந்தாலும் அவர் கரு வளர்ந்தது நம் சிங்கார சென்னையில் என்பது நமக்கு பெருமையே.

ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது என்பதற்கு இவர் வாழ்க்கை ஒரு சாட்சி.
தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி அலன் டூரிங் எனபது படத்தை பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

Alan Turing: The Enigma by Andrew Hodges என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் Benedict Cumberbatch ஆலன் டூரிங்காக வாழ்ந்து உள்ளார்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கலாம். ( பல காட்சிகளில் வரும் ஓரின சேர்க்கை வசனங்கள் தவிர்த்து )
உண்மை கசக்கும். எந்த வித சமரசமும் செய்யாமல் எடுக்க பட்ட படம்.

எனக்கு பிடித்தது: அலன் டூரிங் நடிப்பு, அவர் சாவதை காட்டாமல் இருப்பது, மென்மையான விஞ்ஞான உண்மை காதல்.

பிடிக்காதது: ஓரின சேர்க்கை வசனங்கள் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். இருந்தாலும் இதுவே முடிவுக்கு காரணம் என்பதால் இதுவும் சரி தான்.

www.sridar.com rating: 8.0