ஒரு சுறாவை கத்தியை வைத்து வெட்டினால் ரெட் கலர் ரத்தம் வரும். மாற்றான் போல் இரட்டையாக தலை கூட சுற்றும்.

லிங்கா பார்க்க உங்களுக்கு ஏழாம் அறிவு வேண்டும்.

 

லிங்கா ஒரு சூப்பர் கதை. நல்ல படமும் கூட. என்ன இது 1980 இல் திரைக்கு வந்து இருக்க வேண்டிய படம். கோச்சடையானில் தான் விட்ட சொந்த காசை அவசர அவசரமாக ரசிகனின் பாக்கெட்டில் இருந்து கலெக்ட் செய்ய எடுத்த அவரச கேசரி. ரஜினியின் கேசரிக்கு என்றுமே ஒரு Formula உண்டு.

அஞ்சு பஞ்ச் Dialogue, நாலு ஸ்பீட் டான்ஸ், மூணு தத்துவம், ரெண்டு தத்துவ பாட்டு, ஒரு பிளாஷ் back, ஒரு துரோகம், ஒரு ஏமாற்றம், ஒரு தியாகம். இதை அவர் சூப்பர் வேகதில் ஒரு ஒரு இளைமையான ஹீரோயினுடன் வந்து ஸ்டைலுடன் வந்து சொல்லுவார்.

இது ஒரு மேஜிக். இதை செய்வது அவ்வளவு எளிது இல்லை. இதை தான் மற்ற அனைத்து ஹீரோக்களும் காப்பி செய்ய நினைப்பது. இது ரஜினிக்கு மட்டுமே உண்டான பார்முலா. எந்த கொம்பனாலும் அதை காப்பிஅடிக்க முடியாது. காரணம் அது ஒரிஜினல். அவரே செதுக்கியது.

ஒரு காலத்தில் எல்லோரும் இதை ரசித்தோம். அதற்காக அதையே இன்றும் கொடுத்தால் வேலைக்கு ஆகாது.

 

பழைய ரஜினியை வெல்ல, இப்ப நடிக்கும் ரஜினியாலும் முடியாது. லிங்காவில் இது தான் பிரச்சனை. வயதான ரஜினி பழைய ரஜினியை வெல்ல நினைக்கிறார்.

வயதாகும் போது ஒரு நடிகன், இன்றைய மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, தன் கதையின் களத்தையும் நடிப்பின் வெளிப்பாடுகளையும், பழைய பார்முலாவை கொஞ்சம் மாற்றி அமைத்தால் வெற்றி பெறலாம். அமிதாப், ஜாக்கி சான் போன்றவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ரஜினியை போல சுட்டுகொண்டவர்கள் கன்னடத்தில் ராஜ்குமார், ஆந்திராவில் NTR. போதாத காலத்தில் ஸ்ரீதேவியுன் ஆடியும், ஜெயப்ரதாவுடன் ஆடியும் அடங்கினார்கள். லிங்காவும் ரஜினிக்கு ஒரு பாடமாக கண்டிப்பாக இருக்கும்.

மீண்டும் வேறு ஒரு கதை களத்தில் வருவார் என்று நம்புவோம்.

 

லிங்கா ஏன் தோற்றது?

 

1.முதலில் கதை களம்.

முதலில் கதைக்கு வருவோம். இது முல்லை பெரியார் கதையை கொஞ்சம் உல்டா செய்து ஹீரோயிசம் எனும் இம்சையை கலந்து எடுத்த படம் தான். கதையில் பெரிய லாஜிக் பார்க்கவேண்டாம் தான்.

அதற்காக ஹிஸ்டரியும் தெரியாமல், geography யும் புரியாமல் எடுத்தால் 1980 யில் வேண்டுமானால் கதை தட்டி விசில் அடிப்பான் தமிழன். ஜப்பானில் சூரியன் உதிக்கும் போது போட்ட டீயில் சக்கரை குறைவு என்று அமெரிக்காவில் ட்வீட் செய்யும் உலகில் அதர பழசான ஒரு கான்செப்ட்.

ஒரு கிராமம் அதற்கு பெயர் சோலையூர். மலையூர் மம்பட்டியான் காலத்து கிராமத்தோடு ஒரு பெயர். ஒரு கோயில், ஒரு ஜமீன், ஒரு குத்துவிளக்கு என்று ஆரம்பம்.

ஒரு ஜமீன் கேரக்டர் தன் சொத்தை, கிராமத்துக்கு நலனுக்காக விட்டுட்டு ஊரை விட்டு போவதை இதுவரை தமிழன் 2589 முறை பார்த்துவிட்டான். அணையை ஸ்ட்ரோங்காக கட்ட லிங்கா காட்டிய அக்கறை கதையின் அடிப்படையில் காட்டாமல் விட்டது தோல்வியின் முதல் காரணம்.

 

2. இரண்டாவது லாஜிக்:

சினிமாவில் லாஜிக் பார்க்கவேண்டாம் தான். கதையில் ஓட்டை இருக்கலாம். இங்கே ஓட்டைக்குள் தான் கதையே உள்ளது. எல்லோருக்கும் தெரியும் கரிக்காலன் அணையை கட்டினார் என்று. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் அவர்களின் ஆட்சியில் அணைகளை கட்டினார்கள். தமிழன் ஆங்கிலேயன் ஆட்சியில் அணையை கட்டினான் என்பது லாஜிக் ஓட்டை. ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு இந்தய ஜமீன் ஒரு அணையை கட்டினார் என்பது ஒரு ஆகாச புளுகு.

அடுத்தது ஆங்கிலயே ஆட்சியில் ஒரு தமிழ் கலெக்டர். கொஞ்சமாவது ஹிஸ்டரி லாஜிக் வேண்டும், இது ஒரு காதில் பூ சுற்றும் கதாபாத்திரம். இதை தவிர கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள்.

உதாரணத்துக்கு, இந்திய கொடி அணை கட்டும் போது பறக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்புதான் 22 July 1947 அன்று இந்தயாவுக்கு கொடி என்று ஒன்று வடிவைமைக்கபட்டது.

The Swaraj Flag என்ற காந்தி கொடிதான் 1947 வரை பறந்தது. ஆனால் ஆணை கட்டும் போது கிராம மக்கள் இந்திய கொடியை தூக்கிகொண்டு ஓடுவதால் தான் இன்னும் தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைபதில்லை.

சில வசனத்தில் வறட்சி என்று சொல்லுகிறார்கள். அடுத்த காட்சியில் மழை வருகிறது. வறட்சியான ஊரில் ஆறு ஓடுகிறது.

இதை தவிர, தண்ணீர் இல்லாத வறட்சியில் வாடும் ஊரில் பக்கட் தண்ணியை கணக்கு வாத்தியார் மேல் ஊற்றுவது, ஊரே பச்சை பசேல் என்று இருப்பது என்று பாடாய் படுத்துகிறார்கள்.

 

3. நடிகர்கள் , நடிகைகள்.

இந்த லிஸ்ட் படிங்க ….. விஜயகுமார், சௌந்தரராஜன், ராதாரவி, நிழல்கள் ரவி என்று 60+ என்று ஒரு பெரிய பட்டாளம் எப்படி இளமை ஜமீனோடு ஒத்து போகும்? ஒரு காமன் சென்ஸ் உள்ள எந்த டைரக்டரும் ஒரு இளைமையான ஜமீனுக்கு 60+ வயசான கேரக்டர்களை supporting ரோலில் நடிக்க வைக்க மாட்டார்.

சொனாக்க்ஷி என்ற heroine மொத்தம் ” நிறுத்துங்க ….நிறுத்துங்க” என்று 11 முறை படத்தில் சொல்கிறார். அனுஷ்காவின் ஜாக்கெட்டில் ஒரு காமெரா உள்ளது. இது தான் இந்தஇரண்டுheroine களால் use.

4. பாடல்கள்:

படத்தில் ஓரே ஒரு பாட்டு மட்டும் சூப்பர். ஒரு பர்த்டே பார்டியில் ” Happy Birthday to you” என்று ஒரு இடத்தில் கொஞ்சம் பாடுவார்கள். கேட்க இனிமையாக இருந்தது. முழு “Happy Birthday to you” பாட்டையும் போடாமல் ரகுமான் ஏமாற்றி விட்டார்.

 

5. சண்டை:

ஏன் போடுறோம் என்று போடுபவருக்கும் தெரியாது. பார்பவர்களுக்கும் தெரியாது.

 

6. Love Scenes:

லத்திகாவில் பவர் ஸ்டார் எப்படி ரேகாவுடன் டூயட் பாடுவாரோ…அதே பீலிங் . செம…செம…

 

7. கிளைமாக்ஸ்: இதை நீங்களே பாருங்க. எல்லா ரஜினி ரசிகனும் படம் முடிஞ்சு ஏன் பேசாம வெளிய வந்து …சூப்பர்னு சொன்னாங்கன்னு புரியும்.

2014 லில் அமெரிக்க ராணுவம் லேசர் துப்பாக்கி கொண்டு 300 மைல் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் நவீன துப்பாக்கியை கண்டு பிடித்தது. நாசா மார்ஸ் கிரகத்துக்கு Mars Land Roverவிண்கலம் அனுப்பியது. இந்தியா கூட சந்திராயன் அனுப்பி சாதனை செய்தது.

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார் என்று சக்தி மான் பார்க்கும் பொடிசு கூட புரிந்துகொள்ளும் படி அமைத்து ரவிக்குமார் …. கலக்கிவிட்டார்.

 

மொத்தத்தில் ரஜினி ரசிகன் வருந்தி பார்த்த படமாக இது கண்டிப்பாக இருக்கும். ரசிகன் இல்லாதவன் நொந்து பார்த்த படம்.

இது தலைவன் நடித்த படம்..அதனால் சூப்பர் என்றோ, தலைவருக்காக ஒரு முறை பார்க்காலாம் என்றோ , ஜஸ்ட் ஓகே என்றும் சொன்னால் அது மனசு ஆறாமல் சொல்வது.

மொத்தத்தில் இது ரஜினி படமும் இல்லை. ரவிக்குமார் படமும் இல்லை.

 

இது மிக நீளமான மகா மரண மொக்கை படம்.

 

இதை போன்ற ஒரு படத்தில் விஜய் அல்லது சூர்யா நடித்து இருந்தால் எப்படி எல்லாம் உலகம் ஏசும் ? கிழித்து தொங்க விடுவார்கள்.

ரஜினி ஒரு நடிகன் மட்டுமே.. நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்லும் சினிமா ரசிகர்கள் தமிழகத்தில்இல்லாமல் போவதால்தான் MGR முதல் ஜெயாலலிதா வரை முதல்வர்கள் ஆனார்கள்.

ரஜினிக்கும் அப்படிதான் உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

கண் மூடிக்கொண்டு ஓட்டும் போடலாம். ரஜினி அரசியலுக்கு வரலாம்.

 

கவாஸ்கர் century அடிக்கும் போது பார்த்து ரசித்த என் அப்பா, டெண்டுல்கர் அடிக்கும் போது கவாஸ்கர் போல் இல்லை என்றார்.

என் மகன் டோனி சூப்பர் என்று சொல்லும் போது டெண்டுல்கர் போல் இல்லை என்றேன்.

அடுத்து கோலி , கோழி , கௌதாரி என்று வரத்தான் செய்வார்கள்.

அப்போது டெண்டுல்கர் புத்தகம் எழுதிக்கொண்டும் , கவாஸ்கர் கமெண்டரியும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் இருவருமே legends தான். யார் இல்லை என்று சொன்னது.

இது ஒரு வகை ஏக்கம். சரோஜாதேவி பார்த்தவனுக்கு சிம்ரனை பிடித்தாலும் என்றும் சரோஜாதேவிதான் சூப்பர்.

ரஜினியும் சூப்பர் ஸ்டார் தான். அதை அவர் அனுஷ்காவுடன் ஆடி நிரூபிக்க வேண்டியதில்லை.

 

www.sridar.com Rating: 2.5