இன்று மீடியா உலகை கலக்கிக் கொண்டு இருக்கும் செய்தி சமீபத்தில் Sony Picturesல் நடந்த Computer Hack. IT உலகில் இதை செக்யூரிட்டி breach என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் மென் கோப்புகளை, அவர்களுக்கு தெரியாமல் வெளி உலகில் இருந்து தொர்பு கொண்டு அதை தரவிறக்கம் செய்து வெளியிடுவார்கள். அல்லது அழித்து விடுவார்கள். இது ஒன்றும் புதிது இல்லை ….NASA முதல் நாசமா போன பல இடங்களில் இது முன்னரே நடந்து உள்ளது. இதை பொழுது போகாமல் இருக்க Anonymous என்ற ஒரு குரூப் செய்து பிரபலம் அடைந்தது. நாட்டின் பொருளாதார மற்றும், ராணுவ ரகசியத்தை அடைய இன்னொரு நாடு இதை கை கூலிகள் வைத்தும் இன்றும் செய்து வருகின்றன.
பெரும்பாலும் இந்த ஹாக்கிங் இன்னொருவரின் கடவு சொல்லை எடுத்து, அவர்களின் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவே அதிகம் பயன்படுத்தபட்டு உள்ளது. 2010 இல் டிஜிட்டல் பாம் மூலம் நாஸ்டாக் முடக்கப்பட்டது. In 2012 இல் ஈரான் சவூதி எண்ணெய் நிறுவனமான Aramco வின் 30,000 கம்ப்யூட்டர்களை முடக்கியது.
சோனி நிறுவனத்தில் Nov. 24 அன்று நடந்த ஹாக் ஒரு அரசியல் மற்றும் மீடியா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முறை எல்லோர் கண்ணும் குண்டு மாமா – வட கொரியன் கிம் ஜாங் உன் என்னும் உப்பிய மசால்வடை மேல் சந்தேகம் கொள்கின்றது .
காரணம் சோனி நிறுவனம் ஒரு படம் வெளியிட உள்ளது. “The Interview,” a comedy about a plot to kill North Korean leader Kim Jong-Un. இதையொட்டி அந்த நிறுவனத்தில் உயர் மட்டத்தில் நடந்த ஈமெயில் உரையாடல்கள் வெளியே வந்து அந்த நிறுவனத்தை வாட்டி எடுக்கிறது.
குறிப்பாக ஏஞ்செலினா ஜோலி ஒரு சுமார் நடிகை என்றும், அதிக ஈகோவுடன் brad பிட்டை கெடுத்தவர் என்று உயர்மட்ட நிர்வாகிகள் பேசியது உட்பட வெளியாகி மீடியா உலகில் உள்ளே நடுக்கும் அரசியலை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தாதால் இது இப்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஹாக். இதோடு இது நிற்கவில்லை …கறுப்பின ஒபாமாவுக்கு ” “Django Unchained” படம் பிடித்து இருந்ததா இல்லையா என்ற சோனியின் Chairwoman Amy Pascal யின் கேள்விகள் உட்பட பல வெட்டவெளியில் வந்து அரசியல் புயலை கிளப்பி உள்ளது.
மேலும் சுமார் 47,426 சோனியில் பணி புரிந்த ஆட்களின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் வெறும் Encrypt செய்யாத எச்செல் file லில் இருந்து , IT security உலகின் பெரிய அதிர்ச்சி. இதில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நம்பரும் அடக்கம். இதை தவிர அடுத்துவரும் james bond movie 300 மிலியன் செலவில் வர இருப்பதும், இது budget விட மிக அதிகம் என்பதும் சோனியை கவலை அடைய வைத்து உள்ளது.
சோனியில் கறுப்பின, வெள்ளை சம்பள பாகுபாடு முதல் உள்ளே வேலை பார்க்கும் அனைவர்க்கும் இருக்கும் வருத்தம் வரை எதுவும் விட்டுவைக்கவில்லை. இதை வெளியிடும் முன்பு சோனி அதிபருடன் பேரம் நடந்ததாகவும் அது படியாமல் போக அனைத்தும் வெளிய வந்ததும் பெரும் ஆச்சிரியம் .
இப்போது சோனி நிறுவனத்துக்கு தேவை ஒரு IT நேபாளி கூர்க்கா .
Leave A Comment