என் நண்பர், தன் ஒன்பது மாத குழந்தையை புகைப்படம் எடுக்க என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர், மனைவி சீன நாடு. சீன மரபியல் கொண்ட பிலிபினோவை Sangleys என்பார்கள். மாமனார், மாமியாரும் அன்று நண்பரின் வீட்டில் இருந்தார்கள். அந்த பெரியவர்கள் கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சம் பிலிபினோ, கொஞ்சம் Chinese கலந்து பேசினார்கள். எனக்கு சுத்தமாக புரியவில்லை. நான் பேசுவது அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் புரிந்தது.

போட்டோ எடுக்க போனவனுக்கு அவுங்க பேசுறது புரிஞ்சா என்ன? புரியாட்டி என்ன? போட்டோ shoot மத்தியம் மூன்று மணிக்கு. காரணம், குழந்தை இரண்டு மணிவரை தூங்கும் அதனால் மூன்று மணிக்கு வர சொன்னார்.

நானும் மூன்று மணிக்கு சென்றேன். குழந்தை மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தது. நாலு மணி ஆன பின்பும் குழந்தை தூக்கத்தில் இருந்து எழவில்லை. நண்பர், அவர் மனைவி, மாமனார், மாமியார் என அனைவரும் டிப் டாப் டிரஸ் போட்டுக்கொண்டு குழந்தை தூக்கத்தில் இருந்து எழ வெயிட் செய்து கொண்டு இருந்தார்கள்.

குழந்தை தூங்கிக் கொண்டேதான் இருந்தது. மணி ஐந்து ஆனவுடன் எனக்கு பொறுமை இல்லை, சரி மீண்டும் reschedule செய்யலாம் என்று சொன்னேன்.

நண்பர், உடனே இதோ எழுந்துவிடும் என்று மனைவியை மாடிக்கு அனுப்பி, தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்து வரசொன்னார். அவரும் அரை தூக்கத்தில் இருந்த குழந்தையோடு போட்டோ சூட்டுக்கு வந்தார். நண்பரும், மனைவியும் குழந்தையை ரெடி செய்ய, குழந்தை தூக்க கலக்கத்தில் அழுது கொண்டே இருந்தது.

மாமனார், மாமியார் அனைவரும் ரூபி ரூபி …என்று கூப்பிட குழந்தை அழுவதை நிறுத்தியது.

நான் நின்று கொண்டு இருந்த அவர் மாமனாரிடம், “உங்க குழைந்தையின் பெயர் என்ன? ” என்று கேட்டேன். அதற்கு அவர், ” அவ பெயர் ரூபி என்றார். அவர் மாமியாரும் ஆமாம் ரூபி தான் என்று தலை ஆட்டி, ரூபி ரூபி என்று கூப்பிட்டு காட்டினார். உடனே குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு இவர்களை பார்த்து சிரித்தது”

உடனே நான் டக் என்று லைட்ஸ் on செய்து, குழந்தையை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். முதல் shot அம்மாவும், குழந்தையும்.

குழந்தை அழும்போது நான் “ரூபி” கொஞ்சம் சிரி, Come On Ruby ..Smile என்பேன். உடனே குழந்தை அழுவதை நிறுத்திவிடும். ரெண்டு மூன்று தடவை இந்த டெக்னிக் வொர்க் அவுட் ஆகியது.

இரண்டாவது Shot – நண்பர், அவர் மனைவி, குழந்தை. “ரூபி” கொஞ்சம் சிரி, Come On Ruby ..ஸ்மைல் என்றேன். குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. நண்பர் சங்கடமாகவும், அவர் மனைவி சிரித்துக்கொண்டும் போஸ் கொடுத்தார்கள்.

அதன் பின் குரூப் போட்டோ எடுக்கும் போது குழந்தை, மீண்டும் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது, நிறுத்தவே இல்லை. Come On Ruby ..Smile என்று கொஞ்சி கொஞ்சி கூப்பிடுவேன். குழந்தை அழுதுகொண்டேதான் இருந்தது.

நண்பர் சங்கடமாகவும், அவர் மனைவி சிரித்துக்கொண்டும் போஸ் கொடுத்தார்கள். மாமனார், மாமியார் என்னை முறைத்து கொண்டே போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். நண்பரும் முழித்து கொண்டேநிற்க அவர் மனைவி மட்டும் சிரிப்பார்.

சுமார் ஒரு மணி நேரமும் கம் ஆன் ரூபி சிரி… தான். Come On Ruby ..Smile ….என்று நானும் கொஞ்சாத ஸ்டைல் இல்லை.

நான் கொஞ்சி முடிச்சதும் அவுங்க கச முசன்னு Chinese ல குடும்பத்துக்குள்ள ஏதோ பேசுவாங்க. திருப்பியும் முறைச்சிக்கிட்டு நிப்பாங்க.

ஒரு மணி நேரம் கொஞ்சியும் குழந்தை கடைசிவரை அழுது கொண்டே இருந்தது.

நண்பரை அழைத்து, இப்பிடி போஸ் கொடுத்தா என்னால எடுக்க முடியாது. ஓரே ஒரு snap தான் வேணும். குழந்தை அழுவுது ஓகே. உங்க மனைவியை தவிர, ஏன் மீதி மூணு பேரும் முழிக்கிறீங்க என்று கேட்டேன். அவுங்க மட்டும்தான் நல்லா சிரிச்சு போஸ் கொடுக்குறாங்க ..நீங்களும் அவரை மாதிரி சிரிங்க என்றேன்.

அதுக்கு அவர், நீ என் மனைவியை மட்டும் போட்டோ எடுக்கும் போது சிரிக்க சொல்றீங்க… அதனாலதான் நாங்க எல்லாரும் சிரிக்கலை என்றார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது டேய்.. அதுசரி, ரூபின்கிறது யாருனு? கேட்டேன். அதுக்கு அவர் சோகத்துடன் ” ரூபி என் சம்சாரத்தோட பேரு” என்றார். என் குழந்தை பேர் Grace, ரூபி இல்லை என்றார்.

அப்ப ஏன் உங்க மாமனார் ” உங்க குழந்தை பேரு என்னனு கேட்டதுக்கு ரூபினு சொன்னார் ?” என்றேன்.

நண்பர் மாமனாரிடம் திரும்பி ஏதோ Chinese – இங்கிலீஷ் – பிலிபினோவில் கச முசா family discussion செய்தார்.

திரும்பிவந்த அவர் ” குழந்தை பேருன்னு என்னனு நீங்க கேட்டதை மாமனார், அவரோட குழந்தை பேரைத்தான் நீங்க கேட்கறீங்கன்னு நனைத்து, என் பொண்டாட்டி பெயர சொல்லிட்டார், சாரி என்றார்”

மீண்டும் எல்லோரையும் நிற்க வைத்து ” கம் ஆன் ரூபி…ஸ்மைல் ப்ளீஸ்” ….என்றேன்..எல்லோரும் கொல்”என்று சிரிக்க எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

கம் ஆன் ரூபி…ஸ்மைல் ப்ளீஸ் ….