கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள் கோகிலா
சத்தம் போட்டுக்கொண்டே ரயில் வந்து நின்றது

க்றீச் என்று அருகில் வந்து நின்றது ஒரு பைக்
பெட்டிகளை மெதுவாக எடுக்க ஆரம்பித்தார் சதாசிவம்

எத்தனை மணிக்கு வராங்க என்றான் மனோகர்
பார்வதியம்மா கடிகாரத்தை பார்த்து அதிர்ந்தார்

எட்டு மணிக்குதாங்க Arrival, இன்னும் மூணு மணி நேரம் இருக்கு
ஏங்க மணி அஞ்சுதான் ஆகுது, என் வாட்ச் ரிப்பேரா?

சரி நான் ஏழு மணிக்கு பிக் அப் செய்ய போறேன்
அட ச்சே, தெரியாமல் வேற ஸ்டேஷன்ல இறங்கிட்டோம்.

உங்கப்பா இன்னிக்கு என்ன கூத்து செய்ய போறாரு?
பரவாயில்லை, மாப்பிள்ளைக்கு போனை போடுங்க

எப்ப பார்த்தாலும் என்வீட்டை குறை சொல்லிட்டே இருங்க
அவரை டாக்ஸி எடுத்துட்டு வர சொல்லுங்க, வேற வண்டி இல்லை

போன் அடித்தது, உங்கப்பா தான் லைன்ல. எதுக்கு இப்பவே கூப்பிடுறார்?
கார் வாங்காம வக்கில்லாம, மாப்பிள்ளை என்னத்த வேலையில் கிழிக்கிறாறோ?

இரவு 12 மணிக்கு நான்கு பேரும் டின்னர் சாப்பிட்டார்கள்.

_________________________________________​​​​​

இது ஒரு பின் நவீனத்துவ கதை

முதல் வரி, மூன்றாம் வரி ஐந்தாம் வரி என்று சேர்த்து படிக்கவும்

இரண்டாம் வரி, நான்காம் வரி, ஆறாம் வரி என்று சேர்த்து படிக்கவும்

இரண்டு Situationகளும் கடைசி வரியில் முடியும்