இந்தவாரம் எனக்கு Travel Vaccine போடனும். ஒரு மாதம் தேடி தேடி அலைஞ்சு, சரியான தேதியில் ஒரு ஆஸ்பத்திரியில் Appointment வாங்கினேன்.

டாக்டர் பேரு கப்பார் சிங்கு. புக் செய்யும் போதே நினைச்சேன் அவனும் அவன் பெயரும்…இங்கபாரு கப்பாருன்னு …

விதி யாரவுட்டது..

 

மத்தியம் 1.30 மணிக்கு வர சொன்னனங்க. சென்றேன்.

எனக்கு முன் ஒருவர் அங்கே அமர்ந்து இருந்தார்.

அவருக்கு சுமார் 80 வயசு இருக்கும். வெள்ளைக்கார கிழட்டு தாத்தா. சொட்டை தல, வாயில ஒரு பல் இல்லை.

என்னை பார்த்து சிரித்தார்.

 

பல் இல்லாதவன பார்த்து சிரிச்சு என்ன ஆவ போவுதுன்னு கண்டுக்காம போயிட்டேன்.

Hospital Receptionist மிக அழகாக இருந்தார். அவர் என்னை விசாரித்து உள்ளே அனுப்பினார்.

உள்ளே சென்றால் அங்கே ஒரு அழகான பஞ்சாபி நர்சும், அசிங்கமான பஞ்சாபி ஆம்பிள டாக்டரும் இருந்தார்கள்.

பார்த்த வுடனே தெரிச்சு போச்சு, கப்பாரு ..தாரு மாருனு …

 

டாக்டரை பார்த்தாலே எனக்கு செம எரிச்சல். ஏதோ கடுப்பில் இருந்தான். எதை கேட்டாலும், என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுந்தான்.

முரட்டு டாக்டர், தன் கரடு முரடு வார்த்தைகளில் என்னை அழைத்து சிடு சிடு என்று சோதித்து, என்ன Vaccine போடவேண்டும் என்பதை அந்த அழகிய நர்ஸிடம் சொன்னார்.

எனக்கு ஏன் இந்த அழகிய கிளிகள், ஒரு குரங்கிடம் வேலை பார்கிறது என்று மனதில் தோன்றியது.

 

என்னை அந்த நர்ஸ், ஒரு பெரிய ரூமுக்கு “வாங்க, வாங்க…இந்த டாக்டர் எப்பவுமே இப்பிடித்தான் ஸ்வீட்டி ..

மூடு இல்லைனா சொரிஞ்சிகிட்டே எரிஞ்சு விழுவாறு … நீ ஒன்னும் கவலை பாடாதே ஸ்வீட்டி , நான் இருக்கேன் ” என்று அழைத்து போனார்.

Canada வுல சில நர்ஸ்சம்மாங்க, பேசன்ட்டுகளை ஸ்வீட்டி, ஸ்வீட்டினு கூப்பிட்டு ரணகளம் பண்ணுவாங்க.

எனக்கு இப்போ மனசு லேசா ஆனது. பூனை குட்டி போல நர்சம்மா பின்னாடி போனேன்.

 

உங்களுக்கு injection எங்க போடனும் என்று கீச் குரலில் கேட்டார்.

ஊசி, கையிலா இல்லை இடுப்பிலா? என்று கேட்டார்.

நான் ஒரு கணம் கூட யோசிக்காமல், இடுப்புல போடுங்க நர்ஸ்ஸம்மா என்று சொன்னேன்.

 

அவரும், சிரித்துக்கொண்டே ..ஹ்ம்ம் ம்ம்ம் …போட்டா போச்சு

சரி பின்னாடி லூஸ் செஞ்சுட்டு, அந்த பெட்டுல போய் திரும்பி படுங்க என்றார்.

ஒரு ரெண்டு நிமிஷம் ஆகும், injection ரெடி செஞ்சுட்டு போட்டுகலாம் என்றார்.

நான் போட்டா லேசா தான் வலிக்கும். இருந்தாலும், ஊசி போட்டவுடன் நல்லா தேய்க்கனும் ஓகே வா ? என்றார் நர்சம்மா.

எனக்கு AC குளிரிலும் இப்போது வியர்த்து கொட்டியது.

 

நானும் நர்சம்மா சொன்ன மாதிரி, பெட்டில் ஏறி திரும்பி படுத்துக்கொண்டேன்.

ரெண்டு நிமிஷம் வரை நர்ஸ், மருந்து பாட்டில் எடுக்கிற சத்தம் injection ஏத்தற சத்தம் எல்லாம் கேட்டுச்சு.

பட்டுன்னு ஒரு நிமிஷம் அமைதி ….ஒரு கை மெல்ல பஞ்சை எடுத்து எதிலோ நினைத்து என் பின்னால் தேய்த்தது.

 

“ஜில்” என்று பின்னாடி நினைந்து எனக்கு கூசியது.

அடுத்து ஒரு செகண்டில் ” சதக் சதக் என்று ஒரு முரட்டு குத்து”

குத்துனா குத்து அது மரண குத்து.

 

அது ஒரு கத்திக்குத்து. ரத்தம் மட்டும் தான் வரலை. இது ஒரு கொலை வெறி குத்து.

நான் வலியில் துடிதுடித்து போனனேன்.

யாம்மாடியோவ், தாங்கமுடியலடா சாமி….என்று அலறினேன்.

 

நர்ஸ்ஸம்மா…மா ….பாத்து குத்துங்க …என்னால முடியல நர்சம்மா ….ரொம்ப வலிக்குது என்று கத்திக்கொண்டே திரும்பி பார்த்தேன்.

திரும்பி பார்த்த எனக்கு அதிர்ச்சி ..

அந்த வீனா போன அசிங்கபுடிச்ச கொரங்கு டாக்டர் கையில் ஊசியோட, கொலை வெறியோட நின்னுட்டு இருந்தான்.

டொப்புன்னு என் பின்னாடி ஒரு தட்டு தட்டி, ஏன்யா இப்பிடி கத்தற? ஊசிதான போட்டேன் …நல்லா தேய்ச்சுக்கோ என்று அதட்டினான்.

 

நான் வலியில் துடித்து கொண்டே “யோவ் டாக்டரு… நான் தேய்கறது இருக்கட்டும் எங்கயா போச்சு அந்த நர்சு? “என்றேன்.

 

கொரங்கு பய , கையை காட்டிய இன்னொரு பெட்டில் அந்த நர்சு, 80 வயது கிழட்டு பயலுக்கு பக்குவமா கையில தேய்த்து தேய்த்து ஊசி போட, அந்த பொக்கை வாயன் என்னை பார்த்து சிரித்தான்.

பல் இல்லாதவன பார்த்து சிரிச்சு என்ன ஆவ போவுதுன்னு தேச்சுகினே, நொண்டி நொண்டி வெளிய நடந்து வந்தேன்.

திரும்பி வரும்போது அந்த நர்ஸ் கிட்ட “நீங்க ஏன் எனக்கு ஊசியை போடலைனு?” விரக்தியில் கேட்டேன்.

 

அதுக்கு நர்சம்மா, “நான் ஊசி போட்டா லேசா தான் வலிக்கும். அதனால தாதாவுக்கு போட சொன்னாரு டாக்டருன்னு” சொல்லிச்சு.

இதுக்குதான் சொல்லறது….குரங்கு நடத்துற கிளினிக்கு போக கூடாதுங்கிறது.

சனியன் புடிச்ச, குரங்குபய டாக்டரு.