இது பஞ்சாபி பட்டர் சிக்கனுக்கும், தமிழ் தயிர் சாதத்திற்கும் இடையே நடக்கும் ஒரு காதல் கதை.

 

புல்கா ரொட்டி தொட்டு உண்ண, மாங்கா ஊறுகாய் ஒத்து வருமா, வராதா? இது தான் கதை.

கதைக் களம் …அகமதாபாத் சால்னா கடை( IIT Ahmadabad)…

கொஞ்சம் சென்னை, மிச்சம் மும்பை டெல்லி.

 

அப்பாடக்கர், சேதன் பகத்தான் கதை. ஆனா அப்பாடக்கர் கதை எல்லாம் கிடையாது.

இந்த காம்பினேசன் ஏற்கனவே பலமுறை புளித்து போன மிக்ஸ்.

 

படத்தின் தலைமை குக் ( Director), பஞ்சாப் கோதுமையை, தமிழ் நாடு அரிசி மாவுடன் சரியான விகிதத்தில் கலக்கவில்லை.

கோதுமையாக அர்ஜுன் கபூரும், அரிசி மாவாக அலியா பட்டும் நடித்துள்ளார்கள்.

 

படம், கோதுமையும் அரிசியும் சால்னா கடையில் அடித்துக் கொள்வதில் ஆரம்பிக்கறது.

ஓரே சாக்கு பையில் இரண்டும் சேர்ந்து படிகின்றன. வேலையும் கிடைத்து, இரண்டுக்கும் எப்படி திருமணம் நடக்கின்றது என்பதுதான் கதை.

 

படத்தில் பல அலுமினிய மற்றும் பித்தளை பாத்திரங்கள் நடித்துள்ளன.

அரிசி அலியா பட், படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பார். ஓரே காட்சியில் மட்டும் அலியா அழுவார். அப்போது அசிங்கமாக இருப்பார்.

 

அலியா பட்டுக்கு மகா மொக்கை அப்பன்.

தமிழில் ஏன் நல்ல அப்பாக்கள் கிடைக்கவில்லையா?

அவள் அப்பன் முறைத்துக் கொண்டே இருப்பார்.

அலியா பட்டின் அம்மா கேரக்டரில் ரேவதி. இவர் மட்டும் உருப்படி.

 

பஞ்சாப் கோதுமை, அர்ஜுன் கபூர் படம் முழுக்க வழிந்து கொண்டே இருப்பார்.

அவர் அம்மா, “நொந்த கோதுமை ” படம் முழுக்க வெந்து கொண்டு இருப்பார்.

 

இன்னொரு மொக்கை அலுமினியப் பாத்திரம், அர்ஜுன் கோதுமையின் தந்தை “பெரிய கோதுமை”.

இவர் தூர்தர்சனில் வரும் ஜுனூன் சீரியல் மாதிரி ஒரு கோட்டை மாட்டிக்கொண்டு ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு இருப்பார்.

 

வழக்கம் போல் அம்மா கோதுமையும், அம்மா அரிசி மூட்டையும் வில்லங்கம் செய்ய, எல்லா சிக்கல்களும் விலகி கோதுமையும், அரிசியும் சேர்ந்து ரொட்டிதோசை சுடுவது தான் முடிவு.

 

படம், முனியாண்டி விலாஸ் லெக் பீஸ் சிக்கனை, ஐயங்கார் வீட்டு பால் பாயாசத்தில் முக்கி உண்ட சுவை.

புளிச்சு போன கதை, மொக்க பாத்திரங்கள், பெரிய பில்ட் அப்.

 

But …Alia bhatt -க்காக ஒரு முறை பார்க்கலாம்.

 

Sridar.com Rating: 5.5/10

2states5

_____________________________

Directed by Abhishek Varman
Produced by Karan Johar, Sajid Nadiadwala
Written by Chetan Bhagat (story)
Screenplay by Abhishek Varman
Based on 2 States by Chetan Bhagat
Starring Arjun Kapoor, Alia Bhatt, Ronit Roy, Amrita Singh, Revathy, Shiv Kumar Subramaniam
Music by Shankar-Ehsaan-Loy
Cinematography Binod Pradhan
Editing by Namrata Rao