இந்த முறை அமெரிக்கா சென்ற போது, பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) வரைந்த ஓவியம் பார்க்க, ஒரு கடைக்கு சென்றோம். மொத்தம் 2 படங்கள் மாட்டி இருந்தார்கள். இரண்டுமே Modern Art வகை. ஒரு குதிரை மற்றும் ஒரு ஒட்டகம்.
ஒரே ஒரு கோடுதான் ஒரு ஓவியம். பல மில்லியன் டாலர் மதிப்பு பெரும் ஓவியங்கள்.
இதைப் பார்த்த என் மனைவி “என்ன இது? வெறும் கோடு கோடாய் வரைந்து உள்ளார், இதுக்கா இவ்வளவு விலை? ” என்றார்.
உலகில் முதலில் ஒன்றை செய்பவரை காலம் போற்றும். எவரெஸ்ட் சிகரம் முதல், நிலவில் பதித்த கால் வரை.
பிக்காசோ Cubism ஓவியங்களை முதலில் வரைந்த போது அவரை கிறுக்கன் என்றார்கள்.
முதலில் எதை வித்யாசமாக செய்தாலும் அவனை உலகம் கிறுக்கன் என்று தான் சொல்லும்.
பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உத்தமர்கள்.
இன்று நீங்கள் தெருவில் பார்க்கும் Graffiti வகை ஓவியங்களின் தந்தை இவரே.
இவர் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள் மற்றும் திரைச்சீலை வேலைப்பாடுகள் செய்து உள்ளார்.
தன் வாழ்நாளில் வரையும் ஓவியங்களை நீலக் காலம்,ரோசா நிறக்காலம், ஆபிரிக்க காலம், கனிசுகவாத காலம் என பிரித்து வரைந்தார்.
இவர் ஓவியங்கள் தான் எளிமையாக இருக்கும். இவர் இயற் பெயரோ, படிக்கவே கடினம்:
Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso
பிக்காசோ ஓவியங்கள் உலகிற்கு சொன்ன இரண்டு தத்துவம்.
– பிரமாண்டத்தை எளிதாக செய்யலாம்.
– எளிமையை பிரமாண்டமாக காட்டலாம்
வெறும் கோடு கோடாய் வரைந்ததால் மட்டும் இந்த விலை இல்லை….
முதன் முதலில் இப்படி கோடுகளை வரைந்ததால்தான் இந்த விலை என்றேன்…
Leave A Comment