குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி:

குருவே, என் பொண்டாட்டி தினமும் தொறந்த வாய மூடாம என்னை திட்டுறா. எதுக்கெடுத்தாலும் வாய் ரொம்ப நீளுது …ஏன் குருவே?.

சுவாமி. ஸ்ரீ.ஸ்ரீ. டரின் பதில்:

அடேய், அரைவட்ட மண்டையா, சதுர்வேதி….இந்த பிரச்சனைக்கு, இதிகாசத்துல பதில் இருக்கு, கேட்டுகோ. உலக ஜீவராசிகளை படைத்தவன் பிரம்மன். I mean Lord Brahma. அவுரு வைப் பேரு சாவித்திரி. இவங்க தான் Mrs.பிரம்மன்.

முதன் முதலா, உயிரினங்களை உருவாக்கும் போது நடந்த சம்பவம்தான், இது எல்லாத்துக்கும் மூல காரணம். உயிரினங்களை படைக்கும் போது, பிரம்மன் காப்பி அடிச்சு டெவலப் செய்ய, Reference உயிரினம் (Prototype) எதுவும் இல்லை. அவரா தின்க் செஞ்சு- செஞ்சு, டெவலப் பண்ணாரு. அப்பிடி உருவானவங்கதான், நாம எல்லோரும்.

இருந்தாலும், ஒரே ஒரு ஐட்டம் மட்டும் அவர் படைத்த உயிரிடமே, உனக்கு புடிச்சதை சொல்லுனு கேட்டு, அந்த ஒரு ஐட்டத்தை, அதுங்க விருப்பப்படி உருவாக்கி அட்டாச் செஞ்சு கொடுப்பாரு. ஆனா சில Conditions Apply:

1. ஒரு ஜீவன் ஒரு ஐட்டம் மட்டும் தான் கேட்கனும்.

2. ஒரு ஜீவன் கேட்ட ஐட்டத்தை, இன்னொன்னு ஜீவன் கேட்க கூடாது.

3. அல்லாட்மெண்ட் “First Come – First server” – நியதியில் செயல்படுத்தப்படும்.

 

பிரம்மன், ஒரு பெரிய சட்டி எடுத்து எல்லா ஜீவராசிகளின் பெயரையும் எழுதிப் போட்டு, அதை குலுக்கி எடுத்து, ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. இப்பிடிதான் உயிரின உருவாக்கம் (Evolution) ஆரம்பிச்சது.

சட்டியில் இருந்து, முதல் சீட்டு எடுத்தாரு….

அதில் வந்த பெயரு குரங்கு.

சோ, பிரம்மன் முதலில் குரங்கை படைச்சாரு. அதுகிட்டயே கேட்டாரு…ஏய் குரங்கே, உனக்கு என்ன ஸ்பெஷல் ஐட்டம் வேணும்? நீ கேட்டது நான் டெவலப் செஞ்சு தரேன். ஆனா ஒரு கண்டிஷன். ஒன்னே ஒன்னு தான் நீ கேட்கணும். ஓகே வா ? என்றார்.

குரங்கும் ஓகேனு சொல்லிச்சு.

டியர் பிரம்மா, எனக்கு பெரிய வால் வேணும் … குறும்பு பண்ணும் போது, நான் அதை நல்லா ஆட்டனும்னு சொல்லுச்சு. உடனே பிரம்மன், குரங்குக்கு வால் டெவெலப் செஞ்சு ஒட்ட வச்சாரு. குரங்குக்கு ரொம்ப சந்தோஷம். சரி, “எவ்வளவு நீள வால் வேணும்?” என்று பிரம்மன் கேட்டாரு.

“திரும்பி நிக்கறேன் எசமா, நீங்களே என் வாலை அளந்து வையுங்க எசாமானு” குரங்கு நன்றியோட சொல்லுச்சு….

பிரம்மனும், அதன் வாலை அளந்து பாத்து, மீதியை கட் செஞ்சு, இது உனக்கு போதும்னு சொல்லி வுட்டாரு.குரங்கு, மரத்துல தாவி சந்தோசமா வால் ஆட்டிகினே, ஓடி போயிடுச்சு.

 

அடுத்து, யானை பேரு வந்தச்சு.

பிரம்மன் யானையை உருவாக்கி, அதுகிட்ட உனக்கு என்ன ஸ்பெஷல் வேண்டும்னு கேட்டாரு. அதுவும், எனக்கு ஒரு தும்பிக்கை போதும்னு சொல்லிச்சு. சரி, “எவ்வளவு நீளம் வேணும்னு ?” பிரம்மன் கேட்டாரு.

“வந்து நிக்கறேன் எசமா, நீங்களே அளந்து வையுங்க எசாமானு” சொல்லுச்சு….

பிரம்மனும், அளந்து பாத்து தேவையான அளவு தும்பிக்கையை, யானைக்கு வச்சு காட்டுக்கு ஓட்டி விட்டாரு….

 

அடுத்து, காண்டாமிருகம் பேரு வந்துச்சு … மண்டைக்கு மேல கொம்பு கேட்டுச்சு …. வச்சுவுட்டாரு…

சிங்கம் பிடரி கேட்டுச்சு…அதை டெவலப் செஞ்சு தொங்க வுட்டாரு…

புலி நகத்தை கேட்டிச்சு ..அதை வளத்து விட்டாரு ….

பாம்பு விஷத்தை கேட்டுச்சு, கொக்கு மூக்கு கேட்டுச்சு …

 

இப்பிடி, எல்லா உயிரினமும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கேட்டன…எல்லார்கிட்டையும், எவ்வளவு நீளம், அகலம் வேணும்னு அதே கேள்வியை பிரம்மன் கேட்டார். அதுங்களும் நிமிந்து நிக்குறேன் எசமா, குனிஞ்சி நிக்குறேன் எசமா …நீங்களே அளந்து வையுங்கனு காமிச்சுதுங்க… அவரும் அளந்து வச்சாரு. எல்லா மிருகங்களும் கொடுத்ததை வாங்கிட்டு, சந்தோசமா ஓடி போயிடுச்சுங்க ….

இதை பார்த்த பிரமன்னோட பொண்டாட்டிக்கு செம சந்தோசம்.

புருஷன் பெருமை தாங்கல. பிரம்மன் டயர்டு ஆயிட்டருனு, அவரை சந்தோஷபடுத்த, ப்ளாக் டீ போட்டுட்டு வர பிரம்மலோக கிட்சன் உள்ள போனாங்க.( அன்னிக்கி சண்டே, வேலைக்காரி லீவு).

இன்னும் ரெண்டே ரெண்டு சீட்டுதான். எல்லா உயிரின டேவலப்மன்ட்டும் முடிய போவுது. இந்த டீ break-க்குல, ரெண்டு சீட்டுல ஒன்னை எடுத்து பெயரை படிச்சார், பிரம்மன்.

 

சீட்டுல ” புருஷன்” என்று வந்தது.

உடனே ஒரு “புருஷனை” டெவலப் செஞ்சாரு. அவன்கிட்ட உனக்கு என்ன ஸ்பெஷல் ஐட்டம் வேணும்னு கேட்டாரு.

அவனும், ” பிரம்மா, கேட்டதுக்கு நெம்ப நன்றி”. “வாழுற வீட்ல, எனக்கு எல்லா பவரும் வேணும்” -னு கேட்டான்.

ஓகேனு சொன்ன பிரம்மன், புருசனுக்கு “வீட்டை கண்ட்ரோல் செய்யும் பவர்’ கொடுத்தார் .

சரி, உனக்கு எந்த அளவு “பவர்’ வேணும்னு? பிரம்மன் கேட்டார்.

அதுக்கு பேராசை புடிச்ச புருஷன் “எசமா …இன்னும் ஒரே ஒரு சீட்டுதான் சட்டியில இருக்கு. அது யாரு?, அது என்ன பவர் கேட்குதுன்னு பாத்துட்டு, கடைசியா நான் சொல்றேன். அப்பதான், அது கேக்குற பவரையும் சேத்து, எல்லா “பவரும்’ எனக்கே வாங்க முடியும்னு” சொன்னான்.

யோசிச்ச பிரம்மன், உன் இஷ்டம் . நீ கேட்ட பவர், உனக்கு கொடுத்துட்டேன். ஆனா, அதுக்கு எவ்வளவு பவர்னு வேல்யுனு அல்லாட் பண்ணல. அடுத்து வர ஜீவராசி பேசினா, அது மட்டும் உன் காதுல கேட்கும். அதை “இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடு”…இப்போதைக்கு, இதுதான் உன் பவர். சரி, சரி… ஓரமா போய் நில்லுன்னு சொல்லி அடுத்த சீட்டை எடுத்தாரு.

 

அதுக்குள்ள பிரம்மன் பொண்டாட்டி ப்ளாக் டீயும் போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு. புருஷன் வெய்டிங் மேட்டர் அந்தம்மாவிற்கு தெரியாது. மனைவி போட்டுட்டு வந்த ப்ளாக் டீயை குடிச்சுட்டு, சட்டியில் உள்ள கடைசி சீட்டை எடுத்தாரு பிரம்மன்.

சீட்டுல ” பொண்டாட்டி” என்று வந்தது.

உடனே ஒரு பொண்டாட்டியை டெவலப் செஞ்சாரு பிரம்மன். உனக்கு என்ன ஸ்பெஷல் ஐட்டம் வேணும்னு, வழக்கம் போல கேட்டாரு.

அவ, எனக்கு ஒரு “வாய்” மட்டும் போதும் எசமான் என்றாள்.

வெறும் வாய் மட்டும் போதுமா? வேற எதுவும் வேணாமா? வாய், சாப்பிட மட்டும் தான் தேவை. அது ஸ்பெஷல் ஐட்டம் கூட இல்லை. எல்லா ஜீவனுக்கும் நான் கொடுத்து இருக்கேன், வேற ஏதாவது ஸ்பெஷலா கேளு” என்று பிரம்மன் கேட்டார்.

அதுக்கு பொண்டாட்டி “ஸ்பெஷலா இல்லைனாலும் பரவாயில்லை, ஒரு வாய் போதும் எசமா எனக்கு, இதை வச்சு நான் பொழைச்சிக்குவேன் என்றாள் .

 

பிரம்மனும் ஒரு வாயை, “பொண்டாடிக்கு” படைத்து கொடுத்தார்.

சரி “உனக்கு எவ்வளவு பெருசா வாய் வேண்டும்?, நான் அளந்து விடனும்னு? கேட்டார்….

 

இதுவரை, இங்கு நடந்ததை, நின்னு பாத்துட்டு இருந்த புருஷனுக்கு செம சிரிப்பு. போயும் போயும், இந்த மதி கெட்ட “பொண்டாட்டி”, வெறும் வாயை ஸ்பெஷல் ஐட்டமா கேட்டு இருக்கானு நக்கல். பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டான்…

இதை கேட்ட பொண்டாட்டி “எல்லோரும் போயிட்டாங்க, யாரு அந்த ராஸ்கோல், என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்கான் ?” என்று பிரம்மனிடம் கேட்டா.

பிரம்மனும் அவன் பேரு – “புருஷன்” னு நடந்த உண்மையை சொன்னார். கொடுத்த பவரையும் சொன்னார். பவரின் அளவுக்கு வெயிட் செய்துகொண்டு இருப்பதையும் சொன்னார்.

 

அதுவரை, அமைதியாய் இருந்த பொண்டாட்டி இதை கேட்டவுடன் ” காட்டு கத்து” கத்த ஆரம்பித்தாள். என்ன? என்னை விட அதிக பவரா கேக்குறான் அந்த பரதேசினு கூச்சல் போட ஆரம்பித்தாள்.

அவ போட்ட சத்தத்தில் பிரம்மலோகமே அதிர்ந்தது.

பிரம்மன் ” பொண்டாடிக்கு” வாயை படைத்தாரே ஒழிய, இன்னும் வாயின் அளவை அளக்கவில்லை. அதனால் அவள், அளவில்லாமல் கத்திக்கொண்டு இருந்தாள்.

கத்தும் பொண்டாட்டி, வாயை மூடியவுடன், அளந்து விடலாம் என்று காத்துக் கொண்டு இருந்தார். வாயை திறந்த பொண்டாட்டி அதை மூடாமல் பல மணி நேரம், புருஷனை திட்டிக்கொண்டு இருந்தாள்.

பிரம்மன் பொண்டாட்டியை பார்த்து ” நீ உன் வாயின் அளவை சொல்லிவிடு” …..சத்தம் தாங்க முடியவில்லை. நான் அளந்து வைத்துவிட்டு போய்விடுகிறேன். “Too much Noise Pollution in Brammalogam” என்று கெஞ்சினார். கடைசிவரை அவள், வாயை மூடவில்லை.

 

அப்போது, பிரம்மனுக்கு சட்டென்று ஒரு ஐடியா வந்தது.

பிரம்மன் மனைவி சாவித்திரியும் ஒரு பொண்டாட்டி தானே.

அவுங்க வாயை அளந்து, அந்த அளவையே கத்திக்கொண்டு இருந்த “பொண்டாட்டிக்கு” ஜீவனுக்கு வைத்துவிடலாம் என்று எண்ணினார்.

அப்படி, அளந்து வச்சுட்டா, “பொண்டாட்டி”அமைதியா போயிடுவானு ஒரு கணக்கு போட்டார்.

 

அங்கு வேடிக்கை பார்த்து நின்றுகொண்டு இருந்த தன் பொண்டாட்டி, சாவித்ரியை பார்த்து பிரம்மன்

“ஹலோ மை டியர் சாவித்திரி, ஒரு ஒன் மினிட் இங்க வரமுடியுமா?” என்றார். சாவித்ரியும், பிரம்மன் அருகே வந்தார்.

பிரம்மன் தன் பொண்டாடியிடம்

“நீ உன் வாயை கொஞ்சம் மூடு…………………… …..

………………நான் அளக்க வேண்டும்” என்றார்.

( இரண்டு வரியை இடையில் கொஞ்சம் கேப் விட்டு படிக்கவும்)

 

முதல் வரியை கேட்டதுதான் தாமதம், பிரம்மன் பொண்டாட்டி –

“என்னது? என் வாயையா மூட சொல்ற பிரம்மா?”னு சப்புன்னு அவுரு வலது கண்ணத்துல ஒரு அரை விட்டாங்க.

அடேய் பிரம்மா, கத்திட்டு இருக்குற அவ வாய மூட வக்கில்லை, மூடிட்டு நிக்கிற என் வாயை மூட சொல்லுவியானு, இடது கண்ணத்துல ஒன்னு ஓங்கி விட்டாங்க.

 

பிரம்மன் ஆடிப் போயி, மயங்கி, தொப்புனு விழுந்தாரு.

போதுமடா சாமி …..நான் எவ வாயையும் அளக்கல, எவனுக்கும் பவரும் கொடுக்கல …ஆள விடுங்க …

புருசபொண்டாடிகளா, இங்க வாங்க …..உங்க ரெண்டு பேராலத்தான், நான் இன்னிக்கி எம் பொண்டாட்டிகிட்ட வாங்கி கட்டிகிட்டேன்…

உங்களுக்கு கொடுத்தத வைச்சுகிட்டு, பூலோகத்துக்கு போங்க.

 

ஆனா, மாட்டிவுட்ட புருஷனும், பொண்டாட்டியும் சேந்துதான் வாழனும்.

டேய் புருஷா , உனக்கு பவர் இருக்கும், ஆனா அதுக்கு வேல்யு இருக்காது. ஏய் , பொண்டாட்டி, உனக்கு வாய் இருக்கும், ஆனா பவர் இருக்காது. அவ வாய உன்னால மூட முடியாது, உன் பவரை அவளால புடுங்க முடியாதுன்னு என்று சாபம் விட்டார்.

அது மட்டும் இல்லாமல், இத்தோட இந்த ” ஸ்பெஷல் offer” கான்செல்னு சொல்லிட்டு, சட்டி பானை எல்லாம் மூட்டை கட்டி எடுத்துட்டு, பிரம்மலோகம்குள்ள ஓடி போயிட்டாரு…

பிரம்மன் கடைசியா படைச்ச ஜென்மம்தான் பொண்டாட்டி.

அப்ப, உள்ள ஓடி போன பிரம்மன் இன்னும் கூட வெளிய வரல.

 

அதனாலதான் சதுர்வேதி…

உனக்கு பவர் இருந்தாலும் அதுக்கு பயன் இல்லை. உனக்கு உள்ள பவர் என்னன்னு தெரியாம தான் வாழ்ந்து சாவ.

உன் பொண்டாட்டியும், உன் பவரை புடுங்க, தொறந்த வாய மூடாம கத்திட்டு இருப்பா..

உட்டு தள்ளு ….

 

பிரம்மன்னால மூட முடியாத வாயை, உலகத்துல எந்த புருஷனாலும் மூட முடியாது.

பொண்டாட்டி திட்டுனா ” இந்த காதுல வாங்கி அந்த காதுல வுட்டுடு’…

 

இதுதான் நீ வாங்கின பவர். வாதம் பண்ணாதே.

ஏன்னா அது முடியாது. இல்லை, நீ வீட்டை விட்டு ஓடி போகனும்….பிரம்மன் மாதிரி …

இதுக்கு மேல எதாவது பவர் வேணும்னா, நீ மீண்டும் பிரம்மன் கிட்டதான் போகனும்.

பிரம்மன் கிட்ட போக, நீ சாவனும்.

உனக்கு சாக ஆசையா? இல்லை “இந்த காதுல வாங்கி அந்த காதுல வுட்டுடு வாழ ஆசையா ? என்று சுவாமி கேட்டார்.

 

அதற்கு சதுர்வேதி அமைதியாய் இருந்தான்.

கடுப்பான சுவாமி “ஏன்டா சதுர்வேதி, இவ்வளவு நேரமா நான் இங்கு உன்னை பார்த்து கத்திட்டு இருக்கேன், உன் காதுல விழலையா? பதில் சொல்லுடா மண்ணாங்கட்டி. குத்து கல்லு மாதிரி உட்காந்து விட்டத்தை பாத்துட்டு இருக்க? உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? மண்டையில் என்ன களி மண்ணா வச்சு இருக்கே? ” என்று கோபத்துடன் கத்தினார்.

 

அதுக்கு, சதுர்வேதி அமைதியாய் சொன்னான்…

“சுவாமி, நீங்க ரொம்ப சத்தம் போடுறீங்க, வாய் ஓவரா போச்சு …சத்த நிறுத்துங்க….

உங்களுக்கும் என் பொண்டாட்டி மாதிரி, வாய் ரொம்பத்தான் நீளுது …

நான் ரெண்டு வரில கேள்வி கேட்டா, நீங்களும் ரெண்டு வரியில பதில் சொல்லணும், இல்ல நாலு வரில பதில் சொல்லலாம்…

அத வுட்டுட்டு, எம் பொண்டாட்டி மாதிரி எப்பையோ நடந்து முடிஞ்ச மேட்டரை ஒரு மணி நேராம கதை கதயா பேசறீங்க….

நானே, பொண்டாட்டி அட்வைஸ் தாங்காம உங்ககிட்ட வந்தா, நீங்க கொஞ்சம் ஓவரா தான் போறீங்க …

நீங்க ஓவரா கத்தினதால…”உங்க அறிவுரையை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுட்டேன்.

போய் வேற எவனாவது fly வாயன் இருப்பான், (ஈ- வாயன் ), அவனுக்கு போய் அறிவுரை சொல்லுங்க” ….நீங்களும் உங்க கதையும் ….போயா ….என்று சொல்லிவிட்டு எழுந்து போனான்.

சுவாமி மூடிட்டு, (கதவை) – தன் Surrey ஆசிரமம் உள்ளே சென்றார்.