மாடி வீட்டு மல்லிகாவை,

கோடி வீட்டு கோபால்,

முட்டு சந்தில் மறைந்து நின்று,

வெறித்து மேலே பார்க்கும்’

கோணம்தான் கணிதத்தில்

“செங்கோணம்” எனப்படும்.

 

வெறித்து பார்க்கும் கோபாலை,

முறைத்து பார்க்கும் மல்லிகா,

மனதில் வெட்கப்பட்டு,

காலால் தரையில் வரையும் கோடே,

கணிதத்தில் “அரை வட்டம்” எனப்படும்.

 

மல்லிகாவின் தந்தையும்,

கோபாலின் தாயும்,

இருவரின் முதுகில்

பிரம்பால் மாறி மாறி,

நைய புடைத்தப் பின்,

முதுகில் தோன்றிய வரிகளை,

கணிதத்தில் ” அல் ஜீப்ரா” ( Algebra) என்பர்.

 

பத்து வருடம் கழித்து,

மல்லிகாவும், மகேசும்,

கோபாலும், முத்து லக்ஷ்மியும்,

அவர் அவர்கள் குழந்தைகளுடன்’

கோவிலில் சந்திப்பதே,

பிதாகரஸ் தியரி எனப்படும்.

 

The Length of the Malikaa’s and Gopal’s love squared is equal to the
Length of Mahesh’s Love squared plus the length of Muthu Lakshmi Love squared

Written as an equation,

c2 = a2 + b2