இந்தப் படத்தை சுமார் 3-4 மணி நேரத்தில் வரைந்தேன்.
சின்ன சைஸ் படம். அதிக பட்சம் 7 CM X 5 CM இருக்கும்.

இந்தப் படத்தை செலக்ட் செய்யக் காரணம் ஹேர் ஸ்டைல்.
அதிலும் White and Black வைத்து விளையாடலாம்.

சின்னதா ஒரு படம் வரைந்தால் மிகக் குறைவான நேரத்தில் வரைந்து முடிக்கலாம்.
அடுத்து ஏரியா to cover குறைவாக இருக்கும்.

The biggest disadvantage என்னவென்றால், ஒரு சின்ன தப்பு செய்தாலும் தெளிவாக மாட்டிக் கொள்வோம்.
அதனால் குழந்தைகளை வைத்துச் சொல்லி கொடுக்கும் போது மிகச் சின்ன papers கொடுக்காமல் A4 size கொடுத்து practice செய்யச் சொல்லுங்கள்.
Chart சைஸ் எல்லாம் கொஞ்சம் ஏரியா பற்றி ஐடியா வந்தவுடன் கொடுத்து பழகச் சொல்லலாம்.

சரி, மேட்டருக்கு வருவோம். இவர் அப்பா பேரு டைகர் பட்டோடி. நவாப் பரம்பரை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.
கிரிக்கெட் ஆட வரும் போதே விபத்தில் ஒரு கண் காலி. அதுவும் ரைட் eye. ஒத்த இடது கண் வைத்தே தான் வாழ்நாள் முழுவதும் ஆடி சாதனை செய்தவர்.

என் தந்தை டைகர் பட்டோடி பற்றி கதை கதையாக சொல்லிக் கேட்டதுண்டு. Saif Ali Khan நடித்த முதல் படம் ஒரு பிரிட்டிஷ் black காமெடி படத்தின் தழுவலான Love Ke Liye Kuch Bhi Karega.
நூறு மில்லியன் box ஆபீஸ் ஹிட். ஸ்டார் டஸ்ட் magazine ல் அட்டைப்படம் வந்தது. எடுத்து டக்குனு வரைந்தது.

Mind இட்.
சொப்பு வாய் வரைவதுதான் எப்பவும் கஷ்ட்ம்.

ஒரு முகத்தில் எது charesteric feature என்று கண்டுபிடித்துவிட்டால் போதும். மீதியை வைத்து முகத்தை வரைந்து விடலாம்.
கார்ட்டூன், caricature எல்லாம் இந்தப் படத்தை வரைவதை விடக் கடினம். அதைப் பின்னால் எப்படி வரைவது என்று எழுதுகிறேன்.

இப்போதைக்கு two points.

1. Try Small Size for perfection
2. Identify features of a face

அடுத்து ஒரு நடிகையை படத்தை ‘நரி முடி’ வைத்து வரைவது என்று எழுதுகிறேன்.