நம் சமூகத்தில் மறைந்து இருக்கும் ஓவிய தனித்திறமைகளை வெளிக் கொணர்வதே VanArt 2018 னின் நோக்கம் ஆகும்.

போட்டிகள் நாளை முதல் ஆரம்பம். Get Ready.

சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது தமிழ் பழ மொழி.
உலகத்திலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வாக்கியம் “You’re A Natural Born Artist”

அப்படிப் பிறக்கும் போதே ஆய கலைகளும் ஓடி வந்து ஒருவருக்குள் வந்து சேராது.
எந்தத் திறமைக்கும் கம்ப சூத்திரம் ஒன்று இல்லை.

என்னைப் பொறுத்தவரை எல்லோரும் வரையலாம். என்ன எல்லாரும் முயற்சி எடுப்பது இல்லை.
அவ்வளவுதான். வீட்டுக்கு நாய் வாங்கலாமா என்று நாய் வைத்து இருப்பவரிடம்தான் கேட்க வேண்டும்.

நாயே வளர்க்காதவன் எப்பவுமே நாய் வாங்கினா வீட்டில் அதிக வேலைனு சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.
நான், சொல்கிறேன் ..எல்லோரும் வரையலாம். இது ஒரு பெரிய மேட்டர் அல்ல.

அதற்குத் தேவை, அசாத்திய பொறுமையும், perseverance மட்டுமே.
எளிதாகத் தெரியும் லைன் வரைபடங்கள் முதல் மாதங்கள் பிடிக்கும் ஆயில் பெயின்டிங் வரை ஒரே தத்துவம்தான்.
நீங்கள் உருவாக்கும் ஓவியத்துடன், நீங்கள் தனிமையில் பேசிப் பழக வேண்டும்.

ஆயிரம் ஆயிரம் காகிதங்கள் கிழிக்கப்படவேண்டும்.
பென்சில் முனைகள் கடிகாரம் முள் பார்க்காமல் காகிதங்களுடன் இரவு பகல் பாராமல் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதையே தொடர்ந்து செய்தால் கீழ் குறிப்பிடுபவை தானே வந்து கொட்டும்.

Imagination, ideas, ability to be committed, sliding transitions between fact and fiction and finally the originality

ஓவியம் வரைவதால் பல நன்மைகள் உண்டு.
கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் ஆட்டு மந்தை mind செட்டில் இருந்து விலகி வருவீர்கள்.

மீண்டும் சொல்கிறேன். ஓவியம் வரையத் தனித்திறமை தேவை இல்லை.
எல்லோரும் வரையலாம். தேவை perseverance மட்டுமே.

தோல்வி பயத்தை ஓவிய பயிற்சி ஓட ஓட விரட்டும்.
தோல்வியில் துவளும் பலருக்கு ஒரு நல்ல ஓவியம் உருவாகும் முன் கிழிக்கப்படும் காகிதத்தின் வலி தெரியாமல் வளர்வதும் ஒரு காரணம்.

இதனால்தான் ஓவியத்தை ஒரு பாடமாக பள்ளியில் வைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள்.

When children experiment with materials, they dabble in science.
Most important perhaps, when kids feel good while they are creating, art helps boost self-confidence.

The arts cannot be learned through occasional or random exposure any more than math or science can.
Education and engagement in the fine arts are an essential part of the school curriculum and an important component in the educational program of every student.

Art பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

Uniqueness கொண்டு வரும்.
வாழ்க்கையை interesting and fulfilling ஆக மாற்றும்.

Creativity is a way of living life that embraces originality and makes unique connections between seemingly disparate ideas.

ஒரு காலத்தில் வெறித்தனமாக வரைந்தது கொண்டு இருந்தேன். இது போல் சுமார் 786 படங்கள் இருக்கின்றன.

சிலது என் பர்சனல் collection.
வரைவதை விட்டு இப்போது 20 வருடம் ஆகிறது.

போன வருடம்தான் மீண்டும் ஆர்ட் பென்ச் வாங்கிப் போட்டு இருக்கிறேன்.

I thought I want go back to my basics…

காரணம்…

போன வருடம் ஒரு ப்ராஜெக்ட் பிரச்சனை என் அலுவகத்தில் பேசப்பட்டது.
முப்பது பேர் இருக்கும் அறையில் எல்லோரும் இரண்டு நாளாக இரவு பகலாக பேசிக்கொண்டே இருந்தார்கள்.

காதே கிழிந்து விட்டது.

பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு ..
நான் வீட்டில் இருந்த படியே ஒரு காகிதத்தில் overall – Scenarios களை படம் வரைய ஆரம்பித்தேன் .
அதில் பிரச்சனை உள்ள பாகத்தை கேளிக்கை கார்ட்டூன் போட்டு வரைந்து ஷேர் செய்தேன்.

மேட்டர் of செகண்ட்ஸ் …எல்லோரும் புரிந்துகொண்டு சிரித்தார்கள்.

இந்த உலகத்தில் இப்போது உள்ள பிரச்சினை …Visualization.. தி பிக் picture என்பதைப் பார்க்க தவறுகிறார்கள்.
பிரச்சனை பேசும் பலருக்கு, இதன் முடி எப்படி இருக்கவேண்டும் என்ற விஷுவல் கண்ணோட்டம் மிஸ் ஆகிக் குழப்புகிறார்கள்.

I felt, ஆர்ட் தினமும் எனக்குத் தோள் கொடுக்கிறது.

Why don’t I restart?

அதனால்தான் VanArt2018: இது உங்களுக்கு மட்டும் அல்ல ..எனக்கும் இது ஒரு வாய்ப்பு. கெட் ரெடி.

Note:
எனக்கு இந்தப் படம் வரையும் போது எரும கிடா வயசு.
வரைந்து முடித்தவுடன் இந்தப் படத்தை லேடீஸ் ஹாஸ்டல்ளுக்கு கொடு என்று என் சீனியர் ஒருவர் வாங்கிச் சென்றார்.

திரும்பி ஆல்பம் வரும் போது இந்தப் படத்தின் கவர் மீது Excellent என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
யார் ஒட்டியது என்று கேட்டேன். யார் ஓட்டினா உனக்கு என்ன? ஓட்டினது படத்துக்கு, உனக்கு இல்லை என்கிறார்.

இன்றும் கூட அந்த ஒட்டிய கைகளை தேடுகிறேன்.
ஆர்ட் needs encouragement !