இரண்டாம் உலகப் போரின் போது முதல் குத்து வாங்கி நாடுகளில் போலாந்தும் ஒன்று. வார்சாவில் நடந்த ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுத்தப் படம்.

Zoo நடத்தி வரும் தம்பதியர்கள் ஹிட்லர் போலந்து நாட்டை ஆக்கிரமித்த போது எப்படிப் பல யூதர்களைக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றி சொல்லும் படம்.

மனித நேயம் எந்தக் காலத்திலும் பரவி இருந்தது என்பதை உணர்த்தும் படம்.

ஹிட்லரின் தலைமை zoologist போலந்து நாட்டின் private zoo வை manage செய்யும் பொறுப்பேற்று பின் அங்கு நடக்கும் நிகழ்வுகளே படத்தின் மைய கரு.

படத்தின் நாயகி அண்டோனினா. அவரின் கணவர் Jan. இவர்களுக்கு ஒரு மகன். இவர்கள் மூவரும் சுமார் 300 யூதர்களின் உயிர்களை உண்மையில் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் கதை.

1974 ல் தான் Jan இறந்தார். இன்று Warsaw வில் இருக்கும் zoo தான் படத்தின் களம்.

வரலாற்றுப் பிரியர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். முடிந்தால் பாருங்கள். Netflix ல் இருக்கிறது.