See… என் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று இருந்த ஒரு காலம் உண்டு.

I think அது இளமைப் பருவம்.
அதற்குப் பின் எப்போது transformation நடந்தது என்று தெரியாது…

கடந்த 25 வருடமாக ஏற்றம், இறக்கம் என்று எதுவும் என் வாழ்க்கையில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
In fact எதற்கும் முட்டி மோதுவதையும், பின் மோதி விழுவதையும் life ன் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டேன்.

செமையா ரீல் விடுகிறான் என்று எடுத்துக் கொண்டாலும் that’s ok..

இந்த நிலையை அடைய மூன்று முக்கியம்.

1. எதைப் பற்றியும் அதிக research செய்வதைத் தவிர்த்து விடுவது.

Example ஒரு காய் கறியும், Cake கும் வாங்கும் அளவுக்குத்தான் Laptop, Car, Home, வேலை offer போன்ற medium, big decisions எடுக்க எடுத்துக் கொள்ளும் நேரம். I don’t sit on it for ever. பெரும்பாலும் one day decisions, action in few hours. தப்போ சரியோ தூக்கி போட்டுட்டு விட்டு அடுத்து நடப்பது நோக்கி நகர்வது. இதில் ரிஸ்க் இருந்தாலும் பின்னாளில் அவை ரஸ்க் ஆகும் வாய்ப்புக்கள் அதிகம்.

நீதி: எல்லாவற்றுக்கும் ஒரு choice, probability இருக்கும். ஏற்றமும் இறக்கமும் அதில் தானாகவே balance ஆகி இருக்கும். Take a decision based on your gut feeling. ‘Gut’ is the decision maker. எது வந்தாலும் ஒக்கே என்ற மனப்பான்மை. உங்கள் gut பேச ஆரம்பித்தால் ஏற்றம் இறக்கம் என்ன என்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் மாயை போகும். ஒரு மீடியன் லைனில் நடக்க ஆரம்பிப்பீர்கள்.

டிரைவர்:
இதை டிரைவ் செய்வது knowledge.
அதீத Research செய்பவர்களுக்கு மண்டை வேலை செய்யும் அளவுக்கு மனம் வேலை செய்யாது.

உதாரணம்:
Iphone Vs சாம்சங்…
சோனி Vs Samsung, Canon Vs நிகான்

எது முடியுமோ, புடிக்குதோ வாங்கு, இல்லைன்னா போயிட்டே இரு.
அதிலே நோண்டிகிட்டு இருந்தால் ஏமாற்றம்தான்.

2. ஐடியா கேட்பது, கொடுப்பது கிடையாது.

Stop asking advices. Stop giving unless some one asks you.
இது இரண்டுமே எது ஏற்றம், எது இறக்கம் என்று நம்மைக் குழப்பும் காரணிகள்.
நமக்குத் தேவை எனில் நாமே தேட வேண்டும்.
அதுவே இன்னொருவருக்குத் தேவை என்று கேட்டால் தெரிந்ததை அனைத்தும் சொல்ல வேண்டும்.

நீதி: இந்த வழியில் பயணித்தால் வாழ்க்கையில் சரியான மனிதர்களைச் சந்திப்பீர்கள். இல்லை எனில் உங்களை மனதால் நோண்டி நுங்கு எடுக்கும் மனிதர்களால் தூக்கம் கெட்டு self satisfaction என்பதே வாழ்கையில் அழிந்துவிடும்.

டிரைவர்:
இதை டிரைவ் செய்வது தேடல் மனப்பாண்மை.
நாம் செய்வது சரி என்ற நம்பிக்கையை முதலில் வளர்க்க வேண்டும்.

உதாரணம்:
ஆல்ரெடி வீடு வாங்கியவர்கள், வாங்காதவனுக்கு home property பற்றி பாடம் எடுப்பது.

3. போதும் என்ற மனமே கூடாது.

எப்போது எல்லாம் இப்போதை விட அது better என்று gut feeling சொல்கிறதோ அதை நோக்கி முன்னேற முயல வேண்டும். குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் பரதேசி போல் contant changes க்கு மனதை சாந்தப் படுத்தி படுத்துத் தூங்க பழக வேண்டும்.

நீதி: I want to settle in my life என்று சொல்பர்களிடம் பழகாமல், I need change என்பவரிடம் பழகுங்கள்.

டிரைவர்:
Change பார்ட் of லைப் என்ற மனமே டிரைவர்.

உதாரணம்:
ஒரே வேலையில் வாழ்நாள் முழுவதும் இருக்க நினைப்பது.
Safety, comfort zone னை நாமே முடிவு செய்து கொள்வது.

In fact…

வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று ஒன்று இல்லை.
We make decisions.
அதன் அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகள் இவை.
தூசு தட்டி போட்டுவிட்டு எந்த point இன்று graph ல் இருக்கிறதோ அதை median என்று நம்பித் தொடர வேண்டியதுதான்.

நம்ம graph ல் நின்னுக்கிட்டு இன்னொருத்தன் க்ராப் எப்படி போகுதுனு பார்க்காமல் இருப்பதே ஒரு சுகமான வாழ்க்கையின் அறிகுறி.

ஏற்றமும் இறக்கமும் மனதை ஒட்டியவை.
வாழ்க்கையில் அப்படி ஒரு graph கிடையாது.

We created it.

வாழ்க்கையின் ஏற்றம் என்பது மண்ணுக்கு மேல் வாழ்வது.
தன் வாழ்க்கையை உணர்ந்து அனுபவிப்பது மீடியன் லைன்.
வாழ்க்கையின் ஒரே இறக்கம் 6 அடி குழிக்குள் இறங்குவது.

அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
அதுக்கென்று நான்கு பேர் நம் வாழ்க்கையில் சம்பாதித்தால் போதும்.

அவங்களே வந்து இறக்கி வைப்பார்கள்.
அதுவரை மீடியன் வாழ்கையே எல்லோருக்கும்.

என்ன அதை புரிந்து கொள்ளவேண்டும்.
அவ்வளவுதான்.