Sridevi:

ஒரு படகு.

கருப்பு வெள்ளை திரையில் ரஜினி அந்தப் படகை ஓட்ட, கமல் பாட்டு பாட அந்த சென்டர் frame ல் ஸ்ரீதேவி அமர்ந்து இருப்பார்.

கே.பாலசந்திரன் மூன்று முடிச்சு படத்தில் ” வசந்த கால நதிகளையே” என்று பாடிய ஸ்ரீதேவி பிற்காலத்தில் நதி போல் ஓடிச் சென்று இப்படி கடலில் தங்களுக்கு முன்னே கலப்பார் என்று கமலும், ரஜினியும் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

குழந்தை முருகனாய் அறிமுகமான முகமாக இருந்தாலும் 16 வயதினிலே தன் மீன் கண்கள் மற்றும் மொட்டு மூக்குடன் தமிழ் திரை உலகில் ஒரு அழகு நடிகை பவனி வந்த காலம் ஒன்று தமிழ் திரை உலகில் இருந்தது.

ஸ்ரீதேவியின் உண்மையான powerful ரோலை கமல், ரஜினி விழுங்கி வந்த காலம் அது.

கேத்தி ரயில் நிலையத்தில் கமல் குரங்கு போல ஆடுறா ராமா என்று அலுமினிய பாத்திரம் தலையில் வைத்துக் கொண்டாடிய காலத்தில்,கமல் நட்சத்திரமாய் மிளிர ..இன்னொரு பக்கம் ரஜினி தான் stlye மூலம் கலக்கி எடுக்க வெறும் அழகான மற்றும் innocent face என்று மட்டும் நம்பிய தமிழ் திரையில் இருந்து ஸ்ரீதேவி தெலுங்கு, கன்னடம் என்று மெதுவாக வடக்கே மூன்றாம் பிறையாக மறைந்தார் என்பதே உண்மை.

Infact, முக்கியனமான ஒரு காலகட்டத்தில் ஸ்ரீதேவியை தமிழ்நாடு இழந்தது. வடக்கே வெண்கல குரலுடன் பொலிவுடன் ஹிம்மட்வாலா எனும் படத்தில் ஜிதேந்திராவுடன் நடித்த படம் சக்கை போடு போட்டது. Jeetendra-Sridevi ஜோடி 17 படங்களை அள்ளித் தெளித்தது.

புடவையுடன் காட்சி அளித்த ஸ்ரீதேவி பின் சுடிதாருடன், கண் மையுடன் வடக்கத்தி பெண்ணாகவே மாறிவிட்டார்.

அதுவரை நின்று விளையாடிய ஒவ்வொரு வடக்கத்தி நடிகையையும் குறி வைத்து கீழ் இறக்கி மண்டியிட வைத்தார். ரஜினியும், கமலும் கூட இவரைப் பார்த்து ஹிந்தியில் ஒரு ரவுண்டு வர முயற்சித்தும் தி ஒன்லி லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாற ஸ்ரீதேவியால் மட்டுமே முடிந்தது.

இதைக் கமலும், ரஜினியும் கூட எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.

காரணம் வஹீதா ரகுமான் என்ற ஒரே ஒரு நடிகை மட்டுமே தென் இந்தியாவில் இருந்து சென்று வடக்கே கலக்கி எடுத்தவர். பத்மினி , மீனா குமாரி, வைஜயந்தி மாலா பாலி, ஜெய பிரதா போன்றவர்கள் எல்லாம் ஸ்ரீதேவி தொட்ட உயரத்தை அடையவில்லை என்றே கூறலாம்.

ஸ்ரீதேவியிடம் என்ன திறமை இருக்கிறது என்று மற்ற competetiros கணிக்கும் முன்னரே அவர் பினிஷ் லைன் சென்று நின்று கொண்டார்.

அவரை கான்களும், கபூர்க்ளும் மொய்த்தார்கள்.

ஸ்ரீதேவி இனி தமிழுக்கு வரவே மாட்டார் என்ற நிலைமை ஒன்று இருந்தது.

அந்த gap சமயத்தில் ….

நான் காலேஜ் படித்துக் கொண்டு இருந்தேன்.

என் நண்பர் ஒருவர் ஒரு ஸ்ரீதேவி வெறியர்.

ரூமில் போஸ்டர்களும், மடித்த புத்தகத்தில் மடங்காத ஸ்ரீதேவியும் எப்போதும் இருப்பார்.

கட்டினா, ஸ்ரீதேவி மாதிரி ஒரு அழகான பெண்தான் காட்டுவேன் என்று கூட சொன்னார்.

ஒருநாள் அவரே ஸ்ரீதேவி படத்தை கிழித்துப் போட்டார்.

காரணம், போனி கபூர் என்று ஒரு செம மொக்கையாக இருக்கும் ஒரு producer க்கு இரண்டாவது மனைவியாக அவருக்குத் திருமணம் நடந்தது தான்.

அவரால் மட்டும் அல்ல, மொத்த ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு அதைத் தாங்கி கொள்ளும் சக்தி இல்லாமல் போனது அன்று.

Infact, ஸ்ரீதேவிக்கே அது இரண்டாவது திருமணம்.

அவர் முதல் கணவர் பெங்காலி மிதுன் சக்ரவத்தி என்ற நடிகர் என்றே பலருக்கு தெரியாது.

மிதுனுக்கு ஊட்டி என்றால் பிடிக்கும். அவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் ஸ்ரீதேவிக்காக ஊட்டியில் ஒரு ஹோட்டல் மற்றும் கோவை மலை அடிவாரத்தில் ஒரு ரிசார்ட் எல்லாம் வாங்கிப் போட்டார்.

ஆனால் கடைசி வரை ஸ்ரீதேவி தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

அமிதாப்புடன் அவர் ஆப்கான் வீரனின் காதலியாக நடித்தார். படம் Khuda Gawah.

நேப்பாளில் மொத்த படத்தை எடுத்தாலும் ஆப்கான் காபூல் திரை அரங்கில் அந்தப் படம் தொடர்ந்து 25 வாரங்கள் housefull ஆக ஓடியது.

மொத்த ஹிந்தி சினிமா உலகமும் வாயைப் பிளந்தது.

பின், தன் இமேஜ் சரியாமல் இருக்க ஏகப்பட்ட பிளாஸ்டிக் surgery களை செய்த வண்ணம் இருந்தார்.

புடவை கட்டிய தமிழ் மயிலின் பொலிவை வடக்கே தொலைத்தது தமிழகம்.

ஸ்ரீதேவியின் பப்ளிக் லைப் உயரத்தைப் பல முறை அவரின் private லைப் அமுக்கப் பார்த்தது.

எல்லாவற்றையும் நேர்மையாகத் தான் திறமை மூலம் தவிடு பொடி ஆக்கிய நடிகை அவர்.

Beauty is God given. Be humble.
Fame is man-given. Be grateful.
Conceit is self-given. Be careful.

இதை மிகச் சரியாக கையாண்ட நடிகை இவர்.

எல்லா எதிர்பார்ப்பையும் திரை உலகில் உடைத்தது போல், நிஜ வாழ்க்கையின் மரணத்திலும் பல கேள்விகளையும் ஆச்சிரியங்ளையும் விட்டுவிட்டுத்தான் சென்று இருக்கிறார்.

மூன்றாம் பிறை பார்த்த போது நிஜ வாழ்க்கையிலும் கமலுக்கு perfect ஜோடி இவராகத்தான் இருப்பார் என்று நம்பியது காலம்.

காலம் வரையும் கோலத்தில் புள்ளிகள் வேண்டுமானால் நாம் வைக்கலாம்.

கோலத்தைக் காலம் மட்டுமே தான் விரும்பிய வைகையில் கோடு போடும்.

இன்றும் ஸ்ரீதேவி ஒரு விடுபட்ட பிரகாசமான புள்ளியாக எனக்குத் தெரிகிறார்.

A True லேடி சூப்பர் ஸ்டார்.