காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு:

என் பெயர் ‘S’ ல் ஆரம்பிப்பதால் சின்ன வயசில் school ல் ஆரம்பித்து, காலேஜ் வரும் வரை attendance ல் கடைசியில் வரும் பெயர்.

இதனால் பட்ட கொடுமைகள், காத்திருப்புக்கள் ஏராளம். School ல் சுதந்திர தின கலர் முட்டாய் முதல் college Viva Voice வரை கடைசியாக லைனில் நின்று காத்து இருக்க வேண்டும். இது சில seconds முதல் சில மணி நேரம் காத்து இருப்பு.

என் வாழ் நாளில் ஒரு முறை கூட reverse system த்தில் Anand, Anbazhagan, ஆனந்திக்கு கிடைத்த உரிமைகளோ, ஆனந்தமோ எனக்குக் கிட்டியதில்லை.

எனக்கு இருந்த ஒரே ஆறுதல் Zhagir, திருப்பதி, உமாபதி, வானதி போன்றவர்கள். எனக்கும் கீழே.. !

தமிழ் நாடு இப்படிப்பட்ட சாபத்தை வரமாக வாங்கிய வந்த மாநிலம். காவிரி நீர் இந்திய attendance ல் கடைசியாக வந்து சேர்வது தமிழ் நாட்டின் சாபம்.

இந்தியா ஒரு tropical நாடு. மழை, சீதோஷ்ன நிலையை பொருத்தத்து. ஒவ்வொரு வருடமும் மாறும். காவிரி நீர் அனைத்தும் பூமியில் இருந்து பொங்குவதில்லை. மழையே இதன் ஆதாரம்.

எப்படி ஒரு நீரின் அளவை ஒரு நீதி மன்றத்தால் பிரித்து கொடுக்க முடியும் என்பது எனக்கு விளங்க வில்லை.

தேவை… சீனா போன்ற ஒரு தேசிய லெவல் பாலிசி. அரசும், சட்டம் ஆனந்திக்கும், ஜாகிருக்கும் ஏற்ப வருடா வருடம் flexibility யுடன் உடனுக்கு உடன் செயல்பட்டு குழாயைத் திறக்கும் திறனுடன் ஒரு தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டு நாற்று நட்டுவிட்டுக் காத்து இருக்கும் விவசாயியை மனதில் வைத்து துரிதமாக செயல் பட வேண்டும்.

அதை விட்டு விட்டு… பேசுறாங்க, பேசுறாங்க ஒரு 25 வருஷமா பேசுறாங்க… அதுக்குள்ள எல்லா விவசாயி மகனும் நிலத்தை வித்து படிச்சுட்டு foreign போயிட்டான்..

ஒரு class room ல் 20 வருடமாகக் கடைசியில் பெயர் இருப்பவனுக்கும் ஒரு கஷ்டம், காத்து இருப்பு இருக்கும் என்பதை உணராத ஒரு school மற்றும் college system எப்படி ஒரு நீரை எல்லாருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

It’s a ஹம்பக் system.