2001…

அப்போது, பெங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரம்தான். கோவைக்குச் செல்ல Train டிக்கெட் புக் செய்யச் சொன்னார் என் மனைவி. காரணம், அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சரி நானும் டிக்கட் புக் செய்ய கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் போனா ஏகப்பட்ட கூட்டம்.

Form fill செய்து வரிசையில் நின்றேன்.
சீசன் டைம் என்பதால் எனக்கு முன்னாடி நின்ற பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

எப்படியும் எனக்கும் கிடைக்காது என்று நினைத்தேன். டிக்கட் புக் செய்யும் அம்மணி தன் புருவத்தை உயர்த்தித் தேடியவர், உங்களுக்கு டிக்கட் இருக்கிறது. சரியான நேரத்தில் வந்து முன் பதிவு செய்தமைக்கு நன்றி என்றார்.

யப்பாடா, தெய்வமே ! …நெம்ப நன்றி என்று ஓடி வந்துவிட்டேன்.

October 26th, 2001 இரவு வந்தது. அது வெள்ளிக்கிழமை.

லோக் மான்ய திலக் – கோவை எக்ஸ்பிரஸ், அன்று வழக்கம் போல் லேட்.

இரவு 11.25 மணிக்கு கண்டோன்மெண்ட் ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.

Countdown Starts ..

காரணம், வண்டி Just மூன்று நிமிடம் மட்டுமே நிற்கும். அதற்குள் ரயில் பெட்டியை தேடிப் பிடித்து ஏறி விடவேண்டும்.  நான் ஆல்ரெடி reserve செய்துவிட்டதால், போகும் போது என் ஆர்ட் மாஸ்டருக்கு மூன்று computers வாங்கி அதையும் எடுத்துக் கொண்டு ஏற திட்டம்.

வண்டி வந்தவுடன், என் மனைவியை என் reserved ரயில் பெட்டியில் ஏற்றிவிட்டு, நான் ஒவ்வொரு computer ஆக ஏற்றிவிட்டு உள்ளே சென்று அமரப் போனேன். அங்கே என் மனைவி நின்று கொண்டு யாருடனோ விவாதித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் சீட் நம்பர் மட்டுமே சொல்லி இருந்தேன்.

போய் என் சீட்டில், பார்த்தால் ஒரு பெரிய குடும்பமே தலையணை, பெட் சீட் எல்லாம் போர்த்தி படுத்துக்கொண்டும் ஒரு சிலர் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

ப்ளீஸ், இது எங்க சீட். என்று பெட்டி நம்பர், மற்றும் சீட் நம்பரை படித்துக் காட்டினேன்.

நோ, நோ …இது எங்கள் சீட். நாங்கள் மும்பையில் இருந்தே இந்த சீட்தான்.

நீங்கள், bangalore ல் இருந்து புக் செய்ததால் உங்கள் டிக்கட்டில் தவறு இருக்கலாம் என்றார் அந்தக் குடும்ப தலைவர்.

அவர்கள் அது எங்க சீட்டு என்று வாதாட, நான் என் டிக்கெட் வைத்துக்கொண்டு என் சீட் என்று கத்திக்கொண்டு இருந்தேன்.

அதற்குள் ஒரு மினிட், 30 செகண்ட்ஸ் காலி.

ஒரே கூச்சல் குழப்பம்.

அந்தச் சீட்டில் இருந்த பெரியவரிடம் , ஏங்க உங்க டிக்கெட்டை காமிங்க என்றேன்.

அவரும், தனது டிக்கட்டை எடுத்து பெட்டி நம்பர், மற்றும் சீட் நம்பரை படித்துக் காட்டினார்.

 

செம கடுப்பு எனக்கு. அப்போ நிதிஷ் குமார்தான் ரயில்வே அமைச்சர்.

என் மனைவிடம் அரசியல் பேசினேன்.
இதுக்குத்தான் இந்த ..கவரன் …மென்ட் ..என்று இழுக்கும் போது ..

என்னை ஒரு முறை முறைத்தார் ..

என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதற்குள் 2 minutes காலி.

 

அப்போது, தூங்கிக்கொண்டு இருந்த அவரின் வயசான மனைவி எழுந்தார்.

என் கையில் இருந்த டிக்கெட்டை, என்னைக் கேட்காமல் ‘டக்’ என்று பிடுங்கினார்.

தன் கண்ணாடியை, மெதுவாகத் தேடி எடுத்து மாட்டினார்.

அதற்குள் 2 minutes, 15 செகண்ட்ஸ் காலி.

சுமார், 10 செகண்ட்ஸ் உற்றுப் பார்த்தார்.

என்னிடம், டிக்கட்டை திரும்ப கொடுத்துவிட்டு …

 

சாரி, நீங்க உடனே ரயிலில் இருந்து இறங்கி போங்க ..

நீங்க புக் செய்து இருப்பது அடுத்த வருஷம் தீபாவளிக்கு.

October 26th, 2002.

 

30 செக்கண்டில் இருவரும், மூன்று computer களும் தூக்கி எறியப்பட்டன.

 

என் மனைவி என்னிடம் எதுவுமே பேசவில்லை.

வீட்டுக்கு மீண்டும் திரும்பி வர டாக்ஸி பிடித்தேன்.

வண்டியில் ஏறி அமர்ந்த பின், கன்டோன்மென்ட் மணி கடிகாரம் 12 தடவை அடித்தது.

“சனி” – என் கிழமை.

 

அந்த டிரைவர், எங்க போகணும்னு என்னிடம் கேட்டார் …

நான் வாயைத் திறக்கும் முன் …

ஒரு கை, என் முகம் அருகே வந்து

 

எங்கயோ போய்த் தொலை…ங்க என்றது

அந்த இரவின் அமைதி, வீட்டுக்கு வந்த ஆட்டோவால் கிழித்துத் தொங்கவிடப்பட்டது.