அப்போ, நான் கனடா வந்து சுமார் மூன்று மாதம்னு நினைக்கிறேன். வெட்டி ஆபீசர். நைட்டில் பழய client ன் வேலை, பகலில் தூக்கம்.

பையனை school லில் சேர்த்தாச்சு. என் mail க்கு த்தான் school சம்பந்தமா e மெயில் வரும். அப்படி ஒரு நாள் ஒரு mail வந்தது. அது PAC meeting. அதாவது Parents Advisory மீட்டிங்.

PAC Executives are those parents who have chosen to hold an official position within the School committee . மாணவர்கள் சார்ப்பா சில parents school board ல் இருந்து முடிவு எடுக்கலாம். நாம் அந்த பதவியில் இல்லை என்றாலும் parents ஆக அந்த மீட்டிங்குக்கு போய் என்ன, என்ன பேசுகிறார்கள்னு கேட்கலாம்.

சரி, வீட்டில் வெட்டியாதானே இருக்கோம். போய்தான் பார்ப்போம்னு school பக்கம் போனேன்.

அங்க ஒரு ரூமில் already meeting நடந்துட்டு இருந்துச்சு.

நான் போய் ஒரு chair இழுத்து போட்டு கெத்தா உட்கார்ந்தேன். School Principal ஒரு லேடி. சுமார் 15 பேர் இருந்தாங்க. அப்போ principal, இந்த மாசம் என்ன என்ன improvements… செய்யலாம்னு சொல்லி முடிக்கும் முன்..

நான் எழுந்தேன்.. கையில் ஒரு list வச்சு, school லில் இது சரியில்லை, இது இப்படி இருந்தா நல்லா இருக்கும், traffic அதிகமா இருக்கும் காலை மத்திய வேலையில் வண்டிகளை இந்த பக்கமா விட்டு, அந்த பக்கம் வெளிய போக சொல்லுங்கனு ஒரு பெரிய லெக்சர் கொடுத்துட்டு உட்கார்ந்தேன்.

யார் முகத்திலும் ஈ ஆடலை. பேய் அறைந்தது போல் உட்கார்ந்து இருந்தார்கள். எல்லோரும் அவர்களுக்கு உள்ளே ஏதோ பேசினார்கள்.

எனக்கு பசி, side table லில் வச்சு இருந்த டோனட்ஸ், காபி எல்லாம் எடுத்து குடிச்சிட்டு மீண்டும் சவகாசமா வந்து உட்கார்ந்தேன்.

எல்லோரும் அமைதியானார்கள். அப்போது principal ஓக்கே, இனி discussion வேண்டாம். Let’s vote என்றார். ஏதோ ஏதோ படித்தார். அதில் ஊதிய உயர்வு, வேலை நேரம்னு ஏதோ ஏதோ இருந்துச்சு.

எல்லாரும் கைத் தூக்கி ஓட்டு போட்டார்கள். நானும் கை தூக்கி புடிச்சதுக்கு எல்லாம் ஓட்டு போட்டேன்.

எனக்கு ஒரே எறிச்சல்.. அந்த list ல் குழந்தைகள் நலன் பற்றி ஒரே ஒரு ஐட்டம் கூட இல்லை.

எழுந்து நின்றேன்.

Principal…மேடம்…

ஏன், எல்லாமே டீச்சர்களின் நலன் பற்றியே agenda போட்டு பேசுறீங்க. ஏன், உங்களுக்கு பசங்க மேல அக்கரை இல்லையானு கேட்டேன்.

அதுக்கு அவர், இது Teachers general body meeting, நீங்க attend செய்ய வேண்டிய PAC மீட்டிங் அங்க எதிர் ரூமில் நடந்துட்டு இருக்குனு .கை காட்டி

அங்க போங்க என்றார்..

நான் மீண்டும் எழுந்து நின்றேன்.

சாரி, இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம்.

போறேன்.. ஆனா..

Lastly, ஒரே ஒரு கேள்வி ..

நான் போட்ட ஓட்டு செல்லுமா, செல்லாதா?

செல்லாது.

போ… போங்கிறேன்..