தமிழ் தாய் வாழ்த்து:

போன தேர்த்தலில் போது,  இப்ப இருக்கும் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்றார் சீமான். காரணம் அதுவே ஒரு modified version என்றார். இது உண்மைதான். ஆனா அவரே இந்த பாட்டே வேண்டாம், வேற பாட்டை replace செய்வேன் என்பது வேறு கதை.

Original லா,  மனோன்மனீயம் என்பதே ஒரு நாடக book . பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை 1891 ல் தமிழில் எழுதிய முதல் modern நாடக இலக்கியம் நூல் அது. இது Litton பிரபு எழுதிய – The se cret way என்ற புக்கோட புனைவு. அதில் அவர் எழுதிய ஒரு பாட்டுதான் இது. நிறைய பேருக்கு மனோன்மனீயீம் என்பது புலவர் first name – என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இது pre independent india வில் தமிழ்நாடு என்பது எது என்பதை தெளிவாக அவர் பார்வையில் எழுதிய பாடல் தான் அது.

Post independence க்கு அப்புறம் மொழிவாரியா தமிழ் பிரிக்கப்பட்ட பின்பு, தமிழ் நாடு என்றால் என்னனு அதை அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவாறு தற்போதைய இந்தியாவுக்காக edit செய்து கொண்டார்கள். இப்ப அதை மாற்ற நினைக்கிறார்கள்.

இப்படி பார்த்தா தாகூர் எழுதிய தேசிய கீதம் பிரம்மனை துதித்து எழுதிய Bharot Bhagyo Bidhata பாடலின் பகுதியே. போஸ்ட் independence க்கு அப்புறம் அதை மாற்றவில்லை. இதில் Punjab, Sindhu, Gujarat, Maharashtra, Dravid (South India), Orissa, and Bengal, The Vindhya, the Himalayas, the Yamuna, the Ganges அடங்கும். ஆனால் ஒரிஜினல் 5 பத்தியில் Hindus, Buddhists, Sikhs, Jains, Parsees, Muslims, and Christians என்று வரும். அதை தூக்கி விட்டார்கள்.

சொல்லப்போனால், Germany, Iraq, Nepal, Netherlands, Russia, South Africa, Pakistan மற்றும் Afghanistan போன்றவை தேசிய பாடலையே மாற்றி அமைத்த நாடுகள்.

சுமார் 100 + வருடம் முன்பு அவர் எழுதிய தமிழ் நாடு இதுதான்.
அதை Edit செய்ததும், மாற்ற நினைப்பதும் கூட வரலாறுதான்.

Read and take it as it is.

Original Version:

“நீராருங் கடலுடுத்த

நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத்

திகழ் பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த

திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும்

தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல்

அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க

இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும்

படைத்தளித்து துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன்

இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும்

கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே

ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந்

தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே

வாழ்த்துதுமே

வாழ்த்துதுமே

Modified Version:

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!!

வாழ்த்துதுமே!!!”

________________________________

www.sridar.com : http://bit.ly/2rxu0dA