சனியன் யார்?

ஏன் சனியன் என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள்?
சனிப் பெயர்ச்சி என்றால் என்ன? அது ஒருவரை எப்படி வாட்டும் ?
இது உண்மையா ? இல்லை டூபாக்கூரா ?

இதைப் போன்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவு விடை தருமா இல்லையா என்று தெரியாது.
படித்துவிட்டு நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சரி, முதலில் சனியன் பேமிலி பற்றிப் பார்ப்போம்.

சனியனோட அப்பா வேறு யாரும் இல்லை.
நாம், கனடாவில் டெய்லி வருமா வராதான்னு காத்துக் கொண்டு இருக்கும் சூரியன்தான் சனியனோடு Father .

இந்த Father ரோட ஸ்டோரி கொஞ்சம் காம்ப்லெக்ஸ் .
சூரியன், சாயா, மாயா, சந்தியா, சஞ்சனா, யமுனா, அசுவின் குமார்னு, நம்ம உதய சூரியன் கட்சித் தலைவர் குடும்பம் போல, இந்த ஒரிஜினல் சூரியனின் குடும்பமும் பல இடங்களில் பறந்து விரிந்த ஒரு டீசென்ட் பேமிலி.

நோ கமெண்ட்ஸ்.

அதனால், நாம் சனி ஒட்டி வரும் ஸ்டோரி லைன் மட்டும் பார்ப்போம்.

நம்ம சனியின் father is a பிஸி மேன்.
சூரியன் 24 X 7 வேலை பார்ப்பார் என்று எல்லோருக்குமே தெரியும்.
அவர் மனைவி பெரு உஷா தேவி. House Wife.

எப்ப பார்த்தாலும் வேலை வேலைனு, ஊர் ஊரா சுற்றும் சூரியன் கூட குடும்பம் நடத்த அந்தமாவுக்கு விருப்பம் இல்லை.
உஷா தேவியம்மா, முதலில் அன்பா சொல்லி பார்த்துச்சு.

ஹாய்.. சூர்யா.. நீ ரொம்ப அழகு. ஊரே உன்னை மெச்சுது.
ஆனா முதலில் நம்ம குடும்பத்தையும் கொஞ்சம் பாருன்னு எவ்வளவு சொல்லியும், எனக்கு வேலைதான் முக்கியம்னு சூரியன் ஒர்க்கஹாலிக்காக இருந்தார். இதனால், உஷா தேவிக்கும் சூர்யாவுக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை.

புருஷனுக்கு கோவம் அடிக்கடி வந்து செம ஹாட் discussion நடந்து கடைசியில் சூரியன் எரிஞ்சு எரிஞ்சு விழுந்து ஒரு Hot மனஷனாவே மாறிட்டார்.
எப்ப பார்த்தாலும் எரிந்து விழும் கணவனிடம் எந்தப் பொண்டாட்டிதான் குடும்பம் நடத்த புட்டிக்கும்?

அந்தம்மா யோசித்தது.

அந்தாளு கிட்ட டைவேர்ஸ் கேட்டா கடுப்பில் தன்னை எரிச்சு கொன்னேபுடுவான்.
இதில் இருந்து தப்பிக்க ஒரு ஐடியா போட்டுச்சு.
தன்னோட நிழலையே ஒரு பெண்ணாக்கி புடவை கட்டி பொண்டாட்டியா அந்தாளுக்கு மனைவியா நடிக்க வச்சுட்டு நாம் ஓடிவிடலாம்னு திட்டம் போட்டுச்சு.

அதன் படியே தன் நிழலை செட்டப் மனைவியாக்கினார் உஷா தேவி.
அந்த நிழல் பொண்டாட்டி பெயர்தான் சாயா. நிழல் என்பதால் அவர் கருப்பு நிறம்.
ஆனா பார்க்க சாயா, உஷா தேவி போலவே இருப்பார்.

பொண்டாட்டி எந்தக் கலர் புடவை கட்டி இருக்கானு கூடக் கண்டுபிடிக்க தெரியாத புருஷ் தான் சூரியன்.
இந்த ஆள் மாறாட்டம் எப்படியும் அந்த மனுஷனுக்குத் தெரியாது.

அதனால், சாயாவுக்கு ட்ரைனிங் கொடுத்தார் உஷாதேவி.
அதாவது, சூரியன் வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீரில் பஞ்சை நினைத்து காதில் வச்சுக்கோ.

அந்தாளு, என்ன திட்டினாலும் தலையை ஆட்டு.
பஞ்சைத் தண்ணீரில் நினைச்சு வைக்க மட்டும் மறந்துடாத.
இல்லைனா, காதே பாதிக்கும்.

அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு நிலவு மாதிரி ஒரு கூல் buddy புருஷனா அமையவேண்டுமென்று புலம்பிகிட்டே தவம் செய்ய போயிடிச்சு அந்தம்மா.

சாயா, நிழல் என்பதால் கருப்பு நிறம்.
But ஷி is a Black Beauty.

இந்த மாயை wife சாயா பற்றித்தான் பாபா படத்தில் ரஜினி பாடி இருப்பார்.

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி

பட்டும் படாமலே, தொட்டும் தொடாமலே…

வெயிட் …

வேலை வேலைனு பிசியா இருந்த சூரியனுக்கு, தன் பொண்டாட்டி, வீட்டை விட்டுப் போனதே தெரியாது. வேலை வேலைனு இருந்தா, வீட்டில் என்னைக்கு recycle bin வைக்கணும், என்னைக்கு garbage bin வைக்கணும், பால் இருக்கா..இல்லையா, பொண்டாட்டிக்கு என்னைக்கு பர்த்டே போன்றவை ஞாபகம் இருக்குமா என்ன?

சூரியன் சாயாவை தன்னுடைய மனைவி உஷா என்று திட்டிகிட்டேயே வாழ்க்கையை ஓட்டினார். அந்தம்மாவும் பஞ்சைத் தண்ணீரில் தொட்டு வச்சி வாழ்க்கையை ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

ரைட். நீங்க இப்ப என்ன நடக்கும்னு நினைக்கிறீர்களோ அது ஒரு நாள் நடந்துச்சு.

ஒரு நாள் நல்ல மழை கொட்டோ கொட்டுனு கொட்ட, வீட்டுக்கு கூலாக வந்த சூரியன் சாயாவை கட்டிலில் சாய்த்தார்.

இட்ஸ் a மெடிக்கல் miracle.

முதல் முறையா சூரியனுக்கும், செட்டப் செல்லம்மா சாயா தேவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைதான் நம்ம சனி, Male பேபி.

இவர்தான் இந்தக் கதையின் ஹீரோ.

Infact இதே miracle அடுத்த மழையின் போதும் நடந்தது.

Female பேபி பிறந்தது. பெயர் தபதி.

இரண்டு குழந்தைகளுமே கருப்பு நிறம்.

நான் முன்னாடியே சொன்னது மாதிரி, சன் பேமிலி ஒரு காம்ப்லெஸ் family.

ஒரு சின்ன பிளாஷ் back…

சூரியனுக்கும், சரண்யு எனும் லேடிக்கும் இந்த மேட்டர் நடக்கும் முன்னே ஒரு லிங்க் இருந்தது.
அது ஒருவகை பேக்கரி டீலிங்.அந்தம்மா செம சிவப்பு. அதில் பிறந்த குழந்தைகள், எல்லாமே சிவப்பு.

அதில் ஒரு குழந்தைதான் நம்ம எமன். எமனோடு சிஸ்டர் யமுனா.
இவங்க இரண்டு பேரும் அதே வீட்டில்தான் வளர்ந்தார்கள்.

 

குட்டி பாப்பா சனி தான் ஒரு foster மதர் கிட்ட வளர்வதே தெரியாமல் வளர்ந்தான்.
யமன், யமுனா கூடவே விளையாடி வளர ஆரம்பித்தான் நம்ம கதையின் ஹீரோ சனி.

அப்போதுதான், ஒரு நாள் நடக்கக் கூடாத ஒன்று நடந்தது.

அப்போது அவன் சிறு குழந்தை.

சனியைக் குளிப்பாட்ட பாத் ரூம் எடுத்துச் சென்றார் சாயா.
தன் முண்டா பனியினை கழட்டும் போது தன் நிறத்தைக் கண்ணாடியில் சனி பார்த்துவிட்டான்.

உடனே கலர் காம்ப்லெஸ் வந்துவிட்டது.
தன், அம்மா கிட்ட ஏம்மா என் அண்ணன் யமன், அக்கா யமுனா மட்டும் காலரா இருக்காங்க.

நான் மட்டும் எப்படி கருப்பா பிறந்தேன் என்று கேள்வி கேட்டான்.
சாயா பதில் சொல்லாமல் டாபிக் டைவர்ட் செய்தார்.

 

சனியின் இந்தக் கேள்வி நச்சு தாங்க முடியவில்லை.
அவனுக்குப் பால் கொடுக்கச் சற்று நேரம் ஆனது. கேள்விக்குப் பதிலும் இல்லை.
பசிக்கு, அம்மா பாலும் உடனே கொடுக்கவில்லை.

கடுப்பில், தான் அம்மாவையே எட்டி உதைத்தான் சனி.
அதுவரை, பொறுமையா இருந்த சாயா…ஏய் சனி …

நான் உன் அம்மா ..நீ என்னையே எட்டி உதைக்கிறாயா…
நான் யார் தெரியுமா? இப்ப உண்மையைச் சொல்கிறேன்.

நான்தான் உன் அம்மாவின் செட்டப். உங்கப்பாவோட செகண்ட் கீப். இது அந்தாளுக்கே தெரியாது.
நீ கருப்பா பிறக்க நான் காரணம் இல்லை. Genitically, நான் கலர் Recessive. கருப்பா இருந்தாலும் நீ கருப்பா பிறக்க எப்ப பார்த்தாலும் எரிந்து விழும் உன் அப்பாதான் காரணம்னு சாயா சொல்ல …

இதைக் கேட்ட சனி, நொறுங்கிப் போகிறான்.

சாயா, பேச ஆரம்பித்தாள் ..

நானே இந்த வாழ்க்கையை ஒரு தியாகமா அந்த மனுஷன்கிட்ட திட்டு வாங்கிட்டு ஒட்டிக்கிட்டு இருக்கேன்.
நீ என்னையே உதைக்கிறாயா ? உனக்கு என்னா அதும்பு ?
என்னை எட்டி உதைத்த உன்னோட ஒரு கால் நொண்டியாக போகட்டும்னு சாபம் விடுகிறார்.

இதைக் கேட்ட, சனி அந்நியன் படத்தில் வரும் விக்ரம் போலக் கண்ணாடி முன் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கிறான்.
சனிக்கு, ஒரு கால் உடனே நொண்டியாகிறது.

இழுத்து இழுத்து லொடுக்கு பாண்டி போல் நடக்க ஆரம்பித்தான்.

அவன், வீட்டை விட்டு வெளியேறி நேராகக் காசிக்கு நொண்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

அன்னைக்கு முடிவு செய்தான்.
இது எல்லாத்துக்கும் என் அப்பன்தான் காரணம்.

அந்தாள் ஒழுக்கமா இருந்து இருந்தா, என் அம்மா வூட்டை விட்டு ஓடி இருக்காது.
செட்டப் அம்மாவுக்கு, என்னைப் பிறக்க வச்சு அதுவும் கருப்பா மாத்தின என் அப்பாதான் இனி என் வாழ் நாள் எதிரி.

சூரியன் என்றால் பெரிய கொம்பா? ஏப்ப பார்த்தாலும் தருதலையா சுத்தி நம்ம குடும்பத்தையே நாசம் செஞ்சிட்டியே தகப்பானு கடுப்பில் காசி வந்து சேர்ந்தான். காசியில் சிவ பெருமானிடம் ஒரு appointment கேட்டான்.

அந்த மீட்டிங்கில் சனி கர்ஜித்தான்.
டியர் சிவா, நான் பட்டது போதும். இனியும் பட முடியாது.
என் அப்பாவோடு அன்பு எனக்கு இல்லை. என்னையும் கருப்பா படைசிட்டார்.
எனக்கு ஒத்த காலும் காலி. இப்ப நான் நொண்டி.

உனக்கு நான் தவம் இருந்துதான் appointment வாங்கி இருக்கேன்.
நான் ஒரு வஞ்சிக்கப்பட்ட foster son.

நான் எங்கப்பாவை ஒழிக்கணும். அதனால் அவர் கண்ட்ரோலில் இருக்கும் முக்கிய 9 பாட்னர்களில் என்னையும் ஒரு பார்ட்னராக சூரியனிடம் சொல்லி சேர்த்துவிடு. நான், வில்லன் என்பது சூரியனுக்கும், மீதி உள்ள எட்டு பேருக்கும் தெரியக் கூடாது.

நீ எனக்கு ஒரு பவர் கொடு. அது என்னன்னா, நான் எந்த பார்ட்னரை பார்த்தாலும் அவன் வீக் ஆகி நான் சொல்றமாதிரி கேட்கணும்.
நான், யாரையும் கொல்ல மாட்டேன். ஆனா அணு அணுவா டார்ச்சர் செய்வேன். அந்த டார்ச்சரில், சூரியன் கம்பெனியே ஆடணும்.

நான் இதுவரை பட்ட துன்பத்தை, நான் கூட இருந்தே திருப்பி கொடுக்கனும்….பிலீஸ்ன்னு கேட்டு சிவனிடம் வரம் வாங்கிக் கொள்கிறான் சனி.

வரம் கொடுக்கும் சிவன், டேய் சனி நீ வெறும் சனியா போனா எல்லாருக்கும் சந்தேகம் வரும்.
உன் அப்பனும் சரியில்லை, அம்மாவும் சரியில்லை..

வேணும்ன்னா, என் பேமிலி நேம் வச்சிக்கோ.. Easwaran ..
கெத்தா, நல்லவனா மாணிக்கம் ரஜினியா போய்ச் சேர்.

நேரம் வரும் போது, சனீஸ்வரனா உன் வேலையை காமினு ..
அனுப்பி வச்ச சனிதான் இந்த மாதம் 19 ஆம் தேதி ஒரு பார்ட்னரை முடிச்சிட்டு அடுத்த பார்ட்னரை டார்ச்சர் செய்ய சனீஸ்வரனா வந்து இருக்கிறார்.

இது ஜஸ்ட் இன்டெர்வல் ..

இதன் இரண்டாம் பாகம் ஒரு சயின்ஸ் fiction.

தொடரும்.