வரைவது இன்று நேற்று அல்ல..
சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது.
குரங்கு மனிதனாக மாறிய போது அது முதலில் பழகியது பேசவோ எழுதவோ அல்ல ..
பாறைகளில் ..ஓவியம் வரைய.
ஓவியமே எழுத்துக்களின் தாய். அதுவே பேச்சின் தந்தை.
மொழி எனும் குழந்தை ஓவியத்தால் பிறந்தது.
நீங்கள் ஒரு கம்ப்ளீட் மனிதனாக மாறவேண்டும் என்றால் உங்களுக்கு வரையத் தெரிந்து இருக்க வேண்டும்.
இது அபத்தமாகத் தெரியலாம்.
ஒருவரிடம், உங்களால் பேசியோ, எழுதியோ ஒன்றைப் புரிய வைக்க முடியவில்லை என்றால் நீங்கள் அதை வரைந்துசொல்லலாம்.
எழுத்து, பேச்சை விட விஷுவல் வரைபடத்தின் பலமே அலாதி.
Broader Picture of an Issue வை புரிந்து கொள்ள அதன் பிம்பம் முக்கியம்.
ஒன்றின் பிம்பத்தை அறிய அதன் Broader Picture நமக்குத் தெரிய வேண்டும்.
முதன் முதலில் ஒரு முகத்தை வரையும் போதுதான் அந்த Broader Picture ஐ எப்படிப் புரிந்து கொள்ளாவது என்று புரிந்தது.
முதலில் நான் வரைய ஆசைப்பட்டது
அப்போது எல்லாம் சினிமா நடிகையின் நல்ல புகைப்படம் வேண்டும் என்றால் நீங்க வாங்க வேண்டிய புத்தகம் சரோஜாதேவி இல்லை…ஸ்டார் டஸ்ட்.
ஸ்டார் Dust ஒரு வட இந்திய சினிமா இதழ். அதன் பேப்பர் மற்றும் பிரிண்ட் Qulaity க்கு நிகரான இதழ் தமிழில் அப்போதுகிடையாது. அதற்கும் பெட்டர் என்றால் டெபோனர்.
ரயில்வே நிலையத்தில் அந்தப் புத்தகத்தை கிளிப் செய்து வைத்து இருப்பார்கள்.
மெடிக்கல் காலேஜில் ஹியூமன் அனாடமி படிக்க ஆசைப்பட்டு முடியாத போனவர்களுக்கான பைபிள் அது.
நான் வரைந்த முதல் முதுகு படம் அந்தப் பைபிளில் இருந்து காப்பி எடுத்து வரைந்தது.
அந்த முதுகு ஓவியத்துக்கு நான் வைத்த பெயர் “பரிசுத்த ஆவி.
சொல்கிறேன் ..
கலை இரண்டு வகைப்படும்.
1. எது தேவை இல்லையோ அதை நீக்கி தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளவது முதல் வகை.
2. எது தேவையோ அதை மட்டும் வைத்துவிட்டு மீதியை நீக்குவது இரண்டாம் வகை.
ஒரு கல்லில் தேவை இல்லாததை நீக்கினால் சிலை.
ஒரு வெள்ளைத் தாளில் தேவையானதை வரைந்தால் ஓவியம்.
ஓவியம் வரையத் தெரிந்தால் சிற்பக்கலை எளிது.
தூங்கப் பழகிவிட்டால் போர்த்திக் கொள்ள பழகிவிடலாம்.
முதல் படத்தை debonair ல் இருந்து வரைந்ததால் அடுத்து ஸ்டார் டஸ்ட் எடுக்கும் துணிவை அந்தப் பைபிள் தந்தது.
வெள்ளைத் தாளில் கருப்பு தடவி, முதுகை மட்டும் வெள்ளையாக வரைந்தால் இது முதல் category ஓவியம்.
அடுத்து நான் வரைய முனைந்தது ..இரண்டாவது category ஓவியம்.
ஸ்டார் டஸ்ட்னின் சென்டர் spread ல் அந்த வாரம் ஜூஹி சாவ்லா இருந்தார்.
அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்து முதல் முகத்தை வரைய ஆரம்பித்தேன்.
ஆரம்பமே பிரச்சனை ..எனக்கு எங்கு ஓவியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலேயே குழப்பம்.
ஓவியங்கள்தோ, முறுகலாகத் தோசை போன்றது.
அதன் கடைசி வடிவம் முதலில் மாவை எங்கு ஊற்றி, எப்படி சூத்தினீர்கள் என்பதில் ஆரம்பித்து அதை எங்குநிறுத்தினீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும்.
ஜூஹி சாவ்லாவை பல முறை சூடான தோசைக் கல்லில் ஊற்றி ஊற்றி சுத்தினேன்.
பல காகிதங்கள் கரைந்து நாயர் கடை டீயில் கரைந்தன.
சுமார் ஒரு மாதம் முயன்று முயன்று கடைசியில் ஓவியம் வந்தது.
ஆனால் நான் வரைந்தது சரியா இல்லை இன்னும் சரி செய்யவேண்டுமா என்று தெரியவில்லை.
இரவு வரைந்துவிட்டு இத்தோடு முடிந்தது என்று படுத்துவிட்டு காலையில் பார்த்தால் பல தவறுகள் தெரியும்.
அதைச் சரி செய்ய மீண்டும் அதில் கையை வைத்துக் கெடுத்துவிடுவேன்.
எனக்கு ஓவியத்தை எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்தது.
ஆனால், அதை எங்கு எப்போது முடிக்க வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.
மீண்டும் பல காகிதங்கள் நாயர் டீக்கடையில் கரைந்து கடைசியில் அந்தச் சூட்சமம் தெரிந்தது.
ஒரு ஓவியத்தின் கண்கள் எப்போது நம்மோடு பேச ஆரம்பிக்கிறதோ அப்போது வரைவதை நிறுத்தி விடலாம்.
இதைத் தெரிந்து கொள்ள எனக்கு இரண்டு மாதம் ஆகியது.
எத்தனையோ காகிதங்கள் கிழிக்கப்பட்டன.
காகிதத்தில் முக்கி முக்கி டீ குடித்ததாதல் தலையில் முதன் முதலில் ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்த்தது.
ஜூஹி சாவ்லா எனக்குக் கற்றுக்கொடுத்தது ஏராளம்.
அதனால்தான் பழங்காலத்தில் சிலைகளை வடித்தப்பின் கடைசியாகக் கண்களை திறப்பார்கள்.
ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிட்டு பேனா முள்ளை உடைப்பது போன்று டக் என்று நிறுத்தவேண்டும்.
முற்றும்.
இதைப் போட தெரிந்தவனுக்குத்தான் ஆரம்பிக்கத் தெரியும்.
If you want a happy ending, that depends, of course, on where you stop your story.
இந்த ஜூஹி சாவ்லா படத்தில் இருந்துதான் இந்தக் கதை ஆரம்பிக்கப் போகிறது என்று எனக்கே அன்று தெரியாது..
காரணம், இந்த படத்தைத்தான் முதன் முதலில் சேட்டம்மாவிடம் காட்டினேன்.
அது நடந்தது, இந்த படத்திற்கு முற்றும் போட்டு இரண்டு வருடங்களுக்குப் பின்னால்.
அந்த இடைப்பட்ட காலத்தில் …
தொடரும்
கண்கள் திறப்பு
காட்சிகளின் வார்ப்பு
ஓவியத்தின் சிறப்பு
காந்த அலைகள் ஈர்ப்பு
உங்கள் எழுத்தின் தனி சிறப்பு
மிக மிக அழகான ஓவியம்..
Awaiting for part 4.
இந்த ஒரு பதிவையே பல பதிவாய் எழுதலாம். அவுளவு மேட்டர்!ஆஸம் ஆஸம்
“பைபிளிலிருந்து” (DB-Nair) பரிசுத்த ஆவியின் (முதலோவியம் – முதுகோவியம்!) பரிச்சயம் முடிந்து, நட்சத்திரத் துகள் (Star-Dust) துணைகொண்டு அன்றைய திரைநட்சத்திரத்தின் முகத்தை (முதுகை அல்ல!) “தத்ரூபமாக” அழகோவியமாக வரைந்து கண்திறந்த காட்சி – காட்ட வேண்டியவர்களுக்கு (SP) காட்டியும் ஆகிவிட்டது!
அற்புதம்! அதியற்புதம்!!
அப்புறம்? அதற்கப்புறம்??
Juhi looks stunning. It’s going to be hard for me to enjoy other artists…U r truly talented..one of the rarest moments where I’m speechless.????For decades my father was the only artist who impressed me the most. Kudos Sridar Elumalai
Sridar you are an epic talent.. juhi looks stunning…. Hats off!! And special bow down to your writing!
பிரமாதமா போய்கிட்டிருக்கு..ஆவலைத்தூண்டும் எழுத்தோவியம் மற்றும் ஓவியம்..அருமை.
Gripping narration. Sema ????????
Beautiful!
Waiting for SPSM part-4 ! Sridar Elumalai bro
அழகான ஓவியம்
அபாரமான எழுத்து
இனிதே தொடரட்டும்!!!
You have brought Juhi to our lives ..Adhe oru kann light aagha chinnadhu …oru kurumbu sirippu ..little big nostrils .. curly hair near ears ..
Filmfare and Star dust were my dream magazines those days …
Talents are not created but born geniusses ..utmost concentration and paying attention to intricate details ..awesome Sridar ….
When we were with Sugar corporation ..Uganda ..Juhi got married to Jay Mehta President of that company and she used to visit sites …and we senior people have attended many dinner with her and admired Punjabi country side beauty in her .you have brought the real essence of exact replica of her beauty and stature …
Wonderful! As usual the way you have moved this story is amazing. So gripping! Loved the way you have differentiated the two types of கலை. And Juhi’s eyes in your painting, is so expressive. Amazing! Yeh dil maange more… looking forward to Part 4….
SPSM—மசககு(மண் சட்டியும் கருவாட்டுக் குழம்பும்!)
Stunning artwork! Superb!
மொழியின் சிறப்பா,மொழியை கையாளுகின்ற லாவகமா,இல்லை சொல்லுகிற விஷயத்தை பொறுத்ததா ஒரு கட்டுரை சுவாரசியமாக ஆகுவது?.எல்லாம் இருந்தால்தான் ஒரு படைப்பு அழகாகும் என்பதினை உங்களின் படைப்புகளின் மூலம் அறிந்தேன்,புகைப் படங்கள் உட்பட. படைப்புகள் தன்னைத் தானே படைத்துக் கொள்கின்றன!. நீங்கள் அதன் கருவி.படைப்புகள் கருவிகளை படைக்கின்றன. அழகான கருவி நீங்கள்.
The Prelude to your Passion is multi dimensional !!! Sridar …
ஓவியம் இரண்டாம் வகையின் முதல்நிலை!
//எது தேவையோ அதைமட்டும் வரைந்துவிட்டுத் தேவையில்லாததைத் தொடாமலே விட்டுவிடுவது//!
எழுத்துப் புதுவகை!
யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எல்லோரையும் கவரும் வண்ணம் எழுதுவது!
சின்ன மடாதிபதிக்குப் பயிற்சியளிப்பதில் மட்டுமல்ல – செம்மையான காவியம் படைப்பதிலும் – குருஜி குருஜிதான்!
Stunning picture of Miss India Juhi. You are such a talented young artist.
Azagu oviyum
Just read all the 3 parts Sridar.. only you can narrate any story with so much expectations with more twists and turns yet so interesting!!. I am one among your big fan for your story telling skill..next to Vikatan (old) you always impress me all the time..
looking forward to the rest of the “Settukku Pin Sasikku Mun” story..????
I’m speechless after seeing the painting.. mind blowing art… And I can surely say you are one of the most talented writer.. The way you narrate and express your thoughts are simply superb..
Thanks all… Part 4 Releasing tomorrow.
12 Noon.
அட்டகாசம் ஸ்ரீதர்
நிஜ ஜூஹி யைவிட வரைந்த ஜூஹி சூப்பர்
அக்கம் பக்கம் பார்த்து நடுப்பக்கம் பார்த்த “debonair”
எல்லோருக்கும் தெரிந்த “சரோஜாதேவி” னு சொல்லிவிட்டு
கலை இரண்டு வகைப்படும் என்ற பெரிய விஷயத்தையும் சொல்றீங்க
ரொம்ப இன்டெரெஸ்டிங்கா போயிட்டுருக்கு, இந்த கதை முடியக்கூடாது உங்கள் எழுத்து நடைக்காக .
So my guess was correct.. it’s Juhi chawla.. nice art.. interesting narration
Amazing talent dear friend!
Kudos to your wonderful narration and art!!
கண்கள் பேசும், can see in this painting & writing,! Superb!
Awesome!!
Super நச். அடிபொழி. .உண்மையிலே Super .கருத்துக்கே இடமில்ல
இத பார்த்தா யரோமாதிரி இருக்கு யாருனுதான் ஞாபகமில்லை
வரும்….கண்டிப்பா வரும்
சப்பாத்தி சாப்பிடும் வட இந்தியர்களுக்கு இட்லி மீதும் , இட்லி சாப்பிடும் தமிழர்களுக்கு சப்பாத்தி மீதும் எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது நல்ல இட்லிக்கு எப்படி சரியான மாவுக்கலவை , அதன் நொதி நிலை முக்கியமோ சப்பாத்திக்கு மாவை நன்றாக பிசைவது முக்கியம். நம்மில் பெரும்பாலோர் வறட்டி போன்று எண்ணெயில் தீய்த்து கொடுக்கும் கோணல் மாணலான ஒரு கோதுமை பண்டத்தைதான் சப்பாத்தி என்று சாப்பிட்டு வருகிறோம். நல்ல சப்பாத்தி நல்ல வட்ட வடிவுடன் பூ போன்று உப்பி வரவேண்டும் .அதற்கு முக்கியம் மாவை நன்றாக பிசைவது. நமது ஸ்ரீதர் அந்த வகையில் இதுவரை மாவை நன்றாக பிசைந்திருக்கிறார். ஒரு நல்ல சப்பாத்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்கிறோம்.
Part 4 Released.
Drawing is the secret of my China trips. If I get more “likes” , I will tell you the secret what I know. ????